அண்மைய பதிவுகள்

வேட்டைக்காரன் - என்னோடு என் நண்பர்களின் கருத்து.

0 comments
நான், எனது நண்பர்கள் 6 பேருடன் சென்ற, ஞாயிறில் வேட்டைக்காரன் பார்க்க சென்றிருந்தோம். படத்தை பற்றி நாங்கள் விவாதித்ததில் சில.
(இது கண்டிப்பாய் விமர்சனம் அல்ல).





முதல் காட்சியில் விஜயின் ரோல் மாடல் தேவராஜ் .பி.எஸ் அறிமுகம். - ஒரு ஹீரோவின் ரோல் மாடலை இன்னும் கொஞ்சம் கம்பீரமாய் காட்டியிருக்கலாம். முதல் காட்சியிலேயே ஒரு குடிகாரன் போல காட்டி பின்னர் அவரை நல்லவர் என்று காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை.ஒருவேளை ஹீரோவின் into பாதிக்கும் என நினைத்தார்களோ என்னவோ.

ஸ்ரீ ஹரி பொருத்தமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் மனதில் ஓட்ட மறுக்கிறது. பிரகாஷ் ராஜ் போல ஒருவர் இருந்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

விஜய் அறிமுகம் - தேவராஜை தவிர படத்தில் வரும் எல்லா போலீசுமே மோசமானவர்கள் போல காட்டியிருப்பது கொஞ்சம் அபத்தமாய் தெரிகிறது. தப்பு பண்றது போலீசா இருந்தாலும் ஹீரோ தட்டி கேப்பார்ங்கறதுக்காக ஓபனிங் சீன்ல ஒரு போலீஸ் தண்ணி அடித்து விட்டு ஜீப் ஓட்டுவது போல காட்டியிருப்பது தேவையா என்று தோன்றுகிறது.

விஜய் ஓபனிங் சீனில் அடக்கி வாசித்திருக்கிறார். இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. வில்லு படத்தில் பாட்டில் ஒரு intro-வும், பைட்- டில் ஒரு intro-வும் கொடுத்திருப்பார்கள். இந்த படத்தில் கொஞ்சம் மாற்றி, சண்டையை தவிர்த்து, பாட்டையே பைட் ஆக மாற்றி விட்டார்கள். பாட்டை கேட்டே ஓடி விடுவது போல காட்டியிருப்பது கொஞ்சம் காமெடி தான்.


சிமென்ட் போஸ்ட்-டை கையால் உடைக்கும் போது அதிர்வது போல தெரிய வேண்டும் என மெனக்கெட்டிருப்பார்கள் போல. கிராபிக்ஸ் நன்றாய் தெரிகிறது.
ரயிலில் அனுஷ்கா வை பார்க்கும்போது, கையை இடுப்பில் வைத்துக்கொண்டு விஜய் பார்ப்பது அழகு. பேமிலி ப்ளான்னிங் பண்ணிட்டோம் என்று சொல்வது செம ரகளை.

கல்லூரியில் உமாவுக்காக பரிந்து லெக்சரருக்கே புத்தி சொல்வது ரொம்ப ரொம்ப ஓவர். அதிலும், எல்லா காட்சிகளிலும் சட்டையில் பட்டனே போடாமல் இருப்பது அவர் காலேஜ் ஸ்டூடன்ட் போல தெரியவில்லை. சாதாரண காலேஜ் ஸ்டூடன்ட் போல காட்டி பின்னர் விஸ்வரூபம் எடுப்பது போல காட்டியிருந்தால் பாட்ஷா அளவுக்கு கூட கொண்டு போயிருக்கலாம்.


நாயகியின் பாட்டிக்கு உதவுவது, பாட்டி மனசில் இடம் பிடிப்பது பின் கொஞ்சம் கொஞ்சமாய் பேத்தி மனதில் இடம் பிடிப்பது... வ் ஹ் கொட்டாவி வருகிறது.
காதல் சீன்களிலும், காமெடி சீன்களிலும் விஜயின் முக பாவம் சூப்பர். ஆனால் கண்ணை சிமிட்டி சிமிட்டி காமெடி பண்ணுவது, அடிக்கடி பார்ப்பது போல இருப்பதால் கொஞ்சம் அலுப்பு.


