Wednesday,
Feb
24,

வழக்கம்போல ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நாமம்.



எல்லா வருடங்களைப்போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லாத ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார் மம்தா பானர்ஜி.





அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு பொது மனிதனாக இருந்து பார்த்தால் இதுவரை தமிழகத்திற்கு எந்தவொரு ரயில்வே அமைச்சரும் நல்ல திட்டங்கள் போட்டதாக தெரியவில்லை. ரயில்களே எட்டிப்பார்க்காத நகரங்கள் மட்டுமல்ல, மாவட்டங்களே தமிழ்நாட்டில் உள்ளன. போடப்படும் ஒரு சில திட்டங்களும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்து வருகின்றன. புதிய ரயில் திட்டங்களுக்கு, தமிழகத்தை, மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. மாநில அரசும் குரல் கொடுப்பதில்லை.



எங்கள் தேனி மாவட்ட மக்களின், தேனி - திண்டுக்கல் ரயில்பாதை திட்டம் வாழ்நாள் கனவாகவே இருந்து வருகிறது. குறைந்தபட்சம், போடியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரயிலையாவது அகலரயில்பாதையாக மாற்றினால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்.



தமிழக அரசு இது போன்ற மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து, இனி வரும் காலங்களிலாவது மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தினால் தமிழக மக்களின் உரிமைகள் மதிக்கப்படும்.








0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin