அண்மைய பதிவுகள்

Showing posts with label மென்பொருள்கள். Show all posts
Showing posts with label மென்பொருள்கள். Show all posts

மடிக்கணினிகளில் கணினித்திரையை அணைத்து வைக்க..

2 comments
நாம் பயன்படுத்தும் மேசைக்கணினியில், நாம் பயன்படுத்தாதபோது கணினித்திரையை அணைத்து (manually) வைப்பதன் மூலம், மின்பயன்பாட்டை குறைக்கலாம். அனால், பெரும்பாலான மடிக்கணினிகளில் அது போன்ற பொத்தான்கள் இருப்பதில்லை.

அந்த செயலை, இந்த சிறிய செயலியைக் (application) கொண்டு நிறைவேற்றலாம்.

இங்கு சொடுக்கி இந்த செயலியை பதிவிறக்குங்கள்.

பின்னர் இதற்கு கணினியின் மேசைத்தளத்தில் (desktop) ஒரு குறுக்கு வழி படவுரு (Short cut icon) ஒன்றை உருவாக்குங்கள்.

பின்னர், இந்த படவுருவை வலச்சொடுக்கு (right click) செய்து, பண்புகள் (properties) என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதில் சுருக்கு விசை (Short cut key) என்பதில் ஏதாவதொரு விசையை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்போது உங்கள் கணினித்திரையை இந்த சுருக்கு விசை கொண்டே அணைக்கலாம்.

மடிக்கணினிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


இணையத்தில் தகவல்களை சேமிக்க உதவும் (Virtual hard drive) சேவைகள்.

0 comments

நம் கணினியில் நாம் பயன்படுத்தும் கோப்புகளை உடனுக்குடனே இணையத்தில், நமது  ஜிமெயில் கணக்கிலும் ஹாட்மெயில் கணக்கிலும் சேமித்துக்கொள்ளலாம். இதற்கென கிடைக்கும் சிறு மென்பொருள்களை நமது கணினியில் நிறுவிக்கொண்டாலே போதும்.

 
இந்த டிரைவ்கள்,  நம் கணினியில் C:, D: போலவே இவைகளும் My Computer - ஐ திறந்தவுடனே தெரியும். நமது லோக்கல் டிரைவைப்போலவே காட்சியளிக்கும். நமக்கு தேவையான கோப்புகளை, இதற்குள் இழுத்துப்போட்டுக்கொள்ளலாம் (drag and drop). இவை நேரடியாக நமது இணைய கணக்கில் சேமிக்கப்பட்டு விடும். எங்கு சென்றாலும் இந்த டிரைவை அணுகி கோப்புகளைப்பெறலாம்.


 ஜிமெயில் டிரைவ் பதிவிறக்க : இங்கே.
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் பதிவிறக்க : இங்கே

இந்த பதிவை எழுதும்போது கீழ்க்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தொழில்நுட்பம் சம்பந்தமான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. இனி ஒவ்வொரு பதிவின்போதும் கடின வார்த்தைகளை பட்டியலிடலாமென இருக்கிறேன். தயவு செய்து,  அதற்குரிய சரியான தமிழ் வார்த்தைகள் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்களேன்.

இந்தப்பதிவிற்கான வார்த்தைகள்:

drive
virtual drive
local drive
online service
storage

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



செயல்வழிப்படம் (flow chart) வரைய ஒரு கட்டற்ற இலவச மென்பொருள்.

2 comments
செயல்வழிப்படம் (flow chart),  கணினி வலையமைப்புப்படம் (Network diagram), மின் சுற்றுப்படம் (electric circuit diagram) போன்றவை வரைய ஒரு கட்டற்ற இலவச மென்பொருள்.




மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விஷியோ (Vision) மென்பொருளுக்கு மாற்றாக, ஒரு கட்டற்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் "டையா" (Dia).