கட்சிகளில், அனுஷ்கா விஜயை விட உயரமாய் இருக்கிறார். அழகுதான் என்றாலும், கொஞ்சம் முதிர்ச்சியாய் தெரிகிறார் (அருந்ததி பார்த்த பாதிப்போ என்னவோ). டி.வி ப்ரோக்ராம்களில் சொல்வது போல "கெமிஸ்ட்ரி" அந்த அளவுக்கு எடுபடவில்லை என்று தோன்றுகிறது.

விஜயை, என்கவுண்டர் செய்ய துரத்தும் போது, குண்டுகள் துளைக்காமல் விஜய் தப்பிப்பது ஹீரோயிசம் என்று நினைத்தால், விஜயை காப்பாற்ற தேவராஜ் அனுப்பிய போலீஸ் குறி தவறி சுட்டார்கள் எனும்போது புஸ் - என்று ஆகி விடுகிறது.

அருவியில் இருந்து குதிப்பது... ஓவர்தான் என்றாலும், இன்னும் கொஞ்சம் தத்ரூபமாய் காட்டியிருக்கலாமோ. சண்டைக் காட்சிகளில் தாவுவது போல கை கால்களை விறைப்பாக வைத்து கொள்கிறார். இப்படி குதித்தால் கண்டிப்பாய் கால் உடைவது நிச்சயம். ஆனால் ஹீரோ ஆச்சே. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. வில்லன் - சலீம் கௌஸ். ரகுவரனுக்கு நல்ல போட்டியாய் வருவார் என்று சொல்லப்பட்டவர். எனக்கு தெரிந்து "வெற்றி விழா" படத்திலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி பேசுகிறார்.


பின்பாதியில், என்னவோ செய்யப்போகிறார் என்றால் விஜயை கூட்டிப்போய் சுற்றுலா காட்டுகிறார். பயமுறுத்துகிறாராம்.


வில்லனை எதிர்க்க சாயாஜி ஷிண்டே- வை புத்திசாலித்தனமாய் வில்லன் பக்கம் திருப்பும் காட்சிகள் விறு விறுப்பாய் தொடங்குகிறது. இரண்டு காட்சிகளோடு சரி.பின்னர் வழக்கம் போல காதல், நட்பு, பாடல் காட்சிகள் ஸ்பீட் ப்ரேக் போடுகிறது. பின் பாதியில் அதை குறைத்திருக்கலாம்.

ஹீரோவை
பலி வாங்க நண்பனை கொல்வதும், நாயகியை கடத்துவதும், ஆதரப்பழசான டெக்னிக். வேறு எதாவது புத்திசாலிதனமாய் யோசித்திருக்கலாம்.


ரெண்டு
வில்லன்களை அழிப்பதும் கொஞ்சம் மொக்கையாய் தெரிகிறது. நண்பனை கொன்ற குரூரத்தை கண்களை தேக்கி, இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டியிருக்கலாம்(திருப்பாச்சி, போக்கிரி போல).

விஜயின் டான்ஸ் காட்சிகள் கொஞ்சம் குறைச்சல்தான். "என் உச்சி மண்டைல " பாட்டில் டான்ஸ் சூப்பர்.


மொத்தத்தில், விஜயின் மாஸ் காட்டுவதற்கு மட்டுமே வந்துள்ளது வேட்டைக்காரன்.


விஜய் ரசிகர்கள் ரசித்து பார்க்கலாம்.




திருமலை நாயக்கர் மஹாலும், சென்னை மத்திய சிறையும்.

0 comments


மன்னர் திருமலை நாயக்கர் மஹாலையும், சென்னை சென்ட்ரல் ஜெயிலையும் உட்கார்ந்த இடத்துல இருந்தே சுத்திப்பாக்கலாம்.

குறிப்பிட்ட இடங்களை மட்டும் கூகுல் ஸ்ட்ரீட் வ்யூ மாதிரி சுத்திப்பாக்குற அனுபவம் இந்த தளத்துக்கு நீங்க போனீங்கன்னா கிடைக்கும்.



சென்னை மத்திய சிறைச்சாலையை சுத்திப்பாக்குற அனுபவம் ரொம்ப நல்லாருக்கு. உண்மைலேயே ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க.

நீங்களும் ஒரு விசிட் அடிங்களேன்.

