Thursday,
Feb
11,

எல். ஜி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மின்னணு செய்தித்தாள்.

எல். ஜி. நிறுவனம் உலகின் முதல் மின்னணு செய்தித்தாளை அறிமுகப்படுத்தியுள்ளது.







14.1 இன்ச் அளவில் வடிவமைத்துள்ளது. இது பார்ப்பதற்கு நாம் எப்போதும் பார்க்கும் செய்தித்தாள் போலவே தோற்றமளிக்கிறது. தெளிவான படங்கள் , சுலபமாய் படிக்கும்படியான எழுத்துக்களுடன் அமைந்துள்ளது.




180 டிகிரி வரை மடித்துக்கொள்ள முடியும் இந்த தாள், தினமும் பயன்படுத்தி தூக்கியெறியும் செய்திதாளுக்கு மாற்றாக அமையும். தினசரி புதிதாக படங்கள் மாறும்பொழுது மட்டும், மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால் இது அதிகமாக மின் சக்தியை செலவிடுவதில்லை என சொல்லும் எல்.ஜி நிறுவனம் 2010 முதல் இந்த தாள்கள் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

1 comments:

ஸ்ரீராம். said...

தகவலுக்கு நன்றி. தினமும் புதிதாய் வாங்கவேண்டுமா? அல்லது ரீசார்ஜ் செய்வது போல எதிலாவது சொருகி செய்திகளை அப்டேட் செய்து கொள்ள வேண்டுமா என்று சொல்லவில்லையே...

Post a Comment

Blog Widget by LinkWithin