இது விஷியோ போல இல்லாமல், சிறிய அளவான மென்பொருள் என்பதால், சுலபமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். உபயோகிப்பதில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் விஷியோவுக்கு ரொம்பவும் குறைந்த மென்பொருள் அல்ல. விஷியோவில் உருவாக்கப்பட்ட கோப்பை இதில் திறந்து பயன்படுத்த இயலாது என்பதுதான் ஒரு சிறு குறை.





இதனை பதிவிறக்க இங்கு சொடுக்குங்கள்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


(QR Code) QR குறியீடு பற்றி தெரிந்து கொள்வோம். - உங்கள் தளத்துக்கான QR குறியீடு.

2 comments


நாம் அனைவருக்கும் பட்டைக்குறியீடு (Bar Code) பற்றி தெரிந்திருக்கும்.
பட்டைக்குறியீட்டில் தகவல்களைப்பதிந்து அவற்றிற்குரிய படிப்பான்கள் மூலம் தகவல்களை படிக்கும் முறை பற்றி நமக்கு நன்கு தெரியும். பட்டைக்குறியீட்டிலிருந்து தகவல்களைப் பெரும் வேகமும், அதன் துல்லியமும், அதனை மிகவும் பிரபலப்படுத்தியது. மேலும் அதிக தகவல்களை, பட்டைக்குறியீடில் பரிமாற, இரு பரிமாண பட்டைக்குறியீடு பயன்படுகிறது.

இரு பரிமாண பட்டைக்குறியீட்டில், பல முறைகள் உள்ளன. நாம் இந்தப்பதிவில், QR குறியீட்டைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

QR code என்னும், இரு பரிமாண பட்டைக்குறியீடு "டென்சோ-வேவ்" என்ற  நிறுவனத்தால் 1994 - ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. QR என்பது Quick Response என்பதன் சுருக்கமாகும்.


QR குறியீட்டில் 7089 எண்களும் (numeric) , 4296 எண்ணெழுத்துக்களும் (alphanumeric) குறியிடும் ஆற்றல் மிகுந்தவை. இதன் நான்கு புறத்திலும் இருக்கும் சதுர வடிவத்தைக்கொண்டு  360 அளவு கோணத்திலிருந்தும் இதனை படித்துணர முடியும் என்பது இதன் சிறப்பாகும். அதே போல, ஒரே குறியீட்டை பல பாகங்களாகப்பிரித்து, தனித்தனியே தகவல்களைப்பெறவும் முடியும்.

நீங்கள் எங்கோ ஒரு QR குறியீடைக்  காண்கிறீர்கள். அதில் பொதிந்திருக்கும் தகவல்களை அறிய உங்கள் கைபேசியில், படமெடுக்கும் வசதியும் (Camera), படிப்பான் மென்பொருளும் இருந்தால் போதும். அதனைக்கொண்டே அதிலிருக்கும் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். மிக அதிகமாய், இணைய முகவரிகளை பதிந்து வைக்க QR Code பயன்படுகிறது. கைபேசி QR படிப்பான் மென்பொருள் பல தளங்களில் கிடைக்கின்றன.






படிப்பான் மென்பொருள் வழங்கும் ஒரு தளம் காண இங்கு சொடுக்கவும்.

இந்தக் காணொளியைப்பாருங்கள்.


QR குறியீடு பற்றி மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.

உங்கள் ப்ளாகைப்பற்றிய QR குறியீடு பெற நீங்கள் கஷ்டப்பட வேண்டியதே இல்லை. கீழே உள்ள நிரலை உங்கள் உலாவியில் முயற்சித்தாலே போதும். கூகுல், உங்கள் ப்ளாகிற்கான QR குறியீட்டைக்கொடுத்து விடும். கீழே உள்ளது கனா காலத்திற்கான குறியீடு.


http://chart.apis.google.com/chart?cht=qr&chl=http://YOUR-WEBSITE-ADDRESS/mobile&chs=120x120

மேலும் பல படிப்பான் மென்பொருள்கள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.


நன்றி :

http://www.qrme.co.uk
http://www.denso-wave.com
http://chart.apis.google.com
http://en.wikipedia.org/wiki/QR_Code


மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

இந்த தகவல் பலரையும் சென்றடைய இங்கு வாக்களித்து ஆதரியுங்கள்.

