வேட்டைக்காரன் - என்னோடு என் நண்பர்களின் கருத்து.
(இது கண்டிப்பாய் விமர்சனம் அல்ல).
முதல் காட்சியில் விஜயின் ரோல் மாடல் தேவராஜ் ஐ.பி.எஸ் அறிமுகம். - ஒரு ஹீரோவின் ரோல் மாடலை இன்னும் கொஞ்சம் கம்பீரமாய் காட்டியிருக்கலாம். முதல் காட்சியிலேயே ஒரு குடிகாரன் போல காட்டி பின்னர் அவரை நல்லவர் என்று காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை.ஒருவேளை ஹீரோவின் into பாதிக்கும் என நினைத்தார்களோ என்னவோ.
ஸ்ரீ ஹரி பொருத்தமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் மனதில் ஓட்ட மறுக்கிறது. பிரகாஷ் ராஜ் போல ஒருவர் இருந்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.
விஜய் அறிமுகம் - தேவராஜை தவிர படத்தில் வரும் எல்லா போலீசுமே மோசமானவர்கள் போல காட்டியிருப்பது கொஞ்சம் அபத்தமாய் தெரிகிறது. தப்பு பண்றது போலீசா இருந்தாலும் ஹீரோ தட்டி கேப்பார்ங்கறதுக்காக ஓபனிங் சீன்ல ஒரு போலீஸ் தண்ணி அடித்து விட்டு ஜீப் ஓட்டுவது போல காட்டியிருப்பது தேவையா என்று தோன்றுகிறது.
விஜய் ஓபனிங் சீனில் அடக்கி வாசித்திருக்கிறார். இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. வில்லு படத்தில் பாட்டில் ஒரு intro-வும், பைட்- டில் ஒரு intro-வும் கொடுத்திருப்பார்கள். இந்த படத்தில் கொஞ்சம் மாற்றி, சண்டையை தவிர்த்து, பாட்டையே பைட் ஆக மாற்றி விட்டார்கள். பாட்டை கேட்டே ஓடி விடுவது போல காட்டியிருப்பது கொஞ்சம் காமெடி தான்.
சிமென்ட் போஸ்ட்-டை கையால் உடைக்கும் போது அதிர்வது போல தெரிய வேண்டும் என மெனக்கெட்டிருப்பார்கள் போல. கிராபிக்ஸ் நன்றாய் தெரிகிறது.
ரயிலில் அனுஷ்கா வை பார்க்கும்போது, கையை இடுப்பில் வைத்துக்கொண்டு விஜய் பார்ப்பது அழகு. பேமிலி ப்ளான்னிங் பண்ணிட்டோம் என்று சொல்வது செம ரகளை.
கல்லூரியில் உமாவுக்காக பரிந்து லெக்சரருக்கே புத்தி சொல்வது ரொம்ப ரொம்ப ஓவர். அதிலும், எல்லா காட்சிகளிலும் சட்டையில் பட்டனே போடாமல் இருப்பது அவர் காலேஜ் ஸ்டூடன்ட் போல தெரியவில்லை. சாதாரண காலேஜ் ஸ்டூடன்ட் போல காட்டி பின்னர் விஸ்வரூபம் எடுப்பது போல காட்டியிருந்தால் பாட்ஷா அளவுக்கு கூட கொண்டு போயிருக்கலாம்.
நாயகியின் பாட்டிக்கு உதவுவது, பாட்டி மனசில் இடம் பிடிப்பது பின் கொஞ்சம் கொஞ்சமாய் பேத்தி மனதில் இடம் பிடிப்பது... ஆ வ் ஹ் கொட்டாவி வருகிறது.
காதல் சீன்களிலும், காமெடி சீன்களிலும் விஜயின் முக பாவம் சூப்பர். ஆனால் கண்ணை சிமிட்டி சிமிட்டி காமெடி பண்ணுவது, அடிக்கடி பார்ப்பது போல இருப்பதால் கொஞ்சம் அலுப்பு.
கட்சிகளில், அனுஷ்கா விஜயை விட உயரமாய் இருக்கிறார். அழகுதான் என்றாலும், கொஞ்சம் முதிர்ச்சியாய் தெரிகிறார் (அருந்ததி பார்த்த பாதிப்போ என்னவோ). டி.வி ப்ரோக்ராம்களில் சொல்வது போல "கெமிஸ்ட்ரி" அந்த அளவுக்கு எடுபடவில்லை என்று தோன்றுகிறது.
விஜயை, என்கவுண்டர் செய்ய துரத்தும் போது, குண்டுகள் துளைக்காமல் விஜய் தப்பிப்பது ஹீரோயிசம் என்று நினைத்தால், விஜயை காப்பாற்ற தேவராஜ் அனுப்பிய போலீஸ் குறி தவறி சுட்டார்கள் எனும்போது புஸ் - என்று ஆகி விடுகிறது.
அருவியில் இருந்து குதிப்பது... ஓவர்தான் என்றாலும், இன்னும் கொஞ்சம் தத்ரூபமாய் காட்டியிருக்கலாமோ. சண்டைக் காட்சிகளில் தாவுவது போல கை கால்களை விறைப்பாக வைத்து கொள்கிறார். இப்படி குதித்தால் கண்டிப்பாய் கால் உடைவது நிச்சயம். ஆனால் ஹீரோ ஆச்சே. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. வில்லன் - சலீம் கௌஸ். ரகுவரனுக்கு நல்ல போட்டியாய் வருவார் என்று சொல்லப்பட்டவர். எனக்கு தெரிந்து "வெற்றி விழா" படத்திலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி பேசுகிறார்.
பின்பாதியில், என்னவோ செய்யப்போகிறார் என்றால் விஜயை கூட்டிப்போய் சுற்றுலா காட்டுகிறார். பயமுறுத்துகிறாராம்.
வில்லனை எதிர்க்க சாயாஜி ஷிண்டே- வை புத்திசாலித்தனமாய் வில்லன் பக்கம் திருப்பும் காட்சிகள் விறு விறுப்பாய் தொடங்குகிறது. இரண்டு காட்சிகளோடு சரி.பின்னர் வழக்கம் போல காதல், நட்பு, பாடல் காட்சிகள் ஸ்பீட் ப்ரேக் போடுகிறது. பின் பாதியில் அதை குறைத்திருக்கலாம்.
ஹீரோவை பலி வாங்க நண்பனை கொல்வதும், நாயகியை கடத்துவதும், ஆதரப்பழசான டெக்னிக். வேறு எதாவது புத்திசாலிதனமாய் யோசித்திருக்கலாம்.
ரெண்டு வில்லன்களை அழிப்பதும் கொஞ்சம் மொக்கையாய் தெரிகிறது. நண்பனை கொன்ற குரூரத்தை கண்களை தேக்கி, இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டியிருக்கலாம்(திருப்பாச்சி, போக்கிரி போல).
விஜயின் டான்ஸ் காட்சிகள் கொஞ்சம் குறைச்சல்தான். "என் உச்சி மண்டைல " பாட்டில் டான்ஸ் சூப்பர்.
மொத்தத்தில், விஜயின் மாஸ் காட்டுவதற்கு மட்டுமே வந்துள்ளது வேட்டைக்காரன்.
விஜய் ரசிகர்கள் ரசித்து பார்க்கலாம்.
0 comments:
Post a Comment