அண்மைய பதிவுகள்

Saturday,
Apr
17,

கூகிள் டாக்ஸ் - (Google Docs) இல் புதிய மாற்றங்கள் - வசதிகள்.

2 comments
நாம் முன்னரே குறிப்பிட்டது போல மேகக்கணினியத்தில் அழுத்தமாக கால் பதிக்கும் வகையிலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய அலுவலக தொகுப்புகளுக்கு (Cloud office 2010) போட்டி தரும் வகையிலும், மேலும் பல புதிய அம்சங்களை தனது கூகிள் டாக்ஸ் தொகுப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1. எந்த வகை கோப்பையும், பதிவேற்றும் வசதி.

வேர்ட், எக்செல், பவர்பாயின்ட் வடிவிலான கோப்புகள் போல மேலும் பல உரு கோப்புகளையும் பதிவேற்றிக்கொள்ளும் வசதி.

கூகிள் டாக்ஸ் மூலம், மாற்றக்கூடிய கோப்பு வடிவுகள்
  • For spreadsheets: .xls, .xlsx, .ods, .csv, .tsv, .txt, .tsb
  • For documents: .doc, .docx, .html, plain text (.txt), .rtf
  • For presentations: .ppt, .pps

மேற்குறிப்பிட்டுள்ள கோப்புகளை, கூகிள் டாக்ஸ் மூலம் இணையத்திலேயே மாற்றலாம் திருத்தலாம்.
இவை தவிர, தற்போது, .zip, .jpg, .mp3 வகை கோப்புகளையும் பதிவேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு, மாற்ற இயலாத கோப்புகளை 1 ஜி.பி. வரையிலும் ஏற்றிக்கொள்ளலாம். 1 ஜி.பி. க்கு மேலே ஒவ்வொரு ஜி.பி. க்கும், 0.25 அமெரிக்க டாலர் கட்டணம் என நிர்ணயித்துள்ளது.

2. உறை (folder) உருவாக்கிக்கொள்ளும் வசதி.


 
கூகிள் டாக்ஸ் - இல் முன்பு அனைத்து கோப்புகளை ஒரே இடத்தில் இருக்கும். இப்போது நமது கணினியில் உள்ளது போல உறைகள் (folders) உருவாக்கி அதனுள் பல கோப்புகளை சேமித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு உறையையும் மற்றவர்களுடன் (அனைத்து கோப்புகளையும் சேர்த்து) மொத்தமாக பகிர்ந்து (share) கொள்ளலாம்.


3. எக்செல், வேர்டில் உள்ளது கோடுகள், அம்புக்குறிகள் போன்றவை வரையும் வசதி.


4. வார்த்தைகளை மொழி பெயர்க்கும் வசதி.

கூகிள் விரிதாளில் (Spreadsheet) translate என்னும் செயற்கூறு மூலம், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்தல்.

=GoogleTranslate("text", "source language","target language")

மேலே உள்ள செயற்கூறு மூலம், கொடுக்கும் வார்த்தையை மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.

5. கூகிள் விரிதாள் மூலம் படிவம் உருவாக்க முடிந்தது நாம் அறிந்ததே. தற்போது இதில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளனர்.



6. மொத்த கோப்பையும் மொழிமாற்றம் செய்யலாம்.
மொத்த கோப்பையும், ஒரு சில சொடுக்குகளில் மொழி மாற்றம் செய்துவிட முடியும். நாற்பது மொழிகளுக்கிடையே மொழி மாற்றம் செய்து தருகிறது. ஆனால், அதில் தமிழ் மொழி இல்லாதது நமக்கெல்லாம் குறைதான்.



7. மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதி.
கூகிள் டாக்ஸ் மூலம் நாம் உருவாக்கிய கோப்பை, நம் மின்னஞ்சலில் கோப்பிணைப்பாக அனுப்ப இயலும்.

இன்னும் பல வசதிகளை அடுத்தது அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது கூகிள் நிறுவனம்.

பொறுத்திருந்து பார்போம்.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

Friday,
Apr
16,

அசைவுப்படத்துக்கு கோபம் வந்தால்....

4 comments


கொஞ்ச நேரம்  உங்கள் மனதை இந்த தளத்தில் இளைப்பாற்றிக்கொள்ளுங்கள்.