சென்னை மத்திய சிறைச்சாலை செல்ல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்னை சங்கமம் செல்ல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்னையில் உள்ள அமெரிக்கன் சர்ச் செல்ல இங்கு க்ளிக் செய்யுங்கள்.






xlsx, docx போன்ற பைல்களை, xls, doc பைல்களாக மாற்ற...

0 comments
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 - இல் உருவாக்கப்படும், எக்செல் மற்றும் வேர்ட் பைல்கள் xlsx, docx போன்ற எக்ஸ்டென்சன் கொண்டிருக்கும் இந்த பைல்களை பழைய எக்செல் பதிப்புகளால் திறக்க இயலாது.

ஏனெனில், இந்த பைல்கள், Open XML Standards ( Open XML Standards பற்றி தெரிந்துகொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள் ) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இவற்றை நம் பழைய எக்செல் மற்றும் வேர்ட் பதிப்புகள் கொண்டு திறக்க இவற்றை, அதற்குரிய பார்மட்டில் மாற்ற இந்த தளம் உதவுகிறது. சில நொடிகளில் நமக்கு மாற்றி கொடுத்து விடுகிறது. நாம் தனியாக எந்த மென்பொருளும் நிறுவ வேண்டியதில்லை.

பார்மட் மாற்றம் செய்ய இந்த தளத்துக்கு செல்லவும்.



மேலும், நமது பைலை கீழ் காணும் எந்த வடிவுக்கும் மாற்ற முடியும்.

  • csv – Comma Separated Values file
  • doc – Microsoft Word Doc
  • html – Hypertext Markup Language
  • mdb – Microsoft Access Database
  • ods – OpenDocument spreadsheet
  • pdf – Portable Document Format
  • rtf – Rich text format
  • xls – Microsoft Excel Spreadsheet
  • xml – Extensible Markup language

உங்கள் நண்பனுக்கு வாக்களியுங்களேன்.



போட்டோ ஷாப்பில் பிரதிபலிப்பு விளைவு (Reflection effect) கொண்டு வருவது எப்படி ?

3 comments

(How to Create Reflection effect in photoshop ?)


போட்டோ ஷாப் - பில் டிசைன் செய்யும்போது, சில நேரங்களில் பிம்பம் நீரில் தெரிவது போல கொண்டுவர வேண்டியிருக்கும். அது எப்படி கொண்டு வருவது என பார்ப்போம். உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த பாகம் தேவையோ, அதை பெண் தூளால் கட் செய்து கொள்ளுங்கள். நான் கீழே கொடுத்திருக்கும் படத்தை எடுத்துள்ளேன்.




இப்போது மெனுவில், இமேஜ் (image) என்பதன் கீழ் இமேஜ் சைஸ் (image size..) எவ்வளவு என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.






பின்னர்
பைல் (file) மெனுவுக்கு சென்று, புதிய (New) பைல் ஒன்றை திறங்கள். அதன் அளவு, முந்தைய இமேஜ் அளவை விட உயரத்தில் (Height) இரு மடங்காக இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள். (இந்த எடுத்துக்காட்டுக்கு தேவையானபடி தேர்வு செய்துள்ளேன்).



புதிய பைலில், முந்தைய பைல் லேயரை சேருங்கள்.






பின்னர் அதே போல டூப்ளிகேட் (duplicate layer) லேயர் உருவாக்குங்கள். பின்னர் கண்ட்ரோல் + T (Control + T) அழுத்தி, பின்னர் ரைட் க்ளிக் செய்து, flip Vertical என்பதை தேர்வு செய்யுங்கள். (பக்கவாட்டில், பிம்பம் வேண்டுமெனில், flip vertical தேர்வு செய்யுங்கள்).








படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இரண்டையும், தேவையானபடி அமைத்து கொள்ளுங்கள். பின்னர், லேயர் தேர்வு செய்து, கீழே, Add Vector Mask என்பதை அழுத்துங்கள்.






இப்போது, கீழே உள்ளது போல உங்களுக்கு க்ரியேட் ஆகியிருக்கும். அதில் புதிதாய் க்ரியேட் ஆன Vector mask layer மீது க்ளிக் செய்து விட்டு, டூல் பாரில் இருக்கும், கிராடியன்ட் (Gradient tool) டூலை தேர்ந்தெடுங்கள்.



