அண்மைய பதிவுகள்

ஸ்டார் டோபாலஜி மூலம் பல கணினிகளை இணைக்க...

0 comments

நெட்வொர்க் மூலமாக பல கணினிகளை இணைக்க.

நாம வழக்கமா கீழ இருக்கற மாதிரிதான் ஸ்டார் போடுவோம்.


ஆனா நாமா கீ போர்டுல இருக்க ஸ்டார்(ஆஸ்ட்ரிச்) வேற மாதிரி இருக்கும்.



ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை நாம இந்த வடிவத்தின் மூலமா இணைக்கலாம். இத ஸ்டார் டோபாலாஜி - னு சொல்லுவாங்க.



சரி. இத எப்படி பண்ணனும்னு நீங்க கேப்பீங்க. சொல்றேன். இணைக்க வேண்டிய எல்லா கம்ப்யூட்டர்லயும் ஈதர்நெட் கார்டு இருக்கணும். இப்பல்லாம் எல்லா கம்ப்யூட்டர்கள்ளையும் மதர்போர்டோட சேர்ந்தே கிடைக்குது. அப்படி இலேன்னா தனியா வாங்கி சேர்த்துக்கோங்க.

ஒரு கம்ப்யூட்டர்ல, ஈதர்நெட் கார்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க, மை கம்ப்யூட்டரை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராபர்டீஸ் தேர்ந்தெடுங்க.




தனியா ஒரு விண்டோ வரும். அதுல, ஹார்ட்வேர் டேபை செலக்ட் பண்ணி, டிவைஸ் மேனேஜர் பட்டனை அழுத்துங்க. கீழ இருக்கற மாதிரி ஒரு விண்டோ வரும். அதுல, நெட்வொர்க் அடாப்டர்ஸ் - க்கு கீழ ஏதாவதொரு ஈதர்நெட் அடாப்டர் நிறுவப்பட்ருக்கான்னு உறுதிப்படுதிக்கங்க.







அப்புறம் ஒரு ஈதர்நெட் சுவிட்ச் (Ethernet Switch) வேணும்.8 போர்ட், 16 போர்ட், 32 போர்ட் அப்டீன்னு உங்க தேவைக்கேத்த மாதிரி வாங்கிக்கோங்க.


இப்போ, ஏற்கனவே இரண்டு கணினிகளை இணைக்கறது எப்படின்னு முந்தையபதிவுல பாத்துருக்கோம் . இரண்டு கணினிகளை குறுக்கு இணைப்பு (Cross Cabling) மூலமா இணைத்திருப்போம். இப்பொழுது நேர் இணைப்பு மூலமா நாம இணைக்கப்போறோம். குறுக்கு இணைப்பு எப்படி பண்றதுன்னு இந்த பதிவைபாருங்க. நேர் இணைப்பு ஒன்னுமில்லங்க. ரெண்டு பக்கமும் ஒரே மாதிரியான நிற வரிசையில க்ரிம்ப் பண்ணிக்கோங்க. உதாரணமா, ஒரு முனைல



1.வெள்ளையும் பச்சையும்,

2.பச்சை மட்டும்,

3.வெள்ளையும் ஆரஞ்சும்,

4.ஊதா மட்டும்,

5.வெள்ளையும் ஊதாவும்,

6.ஆரஞ்சு மட்டும்,

7.வெள்ளையும் ப்ரவ்னும்,

8. பிரவ்ன் மட்டும்.


அப்டீங்கற வரிசைல க்ரிம்ப் பண்ணீருந்தீங்கன்னா, இன்னொரு பக்கமும் அதே வரிசைல பண்ணிக்கங்க.



குறிப்பு : ஒரு மாதிரியான டிவைஸ்களை இணைக்க என்றால் (கணிப்பொறியும், இன்னொரு கணிப்பொறியும், அல்லது சுவிட்சும் இன்னொரு சுவிட்சும், அல்லது ஹப்பும் இன்னொரு ஹப்பும்) குறுக்கிணைப்பு முறையிலும், வேறு வேறு டிவைஸ்களை (ஒரு கணிப்பொறியும் ஒரு ஒரு சுவிட்சும், அல்லது ஒரு சுவிட்சும் இன்னொரு ஹப்பும், அல்லது ஒரு ஹப்பும் ஒரு கணிப்பொறியும்) இணைக்க நேரிணைப்பு முறையிலும் இணைக்கப்பட வேண்டும்.