கீழே உள்ள படத்தை சொடுக்கிப்பார்த்து, PLAY அழுத்தி  அசைவுப்படத்திற்கு கோபம் வந்தால் என்னாகும் என தெரிந்து கொள்ளுங்கள்.



மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


Thursday,
Apr
15,

உங்கள் கணினி பணிநிறுத்தம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா ?

6 comments
உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேரங்களில் வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதன் பின்புலத்தில் பல செயல்கள் (Background processes) நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் கணினியின் இயக்கம் நிற்கும்.
 
ஒரு சில செயல்கள் தானாக நிற்பதில்லை. பணி நிறுத்தம் (Shut down) செய்யும்போது இந்த செயல்களை உடனடியாக நிறுத்துவதன் மூலம், கணினியின் இயக்கத்தை வேகமாக நிறுத்தலாம்.

உடனடியாக எப்படி நிறுத்துவதென்று பார்ப்போம்.

Start ---> Run சென்று regedit என தட்டச்சுங்கள்.

பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில்,

HKEY_CURRENT USER\Control Panel\Desktop

என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
 பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இருசொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.

OK கொடுத்து வெளியேறுங்கள்.

இனி, உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுக்காது.

மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,

பா.வேல்முருகன்.


Saturday,
Apr
10,

மடிக்கணினிகளில் கணினித்திரையை அணைத்து வைக்க..

2 comments
நாம் பயன்படுத்தும் மேசைக்கணினியில், நாம் பயன்படுத்தாதபோது கணினித்திரையை அணைத்து (manually) வைப்பதன் மூலம், மின்பயன்பாட்டை குறைக்கலாம். அனால், பெரும்பாலான மடிக்கணினிகளில் அது போன்ற பொத்தான்கள் இருப்பதில்லை.

அந்த செயலை, இந்த சிறிய செயலியைக் (application) கொண்டு நிறைவேற்றலாம்.

இங்கு சொடுக்கி இந்த செயலியை பதிவிறக்குங்கள்.

பின்னர் இதற்கு கணினியின் மேசைத்தளத்தில் (desktop) ஒரு குறுக்கு வழி படவுரு (Short cut icon) ஒன்றை உருவாக்குங்கள்.

பின்னர், இந்த படவுருவை வலச்சொடுக்கு (right click) செய்து, பண்புகள் (properties) என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதில் சுருக்கு விசை (Short cut key) என்பதில் ஏதாவதொரு விசையை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்போது உங்கள் கணினித்திரையை இந்த சுருக்கு விசை கொண்டே அணைக்கலாம்.

மடிக்கணினிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


Thursday,
Apr
8,

உங்கள் தளத்துக்கு வருவோரை வேறொரு தளத்துக்கு திருப்பி விட.., (redirect to other site)

14 comments

என்னடா இது. வாசிப்போரை வரவழைப்பதே பெரும்பாடாய் இருக்கும்போது, வருவோரை வேறு இடத்துக்கு அனுப்பவா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.




நீங்கள் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்கள். சில நாட்கள் கழித்து அதனை மூடிவிட்டு புதியதாய் வேறொரு வலைப்பூ தொடங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இரண்டு வலைப்பூக்களையும் உங்களால் நிர்வகிக்க முடியாது மற்றும், ஏற்கனவே இருக்கும் வாசகர்களையும் தக்க வைக்க வேண்டும். இதற்கு என்ன வழி. பழைய தளத்துக்கு வரும் வாசகர்களை தானாகவே புதிய தளத்துக்கு வரவழைப்பதுதான் சிறந்த வழி.



எப்படி இவ்வாறு திருப்பி விடுவது என்பதை சொல்கிறேன். இந்த சிறு நிரலை நகலெடுத்து உங்கள் பழைய தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி விட்டாலே போதும்.



<script type='text/javascript'>
location.replace("http://SITE-TO-BE_REDIRECTED");
</script>


அல்லது..,

<script type='text/javascript'>
location.href = "http://SITE-TO-BE_REDIRECTED";
</script>


ப்ளாகரில்,  வழக்கம்போல,

Layout -- > Edit HTML சென்று,




<head> என்பதற்கு மேலே, மேற்கண்டவற்றில் ஏதோவொரு நிரலை ஒட்டி விடுங்கள்.

http://SITE-TO-BE_REDIRECTED என்பதில், மாற்றி அனுப்பப்பட வேண்டிய தள முகவரியை சேர்க்க மறக்காதீர்கள்.