படத்தில்
உள்ளது போல் தேர்வாகியுள்ளதா என சரி பார்த்து கொள்ளுங்கள்.



இப்போது, லேயர் மீது தேவைப்படி அப்ளை (apply) செய்யுங்கள். (எடுத்துக்காட்டில், கீழிருந்து மேலாக அப்ளை செய்துள்ளேன்.)



உங்கள்
படம், அழகான காட்சியாய் மாறியிருக்கும்.




ஆரக்கிள் பாடங்கள் - பாடம் - 6 - (தகவல் நிபந்தனைகள்) - கன்ஸ்ட்ரைன்ட்ஸ்.

0 comments
கன்ஸ்ட்ரைன்ட்ஸ் (Constraints) என்பது, ஒரு டேபிளில் தகவல்களை, பெறவோ, மாற்றவோ, நீக்கவோ செய்யும்போது தகவல்களின் ஒருமைப்பாடு (Data integrity) கலையாமல் பாதுகாக்க, முன் வரையறுக்கப்பட்ட சில நிபந்தனைகளாகும் (pre-defined rules).

கன்ஸ்ட்ரைன்ட்ஸ் வகைகளில் சில :


செக் கன்ஸ்ட்ரைன்ட் (CHECK Constraint) : தகவல்களை உள்ளீடு செய்யும்போது, ஒரு சில நிரல்களில், குறிப்பிட்ட தகவல் மட்டுமே இடம்பெறுமாறு செய்ய இந்த கன்ஸ்ட்ரைன்ட் உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, பிராந்தியம் (REGION) என்றொரு நிரல் இருப்பதாய் கொள்வோம். அதில் NORTH, EAST, SOUTH, WEST எனப்படும், நான்கு மதிப்புகள் (Values) மட்டுமே பெறப்பட வேண்டும், வேறு ஏதாவது மதிப்பை உள்ளீடாக தந்தால் ஏற்றுக்கொள்ளாதபடி செய்ய இந்த கன்ஸ்ட்ரைன்ட் மூலம் கட்டுப்பாடு விதிக்கலாம்.

அது போல நமது எடுத்துக்காட்டில், STUD_CLAS என்ற நிரலில் ஒன்று முதல் பனிரெண்டு என்ற மதிப்புகள் மட்டுமே தரப்பட வேண்டும் என்றும் நாம் வரையறுக்கலாம். அந்த நிரலை வரையறுக்கும்போது (Column definition) இந்த கட்டுப்பாட்டையும் சேர்த்து வரையறுக்க வேண்டும்.


NOT NULL Constraint : ஒரு நிரலில் எந்த தகவலும் உள்ளீடு செய்யாமல் வெறுமனே விட்டுச்செல்வதை தடுக்க இந்த கன்ஸ்ட்ரைன்ட் உதவுகிறது. (எந்த மதிப்பும் இல்லை என்பதனை NULL (நல்) என குறிப்பிடுவோம்.)

அந்த நிரலில் எந்தவொரு நிரையிலும் (Row) குறிப்பிட்ட நிரல் மதிப்பேதும் இல்லாமல் இருக்கக் கூடாது என இதன்படி வரையறுக்கலாம்.


எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் தனித்தனி பதிவு எண்கள் இருக்கும். பதிவு எண் இல்லாமல் ஒரு மாணவனின் தகவல் இருக்காது.

எனவே நமது எடுத்துக்காட்டில், STUD_MAST டேபிளில்
பதிவு எண் நிரலில் மதிப்பு கண்டிப்பாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.

UNIQUE Constraint : ஒரு டேபிளில், ஒரு நிரலின் மதிப்போ, ஒன்றுக்கும் மேற்பட்ட நிரல்களின் தொகுப்பு மதிப்போ (Composite) ஒரு முறை மட்டுமே வரக்கூடியது போல வரையறுக்கப்படுவது யுனிக் (Unique) கன்ஸ்ட்ரைன்ட் எனப்படுகிறது.

நமது எடுத்துக்காட்டின்படி, ஒரு பள்ளியில் ஒவ்வொரு மாணவனுக்கும், தானித்தனி பதிவு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரே பதிவு எண் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

அதனை நிர்ணயிக்கவே UNIQUE கன்ஸ்ட்ரைன்ட் உதவுகிறது.


நாம் நமது பாடம் 4(ii) - இல் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளை உதவியுடன் டேபிள் உருவாக்கினோம்.

CREATE TABLE STUD_MAST (STUD_REG_NO NUMBER(8),
STUD_NAME VARCHAR2(30),
STUD_GEND CHAR(1),
STUD_JOIN_DATE DATE,
STUD_JOIN_CLAS VARCHAR2(3))

DROP TABLE கட்டளை மூலம் டேபிளை நீக்கி விட்டு, நாம் மேலே நாம் கூறியுள்ள கன்ஸ்ட்ரைன்ட் - கள் சேர்த்து இந்த டேபிளை மறுபடி உருவாக்குவோம்.

CREATE TABLE STUD_MAST (STUD_REG_NO NUMBER(8)NOT NULL UNIQUE,
STUD_NAME VARCHAR2(30) NOT NULL,
STUD_GEND CHAR(1),
STUD_JOIN_DATE DATE,
STUD_JOIN_CLAS VARCHAR2(4)
CHECK (STUD_JOIN_CLAS IN ('I','II','III','IV','V','VI','VII','VIII','IX','X','XI','XII')))




இவ்வாறு DROP செய்து விட்டு உருவாக்கும்போது அந்த டேபிளில் இருந்த தகவல்கள் எதுவும் கிடைக்காது. அவ்வாறு ஏற்கனவே தகவல்கள் நிறைந்த டேபிளில் நாம் கன்ஸ்ட்ரைன்ட் சேர்க்க விரும்பினால் கீழ்க்காணும் கட்டளைகளை பயன்படுத்தலாம்.


ALTER TABLE STUD_MAST MODIFY (STUD_REG_NO NUMBER(8) NOT NULL);

ALTER TABLE STUD_MAST MODIFY (STUD_NAME VARCHAR2(30) NOT NULL);

ALTER TABLE STUD_MAST MODIFY (STUD_JOIN_CLAS VARCHAR2(4) CHECK (STUD_JOIN_CLAS IN ('I','II','III','IV','V','VI','VII','VIII','IX','X','XI','XII')))


(ஆரக்கிளின் பழைய பதிப்பான 7.3 CHECK கன்ஸ்ட்ரைன்ட்டை ALTER TABLE கட்டளையில் ஆதரிப்பதில்லை.)

இவ்வாறு ALTER TABLE மூலம் CHECK கன்ஸ்ட்ரைன்ட் செயல்படுத்துகையில், அந்த நிரலில் ஏற்கனவே உள்ள மதிப்புகள் தற்போது கொடுக்கப்படும் நிபந்தனைக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.


NOT NULL, CHECK கன்ஸ்ட்ரைன்ட் - களை ALTER TABLE கட்டளையில், நிரல் தலைப்புக்கு அருகிலேயே செயல்படுத்தலாம். ஆனால் UNIQUE கன்ஸ்ட்ரைன்ட்டை அவ்வாறு செய்ய இயலாது. அதற்கு ADD CONSTRAINT என தனியே செயல்படுத்த வேண்டும்.


ALTER TABLE STUD_MAST ADD CONSTRAINT UK_REG_NO UNIQUE(STUD_REG_NO)


இன்னும்
Primary Key Constraint, References Constraint (Foreign key constraint) போன்ற கன்ஸ்ட்ரைன்ட்கள் உள்ளன. பதிவின் நீளம் கருதி அதனை அடுத்த பதிவில் சொல்கிறேன்.




எம்.பி.3 (MP3) பைலுக்கு டேக் (tag) போடலாம் வாங்க.

0 comments

ஒரு எம்.பி. 3 பைல் உங்க மொபைல்-ல ப்ளே (Play) ஆகும்போது பக்கத்துல ஒரு படம் இருக்கும். பொதுவா அந்த படத்தோட ஸ்டில் (Still) இதுக்கும். அந்த படம் உங்களுக்கு பிடிக்கலேன்னா, வேற படம் மாத்துறதுக்கு,


ஒரு சில பாடல்கள் - ல பாடுனவங்கோளோட பெயர் (Singers) இல்லாம இருக்கும்.
சில பாடல்கள்- ல இசையமைப்பாளர் (Music director) பெயர் இல்லாம இருக்கும்.