நேரமில்லாததால மீதத்தை நாளைக்கு எழுதுறேனே. ப்ளீஸ்.






சன் டி.வி யின் "நிஜம்". பூலாம் வலசு கிராம சேவல் கட்டு.

1 comments
22.01.2010 அன்று இரவு சன் டி.வி.யில் ஒளிபரப்பான நிஜம் நிகழ்ச்சி பூலாம் வலசு கிராமத்தில் பொங்கலையொட்டி நடந்து வரும் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டையைப்பற்றி இருந்தது. கொஞ்சம் சுவாரஸ்யமாய்தான் இருந்தது நிகழ்ச்சி. ஆண்டு தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டைக்காக கொண்டு வரப்படுகின்றனவாம். அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் இறந்து போகின்றனவாம்.



ரத்தமும், சேவலின் இறக்கைகளும் அந்த மண்ணின் நிறத்தையே மாற்றியிருந்தன.

ஒவ்வொரு சேவலும் இதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்றுவிக்கப்படுகின்றனவாம். அதன் காலில் கட்டிவிடப்படும் கத்தி நேர்த்தியாக கூர்மைப்படுத்தப்படுகிறது. அவைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதைப் பார்க்கையிலே பயங்கரமாகஇருக்கிறது.

தோற்று உயிர் விடும் சேவலை, ஜெயித்த சேவலின் உரிமையாளர் எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு விடுவார்களாம். ஒருவர் தன வெற்றி பெற்ற சேவலை பக்கத்தில் வைத்துக்கொண்டு, தோற்றுப்போன சேவலின் இறக்கைகளை பிய்த்துக்கொண்டே பேட்டி அளித்தார்.

தோற்றுப்போன சேவல் 1500 ரூபாய் வரை கூட விலை போகுமாம்.

ஒரு சில சேவல்கள் மூன்று, நான்கு சேவல்களைக் கூட தோற்கடித்து விடுமாம்.
சேவல்கள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கே கம்பீரமாய் இருக்கிறது.

அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னது :

"இத ஒரு ஜாலியான விளையாட்டுங்க. நாங்க அதுகள துன்புருத்துரதில்லை. அதுக சண்டை போடறத மட்டும்தாங்க பாக்குறோம். ஒரு ஜாலிதான். மத்தபடி சூதாட்டம் மாதிரி பணம் வச்சு ஆடுறதில்ல."

ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புருத்தப்படுகின்றன, அதனை தடை செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை என்பதால், இவரது பேச்சு இப்படியிருந்தது.

சேவல்கள் சண்டைக்கு எப்படி தயாராகின்றன என்பதற்கு,
இன்னொரு சேவல் உரிமையாளர், (வயது 25 க்கு மேல் இருக்காது.) சொன்னது.

"குறைஞ்சது ஒரு வருஷம் பயிற்சி கொடுப்போம். முதல் நாலு மாசத்துக்கு இருட்டுலே வச்சிருப்போம். அடுத்ததா, ஒரு கோழி கூட இணை சேர்த்து விடுவோம். அதுக ரெண்டும் மாசம் சுத்துற வரைக்கும் விட்டுட்டு, திரும்ப நாலு மாசம் நல்ல வெயில் மணல்ல விட்ருவோம். அப்புறம் தினமும் காலைல அதுக்கு கொஞ்சமா கம்பு (உணவு) கொடுத்துட்டு, அதோட எடைக்கு சமமான சேவலோட மோத விடுவோம். நல்ல மதியான வெயில்ல தண்ணில விட்டு நீச்சல் அடிக்க விடுவோம். நீச்சல் அடிச்சாதான் அது சண்டைல மேல பறந்து ஏறிப்போயி தாக்கும்." என்றார்.

வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு வயதானவர்,

" ஒரு ஜாலியான விளையாட்டுங்க. ஜல்லிக்கட்டு - ங்கற பேர்ல மாட்ட கஷ்டப்படுத்துறாங்க. குத்து சண்டை ல மனுசனை மனுஷன் அடிக்கறான். சேவல் சண்டைல நாங்க எதுவும் பண்றதில்ல. வேடிக்கை மட்டுதான் பாக்குறோம்." என்றார். மேலும் தொடர்ந்தவர் "சேவல் வளக்குறது என்ன வச்சு அழகு பாக்கவா ? அடிச்சு திங்கதானே. நாம அதை அடிக்காம சண்டை போட விட்டு அடிக்கிறோம். இது என்ன தப்பு" என்றார்.

அவரிடம் பேட்டி எடுத்த பெண்ணும், அவர் பேசும் நியாயத்திற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிரித்தபடியே நின்றார்.

இது சரியா, தவறா என எனக்கும் தெரியவில்லை. ஆனால், நாம் ரசிக்கும் போட்டிக்காக ரத்தம் சிந்தும் சேவல்களை பார்க்கையில் பாவமாய் இருந்தது.

என் மனதில் எழுந்த சில எண்ணங்கள் மட்டும் இங்கு வைக்கிறேன்.

- போட்டிக்காக ஒரு வருடம் சேவல்களை தயார்படுத்தும்போது மனதில் எவ்வளவு குரூரமான எண்ணம் இருக்கும்.

- தோற்றுப்போன சேவலின் உரிமையாளரின் மனது என்ன பாடுபடும்?

- 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் கூட இந்த செயலை செய்யும்போது, அடுத்த தலைமுறையும் இதனை தொடரப்போகிறதா ? டாக்டர் அப்துல் கலாமின் கனவை எப்படி நிறைவேற்றப்போகிறோம் ?

பொறுத்திருந்து பார்ப்போம்.



ஆயிரத்தில் ஒருவன் - தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ?

12 comments


தமிழில்
எடுக்கப்படாமல் ஆங்கிலத்திலோ, அல்லது இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் இது போல தமிழ் படம் தமிழில் வராதா என பல பேர் ஏக்கத்தில் கூப்பாடு போட்டிருப்பார்கள். ஏனோ, தமிழில் எடுத்ததால், எக்கச்சக்க விமர்சனங்கள்.





மேடை நாடகங்களை திரைப்படமாக்கி, பின்னர் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாகி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை திரைப்படங்களாக மாறி, தமிழ் சினிமா ஒரு ஆரோக்யமான பாதையில் இருந்த போது, ஹிந்தி படங்களின் தழுவல்களும், அவற்றின் அப்பட்டமான காப்பிகளையும் கண்டு வியந்து, நமது சுயத்தை தொலைத்துக்கொண்டோம். பின்னர் தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள், பாட்டு , சண்டை என நாமாகவே ஒரு எல்லை வகுத்து கொண்டோம்.

இப்போது அதுவும் இல்லாமல், தமிழில் கற்பனை வறண்டு போனதோ என நினைக்கும் அளவுக்கு, தெலுங்கு, பிரெஞ்சு போன்ற பிற மொழிப்படங்களின் கதைகள் நம்மை ஆக்ரமித்க்க்கொள்ள துவங்கியிருக்கிறது.



வெகுஜன ரசனையுடன் (குத்துப்பாட்டு, சண்டைக்காட்சிகள்) ஆயிரத்தில் ஒருவன் பார்க்க செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் (அதுவும் கொஞ்சம்தான் ஏமாற்றம். படத்தின் முதல் பாதி எல்லோரும் ரசிக்கும்படியாகவே உள்ளது). ஆனால், இவற்றையெல்லாம் தாண்டிய தமிழ் சினிமா பார்க்கவே முடியாதா என ஏங்கி கிடப்போருக்கு கண்டிப்பாய் வரப்பிரசாதம்தான் இந்தப்படம்.

