அண்மைய பதிவுகள்

வேர்ட், பவர் பாயின்ட் - இல் உள்ள படங்களை மட்டும் பிரிக்க ?

2 comments

வேர்ட் மற்றும் பவர் பாயின்ட் பைல்களில் உள்ள படங்களை மட்டும் பிரித்து தனித்தனி பைல்களாக சேமிப்பது எப்படி ? இதற்கு எங்கு மென்பொருள் தேடுவது ?

சில நேரங்களில் பவர் பாயின்ட் - இல் நாம் ஒவ்வொரு ஸ்லைட் ஆக சென்று தேவையான படத்தை ரைட் க்ளிக் செய்து, "Save Picture As..." என்று கொடுப்போம். இது மிகவும் சுற்று வேலை.





அதிக நேரம் பிடிக்க கூடியது. ஆனால், வேர்ட் - இல் இதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த வேலையை சில நொடிகளில் செய்து விட முடியும்.

தேவையான, வேர்ட் அல்லது பவர் பாயின்ட் பைலை திறங்கள்.

மெனுவில், File சென்று Save As... தேர்ந்தெடுங்கள்.





சேமிக்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து, என்ன பெயரில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து, கீழே "Save As Type" என்பதில் "Web Page" என் தேர்ந்தெடுங்கள்.

அனைத்தும் ஒரு HTML டாகுமென்ட் - ஆக சேமிக்கப்படும்.

பின் My Computer சென்று, சேமித்த இடத்திற்கு சென்று பார்த்தால், ஒரு html பைல் இருக்கும். அருகிலேயே, ஒரு தனி போல்டரில், எல்லா துணை பைல்களும் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த போல்டரில் நமக்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்றவற்றை டெலீட் செய்து விடலாம்.

நாளை, பவர் பாயின்ட் ஸ்லைட் ஒவ்வொன்றையும், எழுத்துகளோடு தனித்தனி படங்களாக மாற்றுவது எப்படி என்று சொல்கிறேன்.


பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள்.


அன்புடன்,

பா.வேல்முருகன்.




உலகின் தாகம்.

0 comments
தாகம்.




தாகம் - நீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு.


உங்களுக்கு தெரியுமா ?





நாம் எல்லோரும் நீர் உயிரினங்கள்தான்.

நம் உடலில் 60% நீர்.



நமது மூளையில் 70% நீர்.

நமது ரத்தத்தில் 80% நீர்.


உணவின்றி ஒரு மாதம் கூட வாழலாம்.


ஆனால், ஒரு வாரம் நீர் இல்லையெனில் நம் உடல் இயங்காது.

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வளவு இருந்ததோ அதே அளவுநீர்தான் இப்பொழும் உலகில் உள்ளது.


நமது கோள் நீரால் நிறைந்தது. ஆனால், 3% மட்டுமே தூய நீராகும்.



ஆனால் அவற்றில் பெருமளவு ஐஸ் - ஆக உள்ளது.


ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவே மனிதனால் பெறக்கூடியது.



வேறொரு முறையில் சொன்னால், மொத்த நீரில் 0.007 சதவீதம் மட்டுமே குடிக்க ஏதுவானது



அவற்றில் கால் பங்கு நம் வீடுகளுக்கு வருகின்றது.


ஆனால், அவற்றை கழிவறைகளில் பயன்படுத்துகிறோம்.



ஒரு கழிவறை, 3 கேலன் தண்ணீரை பயன்படுத்துகிறது.

40 கேலன் தண்ணீர் துணி துவைக்க பயன்படுகிறது.



10
நிமிட ஷவர் குளியலால் , 50 கேலன் தண்ணீர் செலவிடப்படுகிறது.



குழாயை திறந்து விட்டபடியே பல் துலக்கும்போது 4 கேலன் தண்ணீர்,


குழாயை மூடி, தேவைப்படும்போது நீர் உபயோகித்து பல் துலக்கும்போது 0.25 கேலன் தண்ணீர் பயனாகிறது.

நீர் தட்டுப்பாடு பெருகுகிறது.




நமது நீர் ஆதாரங்கள் நெருக்கடியில் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டில், மக்கள் தொகை மூன்று மடங்காகி விடும்.


நீரின் பயன்பாடு ஆறு மடங்காகி விடும்.


நூற்றாண்டின் மத்தியில், 3 பில்லியன் மக்கள் தொகை கூடும்.


அதில் அதிகப்படியான பிறப்பு ஏற்கனவே நீர் தட்டுப்பாடு மிக்க நாடுகளில்
நடக்கும்.





லாஸ் ஏஞ்சல்ஸ் படுகையில், ஒரு மில்லியன் மக்களுக்கே நீர் உள்ளது.




2020 -
இல் மக்கள் தொகை 22 மில்லியன்களை தொட்டு விடும்.



எல்-பாசோ, சான் ஆண்டனியோ பகுதிகளில், 10 முதல் 20 ஆண்டுகளுக்கே நீர் உள்ளது.

மத்திய ப்ளோரிடாவில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கே நீர் மக்களுக்கு.



10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தினசரி பயன்பாட்டுக்கு 3 கேலன் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.




ஆனால், ஒரு சராசரி அமெரிக்கனின் நீர் பயன்பாடு 160 கேலன்களாகும்.
கடந்த வருடத்தில் மட்டும் 250 லட்சம் மக்கள் மாசுபட்ட ஆறுகளால் இடம் பெயர்ந்துள்ளனர்.




இந்த எண்ணிக்கை போர் முனைப்பகுதி மக்கள் வெளியேற்றத்தை காட்டிலும் அதிகமாகும்.

மூன்றில் ஒரு மனிதனுக்கு போதுமான சுகாதார வசதி கிடைப்பதில்லை.



ஐந்தில் ஒரு மனிதனுக்கு, சுத்தமான குடிநீர் மறுக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குழந்தை நீரினால் ஏற்படும் நோயினால் இறக்கின்றன.




உலக அளவில் நீர் பற்றாக்குறை கூடிக்கொண்டே செல்கிறது.


உலகில் எண்ணெய் வற்றிப்போகுமுன்பே நீர் வற்றிப்போகும் என்று சொல்லப்படுகிறது.




அதிகமான உறிஞ்சுதலால், பல நாடுகளில் நிலத்தடி நீர் வற்றிப்போய் விட்டது.




குறைந்து போன நிலத்தடி நீர் ஆதாரத்தால் உணவு தானிய உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.



இவை, உணவுப்பற்றாகுறையையும், விலைவாசி ஏற்றத்தையும் ஏற்பட செய்கிறது.



உணவுதானியப்பற்றாக்குறையில், சீனா ஏற்கனவே தவித்து வருகிறது.




இந்தியா, பாகிஸ்தான், எகிப்தும் கூட.




நீர் பிரச்சனை, வறட்சியையும், பசியையும் கொண்டு வரும்.




இவை எல்லாம் சொல்வது என்ன ?


இது தாகம் நிறைந்த உலகம்.


தொழில் துறை தாகம் நிறைந்தது.


விவசாயமும் தாகமானது.


நாமும் தாகமானவர்கள்தான்.



நீர் சேமிப்பைப் பற்றிய சிந்தனை, நமது பரிசீலனைக்குப்பிறகு எடுக்க வேண்டிய ஒரு மாற்றமாகும்.



குறைவாக பயன்படுத்துங்கள். அதிகமாக சேமியுங்கள்.



நமக்கு இப்பொழுது தெரிந்திருக்கும்.


தாகம் பற்றி.











Blog Widget by LinkWithin