கூகிள் டாக்ஸ் - (Google Docs) இல் புதிய மாற்றங்கள் - வசதிகள்.
Labels:
இணையதளங்கள்
2
comments
நாம் முன்னரே குறிப்பிட்டது போல மேகக்கணினியத்தில் அழுத்தமாக கால் பதிக்கும் வகையிலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய அலுவலக தொகுப்புகளுக்கு (Cloud office 2010) போட்டி தரும் வகையிலும், மேலும் பல புதிய அம்சங்களை தனது கூகிள் டாக்ஸ் தொகுப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.
1. எந்த வகை கோப்பையும், பதிவேற்றும் வசதி.
1. எந்த வகை கோப்பையும், பதிவேற்றும் வசதி.
வேர்ட், எக்செல், பவர்பாயின்ட் வடிவிலான கோப்புகள் போல மேலும் பல உரு கோப்புகளையும் பதிவேற்றிக்கொள்ளும் வசதி.
கூகிள் டாக்ஸ் மூலம், மாற்றக்கூடிய கோப்பு வடிவுகள்
கூகிள் டாக்ஸ் மூலம், மாற்றக்கூடிய கோப்பு வடிவுகள்
- For spreadsheets: .xls, .xlsx, .ods, .csv, .tsv, .txt, .tsb
- For documents: .doc, .docx, .html, plain text (.txt), .rtf
- For presentations: .ppt, .pps
மேற்குறிப்பிட்டுள்ள கோப்புகளை, கூகிள் டாக்ஸ் மூலம் இணையத்திலேயே மாற்றலாம் திருத்தலாம்.
இவை தவிர, தற்போது, .zip, .jpg, .mp3 வகை கோப்புகளையும் பதிவேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு, மாற்ற இயலாத கோப்புகளை 1 ஜி.பி. வரையிலும் ஏற்றிக்கொள்ளலாம். 1 ஜி.பி. க்கு மேலே ஒவ்வொரு ஜி.பி. க்கும், 0.25 அமெரிக்க டாலர் கட்டணம் என நிர்ணயித்துள்ளது.
2. உறை (folder) உருவாக்கிக்கொள்ளும் வசதி.
கூகிள் டாக்ஸ் - இல் முன்பு அனைத்து கோப்புகளை ஒரே இடத்தில் இருக்கும். இப்போது நமது கணினியில் உள்ளது போல உறைகள் (folders) உருவாக்கி அதனுள் பல கோப்புகளை சேமித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு உறையையும் மற்றவர்களுடன் (அனைத்து கோப்புகளையும் சேர்த்து) மொத்தமாக பகிர்ந்து (share) கொள்ளலாம்.
3. எக்செல், வேர்டில் உள்ளது கோடுகள், அம்புக்குறிகள் போன்றவை வரையும் வசதி.
4. வார்த்தைகளை மொழி பெயர்க்கும் வசதி.
கூகிள் விரிதாளில் (Spreadsheet) translate என்னும் செயற்கூறு மூலம், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்தல்.
கூகிள் விரிதாளில் (Spreadsheet) translate என்னும் செயற்கூறு மூலம், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்தல்.
=GoogleTranslate("text", "source language","target language")
மேலே உள்ள செயற்கூறு மூலம், கொடுக்கும் வார்த்தையை மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.
5. கூகிள் விரிதாள் மூலம் படிவம் உருவாக்க முடிந்தது நாம் அறிந்ததே. தற்போது இதில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளனர்.
6. மொத்த கோப்பையும் மொழிமாற்றம் செய்யலாம்.
மொத்த கோப்பையும், ஒரு சில சொடுக்குகளில் மொழி மாற்றம் செய்துவிட முடியும். நாற்பது மொழிகளுக்கிடையே மொழி மாற்றம் செய்து தருகிறது. ஆனால், அதில் தமிழ் மொழி இல்லாதது நமக்கெல்லாம் குறைதான்.
7. மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதி.
கூகிள் டாக்ஸ் மூலம் நாம் உருவாக்கிய
கோப்பை, நம் மின்னஞ்சலில் கோப்பிணைப்பாக அனுப்ப இயலும்.இன்னும் பல வசதிகளை அடுத்தது அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது கூகிள் நிறுவனம்.
பொறுத்திருந்து பார்போம்.
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,
பா.வேல்முருகன்.