படம் மூன்று மணி நேரம் என்ற போதிலும், அதற்குள் முடிந்து விட்டதே என ஏமாற்றம் ஏற்படுகிறது.

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்களே.. அது போல பெரும் பேரரசை இழந்து, எங்கோ ஒரு குகையில் இன்னமும் பழைய நினைப்புடனே தஞ்சை மண்ணின் செழுமை பற்றி எண்ணி எண்ணி, எப்பொழுது நாம் இழந்த மண்ணை பார்ப்போம் என வேதனையுடன் காத்திருக்கும் சோழர் கூட்டம் மற்றும் அதன் தலைவனாய் வரும் பார்த்திபன். (தாய் தின்ற மண்ணே... பாடலில் உணர்ச்சிவசப்படும் சோழன். மொத்த திரையரங்கமும் அமைதியாய் ரசித்தது அந்த பாடலை.)

தூதன் ஒரு நாள் வருவான் என நம்பு சோழ மக்களுக்கு தூதனாய் வரும் கார்த்தி.

சோழர்கள் கவர்ந்து போன தங்களின் குல தெய்வத்தின் சிலையை மீட்க, பழைய பகையுடன் வஞ்சகமாய் அவர்களுடன் உறவாடி, அவர்களை தோற்கடிக்க ராணுவத்தை வரவழைக்கும் பாண்டிய வம்சத்தின் இளவரசி ரீமா சென். (தனது பரம்பரை வரலாற்றை சொல்லும்போது நமக்கும் நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.)

தன தந்தையை இது போன்ற முந்தையதொரு பயணத்தில் தொலைத்த ஆண்ட்ரியா.



ஒவ்வொரு நடிகர்களின் பங்களிப்பும் மிகவும் அருமை. (நண்பனை காப்பாற்ற நண்பனின் மீது விழும் ஈட்டிக்குத்துகளைஎல்லாம் தன மீது வாங்கி தலை வெட்டப்பட்டு உயிர் விடும் மனோகர், மற்றும் ஒவ்வொரு துணை நடிகர்களும் உட்பட).

சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும், தடைகளை கடந்து செல்லும் காட்சிகள் அருமை.

நமது முன்னோர்களின் தமிழ், அவர்களின் போர் முறைகள் போன்றவற்றை கொஞ்சமேனும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலப்படங்களை பார்க்குபோது அவர்களின் பேச்சு புரியாமல் செய்கைகளாலும், உணர்வுகளாலும் காட்சியை புரிந்து கொண்டிருப்போம் சில நேரங்களில். அதே போல, நமது தமிழ் வார்த்தைகள் கூட புரியாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக்கொண்டு காட்சிகளை புரிந்து கொள்ளும்போது மனது கொஞ்சம் வலிக்கிறது.எவ்வளவு வார்த்தைகளை இழந்து விட்டோம்.

தற்போதைய ஆயுதங்கள் எதையும் பற்றி தெரிந்து கொள்ளாத ஒரு தேசம், அந்த ஆயுதங்களால் சூரையாடப்ப்படும்போது அந்த இனத்தின் தலைவனின் கவலை அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
(இதையேதான் "அவதார்" படத்திலும் பார்த்தோம்.)

கத்தி, ரத்தம் போன்ற வன்முறை காட்சிகள் இருந்தாலும் கதையோட்டத்தில் அவை பெரிதாக தெரியவில்லை.
பாடல்களும், பின்னணி இசையும் நலம்.

கிராபிக்ஸ் காட்சிகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவை மன்னிக்கப்படக்கூடியவைதான். முடிந்த அளவு எல்லாமே சிறப்பாய்தான் இருக்கிறது.

எத்தனையோ கோடிகள் செலவு செய்து படம் எடுத்திருக்கிறார்கள். அத்தனை செலவும் திரையில் பார்க்கும்போது திருப்தி.

இயக்குனரே....
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.


திரையரங்கம் சென்று பாருங்கள். ஒரு பிரமிப்பூட்டும் அனுபவத்தை கண்டிப்பாய் உணர்வீர்கள்.



Blog Widget by LinkWithin