 

உங்கள் டிவைஸ் டிரைவர் மேம்படுத்தப்பட்டதுதானா (Is your device driver updated) ?

3 comments
நம் கணினியில் பல்வேறு வன்பொருட்கள் இணைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் அதற்கான டிரைவர் நிருவியிருப்போம். அந்த டிரைவர் மென்பொருட்கள், அதற்குப்பின் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். அவ்வாறு மேம்படுத்தப்பட்ட டிரைவர்களை தேடித்தேடி நிறுவ இயலாது.









எந்தெந்த டிரைவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டிரைவர்கள் உள்ளன, அவற்றிக்கான தரவிறக்கங்கள் குறித்த தகவல்களை கண்டுபிடித்துக்கொடுக்க் என்றே ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவி நமது கணினியை ஸ்கேன் செய்தால், அழகாய் பட்டியலிடுகிறது. வேண்டுமானால் மேம்படுத்தப்பட்ட டிரைவரை நிறுவிக்கொள்ளலாம்.






உபயோகித்துப்பாருங்களேன்.

தரவிரக்கச்சுட்டி : இங்கே

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்


நீங்கள் புதைத்த பைலை தோண்டி எடுக்க ஓர் மென்பொருள்.

3 comments
diskdigger என்பது இணையத்தில் கிடைக்கும், விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு சட்டரீதியான இலவச மீட்பு மென்பொருள்.





இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதனை கணினியில் நிறுவ வேண்டியதில்லை. 1.44 MB அளவே உள்ளதால், இதனை பென் டிரைவிலேயே எடுத்துச்செல்லலாம். exe பைலை க்ளிக் செய்தாலே போதும். நீங்கள் டெலீட் செய்த பைல்களை எல்லாம் காட்டி விடும். FAT12, FAT16, FAT32, exFAT, மற்றும் NTFS பைல் சிஸ்டம்களை ஆதரிக்கிறது.





தரவிறக்கி
வைத்துக்கொள்ளுங்களேன்.

எப்போதாவது
உதவும்.


தரவிறக்க
சுட்டி : இங்கே


மீண்டும் வருகிறேன்.


அன்புடன்..,


பா வேல்முருகன்.



அப்படி என்ன இருக்கிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9 இல். ?

0 comments
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலாவியான, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடுத்த பதிப்பான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9 , பயனாளர்களிடையே பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.





மார்க்-அப் லாங்குவேஜின் அடுத்த படியான, HTML 5 - வை ஆதரிப்பது, மேலும் இதனுடன் இணைந்துள்ள, மைக்ரோசாப்டின் ஜாவா ஸ்க்ரிப்ட் இன்ஜின் ஆகியவை பயனாளர்களுக்கு இணையத்தில் வேகமாக உலவும் அனுபவத்தை தரக்கூடியது என தெரிவிக்கிறது மைக்ரோசாப்ட்.

கடந்த பதினாறாம் தேதி, இதன் முதல் டெவெலப்பர் ப்ரிவ்யூ வெளியிடப்பட்டது. இன்னும் மேம்படுத்தல் நிலையிலேயே இருக்கும் IE9, அதன் ப்ரிவ்யூவைப் பார்க்கும்போது, இதனை வடிவமைக்க மைக்ரோசாப்ட் அதிகமாக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. தனது போட்டி உலாவிகளான, பயர்பாக்ஸ், சபாரி, குரோம் ஆகியவற்றை சமாளிக்க, IE9 நிறைய மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், விண்டோஸ் விஸ்டா SP2 பதிப்புக்குப்பிந்தைய தளங்களில் மட்டுமே செயல்படும் என சொல்லப்படுகிறது.

IE9 டெவெலப்பர் ப்ரிவ்யூ தரவிறக்கம் செய்ய, www.IETestDrive.com.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


உங்கள் ப்ளாகை Back-Up எடுக்க அருமையான மென்பொருள்.