மீண்டும் வருகிறேன்..,

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

நண்பர் நீச்சல்காரன் அவர்களின் மேலுமொரு குறிப்பு.

கீழ்க்கண்ட நிரலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சில உலவிகளில் ஜாவா ஸ்கிரிப்ட் வசதியில்லாமல் இருக்கும் நிலையில் கீழ்க்கண்ட நிரலிகள் மிகுந்த பயன் தரும். இந்த தகவலையும் இணைத்துக்கொள்ளுங்கள். Paste it Just below the HEAD tag {Please use open bracket here}meta content="0;url=http://www.SITE-TO-BE_REDIRECTED.com" http-equiv="REFRESH">

ஜெமினாய்ட் (F) - ஒரு ஜப்பானிய இயந்திரப்பெண். (Geminoid-F)

0 comments
தலைவரின் எந்திரன் வரும் நாளை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம். ரஜினியே ரஜினி போன்ற ஒரு எந்திர மனிதனை உருவாக்குவதைப்பற்றியதாம் கதை. ஆனால், ஜப்பானிய விஞ்ஞானிகள் அச்சு அசல் மனிதப்பெண் போலவே ஒரு இயந்திரப்பெண்ணை உருவாக்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஒசாகா பல்கலைக்கழகத்தைசேர்ந்த intelligent Robotic laboratory - யும், kokoro Co. Ltd என்ற நிறுவனமும் இனைந்து இந்த இயந்திரப்பெண்ணை உருவாக்கியிருக்கிறார்கள்.


நீளமான தலைமுடியுடனும், சிலிக்காவாலான மென்மையான தோலுடனும், அழகான  பல்வரிசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரப்பெண்ணுக்கு - ஜெமினாய்ட்  - (F) என பெயரிடப்பட்டுள்ளது. பெண் பாலினத்தைக்குறிக்கும் வகையில் (F) என குறிப்பிடப்பட்டுள்ளது.





அழகான முக பாவனைகளை வெளிப்படுத்தும் இந்த இயந்திரப்பெண்ணுக்கு, அதற்குரிய கட்டளைகள் அடங்கிய சிப் - கள் உடல் பகுதியில் போருத்தப்பட்டுள்ளதாம். இதனை தயாரித்தவர்கள், மியூசியம் போன்ற இடங்களில் வரவேற்பு பெண்மணியாக இதனை வேலைக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறார்களாம்.









அடுத்த மாதத்திலிருந்து இதனை விற்பனை செய்யப்போவதாக Kokoro நிறுவனம் அறிவித்துள்ளது. விலை ரொம்பவும் குறைவுதான். 10 மில்லியன் யென். (ஏறத்தாழ 110,000 அமெரிக்க டாலர்கள்).




நானும் ஒன்னு வாங்கி வீட்டு வேலைக்கு வச்சுக்கலாம்னு இருக்கேன். நீங்களும் ஒன்னு வாங்குங்களேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

இந்தப் பதிவில் கொஞ்சம் கடின ஆங்கில சொற்கள்.

chip
Robotic laboratory



Wednesday,
Apr
7,

இணையத்தில் தகவல்களை சேமிக்க உதவும் (Virtual hard drive) சேவைகள்.

0 comments

நம் கணினியில் நாம் பயன்படுத்தும் கோப்புகளை உடனுக்குடனே இணையத்தில், நமது  ஜிமெயில் கணக்கிலும் ஹாட்மெயில் கணக்கிலும் சேமித்துக்கொள்ளலாம். இதற்கென கிடைக்கும் சிறு மென்பொருள்களை நமது கணினியில் நிறுவிக்கொண்டாலே போதும்.