அந்த மாதிரி இல்லாம இருக்கும்போது, நாம ஒரு 500, 600 பாட்டு வச்சிருந்தோம்னா, ஐபாட்(iPod),மொபைல்ல (Mobile),நம்ம கம்ப்யூட்டர்லயே மீடியா பிளேயர்ல (Media Player) கேக்கும்போது தொகுப்பா கேக்க முடியாது.

இந்த எல்லா தகவலும் அந்த எம்.பி.3 பைல்- ல இருந்தாதான் அதை தொகுத்து கேக்கலாம்.
எடுத்துக்காட்டா, இளையராஜாவோட பாடல்கள் மட்டும் கேக்க, கம்போசர் (Composer) டேக் - ல இளையராஜா - ன்னு இருந்தா நாம ஈசியா பிரிச்சுக்கலாம். எம்.பி.3 டேக் - வின்-ஆம்ப் (Winamp player) பிளேயர்ல போட்டுக்கலாம். மத்த பிளேயர் - ல எனக்கு தெரிஞ்சு அந்த வசதி இல்ல.

இதுக்காகவே ஒரு குட்டி மென்பொருள் (Software) இணையத்துல இருக்கு. அதை நீங்க இங்க போயி பதிவிரக்கிக்கலாம். இதை பதிவிறக்கி, கணினியில நிறுவினா, கீழே உள்ள மாதிரி ஒரு விண்டோ கிடைக்கும்.அதுல மேல Add Directory பட்டனை அழுத்தி, நீங்க பாடல்கள் வச்சிருக்க போல்டரை (folder) தேர்ந்தெடுங்க.





எல்லா பாடல்களும் வரிசையா வரும்.
அதுல வலது பக்கம், ஏதாவது ஒரு பாடலை தேர்வு செஞ்சீங்கன்னா, இடது பக்கத்துல டேக் கிடைக்கும். நாம தேவையான தகவல்களை மாத்திக்கலாம்.


மறக்காமல் மெயில் அனுப்ப ....,

0 comments

மறக்காமல் மெயில் அனுப்ப ....,
(send mail without forget)


நம்மோட, நண்பிகளோட பிறந்த நாள் மறந்துட்டோம்னு வைங்களேன். ஒரு, ஒரு வாரத்துக்கு நாம சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். நம்ம மொபைல்ல ரிமைன்டர் போட்டு வச்சிருந்தோம்னா தப்பிச்சோம்.

அவங்க எப்பவுமே மெயில் பாக்ரவங்களா இருந்தாங்கன்னா நாம மறந்துடாம மெயில் அனுப்பிட்டா, பிரச்சனையே இல்ல.

ஒரு மெயில் ரெடி பண்ணி, எந்த தேதில அனுப்பனும்னு, தேதி போட்டு வச்சுட்டோம்னா நாம மறந்தாலும் அது மறக்காம நம்ம பேர்ல மெயில் அனுப்பற மாதிரி வசதி இருந்தா எவ்ளோ நல்லாருக்கும் ? அதுக்கும் ஒரு வெப்சைட் (website) இருக்குங்க.

Lettermelater.com - ங்கற சைட் போனீங்கன்னா.., நாம நம்ம மெயில்க்கு செட்யூல் போட்டுக்கலாம். (Scheduled mail).

இங்க போயி, முதல்ல நாம ரெஜிஸ்டர் பண்ணனும்.




அப்புறமா நாம மெயில் கோர்த்து (mail Compose) எந்த தேதில எந்த டைம்ல (date and time) அனுப்பனும்னு போட்டு வைக்கணும். கரெக்டா அந்த தேதில, அழகா நம்மே பேர்ல மெயில் பண்ணிடும்.




இதுல மெயில் டிசைன் பண்ண வசதி இல்லன்னு நீங்க நினைச்சா உங்க ஜிமெயில் (Gmail account) கணக்குல டிசைன் பண்ணி, மெயில்க்கு மேல

to:
when :

போட்டு me@lettermelater ங்கற அட்ரஸ்க்கு அனுப்பீட்டிங்கன்னா போதும்.



உங்க பேர்ல ஷெட்யூல் போட்டு வச்சுக்கும்.



இன்னும் அதிகமான தகவல் பெறனும்னா..இங்க க்ளிக் பண்ணி பாருங்க.

மறக்காம வோட்டு போடுங்க.




Blog Widget by LinkWithin