சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors).
Labels:
மென்பொருள்கள்
கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் டெக்ஸ்ட் எடிட்டர்கள் தேவையானதாகத்தான் இருக்கின்றன. அதிலும், நிரல் எழுதுவோருக்கும், வலையமைப்பு செய்வோருக்கும் டெக்ஸ்ட் எடிட்டர்கள் மிக முக்கிய தேவையாக இருக்கின்றன.
விண்டோஸ் இயங்குதளத்தில், நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டர் இணைந்தே வந்தாலும், அதில் சில ஆப்ஷன்கள் இல்லாதது வருத்தம் அளிக்கக் கூடியதுதான். விசை எண்கள், பல்வேறு மொழிகளை ஆதரிக்கும் தன்மை போன்றவை இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம்தான்.
(மென்பொருளை தரவிறக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)
1. Notepad++

இலவசமாகக்கிடைக்கும் இந்த மென்பொருள் பல்வேறு நிரல் மொழிகளை ஆதரிக்கிறது. மிகச்சிறிய அளவில் இருக்கிறது.
2. TotalEdit

வலை தள வடிவமைப்பு மொழிகளான, PHP, HTML, Javascript போன்றவற்றில் பணிபுரிவோருக்கு, பணியை எளிதாக்க இந்த எடிட்டர் பயன்படுகிறது. ஆட்டோகம்ப்ளீட் வசதி, சின்டக்ஸ் கலரிங் மற்றும் பல வசதிகள் இருக்கிறது.
3. Notepad2

இதுவும் பல மொழிகளை ஆதரிக்கிறது.
4. XML Notepad 2007.

XML மொழியில், நிரல் எழுதும் பயனர்களுக்கு, இத மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிரல்களில் மனித தவறுகளை சுட்டிக்காட்டும் வசதி, XML டேகுகளை பல்வேறு நிறங்களில் வித்தியாசப்படுத்தும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சம்.
5. ConTEXT

C/C++, Delphi/Pascal, Java, Java Script, Visual Basic, Perl/CGI, HTML, CSS, SQL, FoxPro, 80x86 assembler, Python, PHP, Tcl/Tk, XML, Fortran, Foxpro மற்றும் InnoSetup போன்ற மொழிகளை ஆதரிக்கிறது. இது மிகவும் சிறிய அளவிலான மென்பொருள். குறைவான நினைவகத்தை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
6.jEdit

ஜாவாவில் எழதப்பட்ட மென்பொருள். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் தளங்களில் செயல்படும் வகையில் உள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளுக்கு நீட்சிகளும் கிடைக்கிறது.
7.SourceEdit

பல்வேறு டூல்களின் வசதியுடன் வரும் இந்த எடிட்டரும், நிரல் எழுதுவோருக்கும், மற்ற பயனர்களுக்கும் எளிதாகப்பயன்படுத்தும் வகையில் உள்ளது.
8. VIM Text Editor

VIM என்பது லினக்ஸ் இயங்குதளத்தில் பயன்படும் vi எடிட்டரின் improved வெர்ஷன் எனப்படுகிறது.
ஆனால் கடைநிலை பயனரும் பயன்படுத்தும் வகையில் எளிதல்ல. இதுவும் விண்டோஸ், லினக்ஸ், மேக் தளங்களில் இயங்கக்கூடியது.
9.E-Text Editor

மல்டிடேபிங் வசதியுடன் வரும் இந்த எடிட்டர், பார்ப்பதற்கு எளிதாகவும், பயன்படுத்த வசதியாகவும் இருக்கிறது.
10.TextPad

பத்து மொழிகளுக்கான ஸ்பெல்செக்கர் வசதி, வார்ம்ஸ்டார்ட் feature எனப்படும், கடைசியாக, டேப்களில் க்ளோஸ் செய்யாமல் எடிட்டரை மூடும்போது பயனில் இருந்த பைல்களை தானாக திறக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது.
உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,
பா.வேல்முருகன்.
6 comments:
நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சசி. உங்களின் பின்னூட்டங்கள் என் மனதை நிறைக்கின்றன. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நன்றி. தெரிந்து கொண்டேன்..
please try to move all nontech posts to a separate blog or all tech posts to a separate blogs.
you write well.
If you do as above you can be added to top 20 tamil tech blogs list subject to your enough ranking.
நன்றி சாய்தாசன் சார். உங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் அறிவுரைப்படி இனி, தொழில்நுட்பமல்லாத பதிவுகளை தனியாகப் பிரித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
நன்றி ஸ்ரீராம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். அடிக்கடி வாருங்கள்.
Post a Comment