 
இந்த டிரைவ்கள்,  நம் கணினியில் C:, D: போலவே இவைகளும் My Computer - ஐ திறந்தவுடனே தெரியும். நமது லோக்கல் டிரைவைப்போலவே காட்சியளிக்கும். நமக்கு தேவையான கோப்புகளை, இதற்குள் இழுத்துப்போட்டுக்கொள்ளலாம் (drag and drop). இவை நேரடியாக நமது இணைய கணக்கில் சேமிக்கப்பட்டு விடும். எங்கு சென்றாலும் இந்த டிரைவை அணுகி கோப்புகளைப்பெறலாம்.


 ஜிமெயில் டிரைவ் பதிவிறக்க : இங்கே.
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் பதிவிறக்க : இங்கே

இந்த பதிவை எழுதும்போது கீழ்க்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தொழில்நுட்பம் சம்பந்தமான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. இனி ஒவ்வொரு பதிவின்போதும் கடின வார்த்தைகளை பட்டியலிடலாமென இருக்கிறேன். தயவு செய்து,  அதற்குரிய சரியான தமிழ் வார்த்தைகள் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்களேன்.

இந்தப்பதிவிற்கான வார்த்தைகள்:

drive
virtual drive
local drive
online service
storage

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



Monday,
Apr
5,

வடிவமைப்பை விளக்க ஒரு மேகக்கணினிய சேவை - மாக்கிங்பேர்ட்

0 comments
(Cloudcomputing service to illustrate the layout - Mockingbird)




நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துவதாகக்கொள்வோம். உங்கள் நிறுவனத்துக்கு ஒரு இணையதளம் தொடங்க இருக்கிறீர்கள். அந்த பொறுப்பை ஒரு தனியார்வசம் ஒப்படைப்பதாகக்கொள்வோம். உங்கள் தளம் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் தோன்றுகிறதோ அதற்கு ஒரு வடிவமைப்பு (லே-அவுட்) செய்து அந்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டால் அந்த நிறுவனம் அந்த வடிவத்தைக்கொண்டு தனது வேலையைத்தொடங்கி விடும்.




அதுபோல, நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில், மென்பொருள் திட்ட மேலாளராக (Software project manager) இருப்பதாகக்கொள்வோம். நிரல் எழுதும் பணியாளர்களிடம், மென்பொருளின் முகப்பு, தகவல் உள்ளீடு மென்படிவம் (Forms) போன்றவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை சில நிமிடங்களில் செய்து அவர்களிடம் கொடுத்து விட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களின் வடிவமைப்பு இருக்கும். இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம்,. இந்த, மாதிரி வடிவமைப்பு செய்ய பயன்படும் தளம்தான்.





http://www.gomockingbird.com

இது ஒரு மேகக்கணினிய சேவையாகும். இந்த தளத்தில் சென்று, காணொளி எங்கு வரவேண்டும், படம் எங்கு வரவேண்டும், தலைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என வடிவமைத்து, PDF கோப்பாகவோ அல்லது PNG கோப்பாகவோ சேமித்துக்கொள்ளலாம். மேலும், மற்றவர்களிடம் Embedding மூலமும் பகிர்து கொள்ளலாம்.





ஒருமுறை பார்வையிட்டுப்பாருங்களேன்.
உங்களுக்கும் கூட பயன்படலாம்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


Saturday,
Apr
3,

செயல்வழிப்படம் (flow chart) வரைய ஒரு கட்டற்ற இலவச மென்பொருள்.

2 comments
செயல்வழிப்படம் (flow chart),  கணினி வலையமைப்புப்படம் (Network diagram), மின் சுற்றுப்படம் (electric circuit diagram) போன்றவை வரைய ஒரு கட்டற்ற இலவச மென்பொருள்.




மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விஷியோ (Vision) மென்பொருளுக்கு மாற்றாக, ஒரு கட்டற்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் "டையா" (Dia).






இது விஷியோ போல இல்லாமல், சிறிய அளவான மென்பொருள் என்பதால், சுலபமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். உபயோகிப்பதில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் விஷியோவுக்கு ரொம்பவும் குறைந்த மென்பொருள் அல்ல. விஷியோவில் உருவாக்கப்பட்ட கோப்பை இதில் திறந்து பயன்படுத்த இயலாது என்பதுதான் ஒரு சிறு குறை.





இதனை பதிவிறக்க இங்கு சொடுக்குங்கள்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


Blog Widget by LinkWithin