அண்மைய பதிவுகள்

குலுங்கல்

0 comments
நான் சென்ற
அந்த கூட்டமான பேருந்து..
குலுங்கி குலுங்கி
போகும் போதெல்லாம்,
சந்தோஷமாய் இருந்தது.

என் மீது தூங்கி விழுந்த
பக்கத்து சீட் ஆசாமி,
எழுந்து எழுந்து உட்கார்கையில்.

எனக்கு பிடித்த திரைக்காட்சிகள்

0 comments
எனக்கு பிடித்த திரைக்காட்சிகள்.

1. பருத்தி வீரன்.

அவனையே நினைத்து வாழும் அவள், அவனுக்கும், அவனுடைய சித்தப்பாவிற்கும்,
அவர்களுடைய வாழ்க்கைய புரிய வைக்கும் அந்த காட்சி.
பிரியா மணி, சரவணன், கார்த்தி மூவரின் நடிப்பும் அற்புதமாய் வெளிப்பட்டிருக்கும் காட்சி.
"என்னடா சொல்ற" என்னும் வார்த்தையை கேட்பதற்கு முன், கண்ணீரை தேக்கி வைத்து உதடுகள் துடிக்க பேசியிருக்கும் காட்சி. பிரியா மணியின் மிகச்சிறந்த நடிப்பு.






2. அண்ணாமலை.

மகள், தன எதிரியின் மகனிடம் காதல் வயப்பட்டு, அவனுடன் சுற்றுவதை பார்த்த
பின்பு மிகவும் நிதானமாய் அவளுக்கு புத்தி சொல்லும் காட்சி.
எவ்வளவோ சொன்ன பின்பும், தான் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் மகளை,
வேறு வழியின்றி கை நீட்டி அடிக்கும் தந்தை.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து நிம்மதியாய் இருக்கும் நாயகன், போட்டி, சவால், பணம், பாசம் என்று சிக்கி உழன்று பழைய வாழ்க்கயை நிநைதூ பார்க்கும் காட்சி.
ரஜினியின் நடிப்பு - Super.





3. சுப்ரமணியபுரம்

காதலிக்காகவே வாழும் காதலன் அந்த காதலியாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு
உயிர் விடும் நாயகன். காதலி தன்னை ஏமாற்றியது தெரிந்ததுமே மனதளவில்
உயிர் விடும் நாயகன், தன்னை எந்தவொரு ஆயுதத்தால் தாக்கினாலும்,
வலியேதும் உணராமல் காதலி செல்லும் பாதையையே பார்த்துக்கொண்டே சாகும் காட்சி.
சாதாரண ரசிகனையும் நிமிர்ந்து உட்கார வைக்கும் காட்சி.
ஜெய், சுருதி, சமுத்திரக்கனி அனைவரின் நடிப்பும் அழகு.
ஜெய்-யின் நடிப்பு சிகரம்.






பேருந்துப்பயணம்

0 comments















பேருந்து பயணம் சுகமாய் இருப்பதில்லை.

முதல் நாளின் வேலைப்பளு..,
தலை வலி தரும் முந்தைய நாள் " சரக்கு "
குளித்து முடித்து வரும் மனைவியின்
"ஜில்"-லென்ற அணைப்பு,
ஏதோவொன்று..
ஒவ்வொரு நாளும் வேகமாய் எழுந்திருக்க முடிவதில்லை.

கடன் முடித்து..,
அவசர அவசரமாய்,
குளித்து..,
சாப்பிட்டு,
உடை மற்றும் போது..,
சில நேரங்களில் சிணுங்கும்
"செல் போனில் " சிரிப்புடன் பேச முடிவதில்லை.

எல்லாம் முடித்து,
தெருவில் இறங்கி நடக்கையில்..,
முன்னே செல்லும் அழகான பெண்ணைக்கூட
ரசிக்க முடிவதில்லை.
மனம் சொல்கிறது - "5 நிமிஷம்தான் இருக்கு".
நடை போட்டி போல..,
வேகம் கூட்டி..,
எல்லோரையும் கடந்து..,
பேருந்து நிறுத்தம் நுழையும்போது..,
என்னை விட்டுச் சென்றிருக்கும் 8 மணி பேருந்து.
எரிச்சலோடு.., மனம் சொல்லும்.
"கடனை உடனை வாங்கியாவது பைக் வாங்கிரனும்"

அடுத்த பேருந்து.,
அரை மணிக்கு பிறகுதான்.
அலுவலகத்திற்கு இன்றும் தாமதம்தான்.

அடுத்த சில நிமிடங்களில்
ஆரம்பமானது அடுத்த கவலை.
வரப்போகும் பஸ் கூட்டமில்லாமல் இருக்குமா ?

எதிபார்த்தபடி கூட்டமில்லை.
கடைசி சீட்டில்
இறங்குவதற்கு வசதியாய்.,
ஓரமாய் உட்கார நினைக்கையில்,
வழி விட்டு உள்ளே போகச்சொன்ன
ஓரத்து சீட் ஆசாமியை - ஏனோ பிடிக்கவில்லை.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன் நான்.

தினமும் ஒரே பாதையில் பயணம்.
ஆனாலும் இதமான காற்று இன்பமாய் இருக்கிறது.
கல்லூரி பையன்களின் நோட்டுக்கள்
என் மடியில் சேர்ந்தன.

பள்ளிப் பிள்ளைகளின் முதுகில்
எதிர்காலத்தை நோக்கிய
நிகழ்கால சுமைகள்.

வேலைக்காக,
கல்விக்காக,
பெண்ணுக்காக,
மாப்பிள்ளைக்காக,
நட்புக்காக,
திருமணத்திற்காக,
காதலுக்காக,
உறவினரின் மறைவுக்காக,
இன்னும்..இன்னும்
பலவற்றிற்காக...
எல்லோர் பயணமும் ஒன்றாக.

கல்லூரி மாணவர்களும்,
கல்லூரி மாணவிகளும்,
கடைக்கண் பார்வையில்
காதல் வளர்த்தனர்.

என் கல்லூரிப்பருவ காதல்
கண் முன்னே வந்து போனது.

அருகே இருந்தவர்களின் பேச்சில்,
சில ஆட்டோமொபைல் நுட்பங்கள்.

நின்றிருந்த பெண்ணின் இடுப்பை,
பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை.

நாற்பது நிமிட பயணத்தில்..,
எத்தனை வேறுபட்ட மனிதர்கள்.

பைக் வாங்கும் ஆசையை
தற்காலிகமாய் ஒத்திப்போட்டேன்.

உட்கார இடம் கிடைத்து விட்டால்,
பேருந்து பயணமும் சுகமாய்தான் இருக்கிறது.

Blog Widget by LinkWithin