2 comments

உங்கள் ப்ளாகை Back-Up எடுக்க ஒரு அருமையான மென்பொருள் இணையத்தில் உள்ளது. இதனை தரவிறக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இதனை, உங்கள் கணினியில் நிறுவிய பின், வரும் விண்டோவில், Add/Update/Remove blogs என்பதனை தேர்வு செய்யுங்கள்.






பின்னர் உங்கள் ப்ளாகரின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து, Log into blogger to get blogs என்பதை க்ளிக் செய்யுங்கள்.





உங்கள், ப்ளாகுகள் அனைத்தும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு ப்ளாகையும் தேர்வு செய்து, சேமிக்க வேண்டிய போல்டரை கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.





மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.




சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors).

6 comments
சிறந்த பத்து பெண்மணிகளைப்பற்றி பதிவுலகம் தொடர்பதிவு எழுதி, பட்டியல் போட்டு கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலக கோடீஸ்வரகள் பற்றி Forbes பட்டியல் போட்டிருக்கும் வேளையில், உங்களுக்காக, சிறந்த பத்து இலவச டெக்ஸ்ட் எடிட்டர்களை நானும் பட்டியல் இடுகிறேன்.

கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் டெக்ஸ்ட் எடிட்டர்கள் தேவையானதாகத்தான் இருக்கின்றன. அதிலும், நிரல் எழுதுவோருக்கும், வலையமைப்பு செய்வோருக்கும் டெக்ஸ்ட் எடிட்டர்கள் மிக முக்கிய தேவையாக இருக்கின்றன.

விண்டோஸ் இயங்குதளத்தில், நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டர் இணைந்தே வந்தாலும், அதில் சில ஆப்ஷன்கள் இல்லாதது வருத்தம் அளிக்கக் கூடியதுதான். விசை எண்கள், பல்வேறு மொழிகளை ஆதரிக்கும் தன்மை போன்றவை இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

(மென்பொருளை தரவிறக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)


1. Notepad++





இலவசமாகக்கிடைக்கும் இந்த மென்பொருள் பல்வேறு நிரல் மொழிகளை ஆதரிக்கிறது. மிகச்சிறிய அளவில் இருக்கிறது.

2. TotalEdit




வலை தள வடிவமைப்பு மொழிகளான, PHP, HTML, Javascript போன்றவற்றில் பணிபுரிவோருக்கு, பணியை எளிதாக்க இந்த எடிட்டர் பயன்படுகிறது. ஆட்டோகம்ப்ளீட் வசதி, சின்டக்ஸ் கலரிங் மற்றும் பல வசதிகள் இருக்கிறது.

3. Notepad2





இதுவும் பல மொழிகளை ஆதரிக்கிறது.

4. XML Notepad 2007.




XML மொழியில், நிரல் எழுதும் பயனர்களுக்கு, இத மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிரல்களில் மனித தவறுகளை சுட்டிக்காட்டும் வசதி, XML டேகுகளை பல்வேறு நிறங்களில் வித்தியாசப்படுத்தும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சம்.

5. ConTEXT





C/C++, Delphi/Pascal, Java, Java Script, Visual Basic, Perl/CGI, HTML, CSS, SQL, FoxPro, 80x86 assembler, Python, PHP, Tcl/Tk, XML, Fortran, Foxpro மற்றும் InnoSetup போன்ற மொழிகளை ஆதரிக்கிறது. இது மிகவும் சிறிய அளவிலான மென்பொருள். குறைவான நினைவகத்தை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

6.jEdit





ஜாவாவில் எழதப்பட்ட மென்பொருள். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் தளங்களில் செயல்படும் வகையில் உள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளுக்கு நீட்சிகளும் கிடைக்கிறது.

7.SourceEdit




பல்வேறு டூல்களின் வசதியுடன் வரும் இந்த எடிட்டரும், நிரல் எழுதுவோருக்கும், மற்ற பயனர்களுக்கும் எளிதாகப்பயன்படுத்தும் வகையில் உள்ளது.

8. VIM Text Editor




VIM என்பது லினக்ஸ் இயங்குதளத்தில் பயன்படும் vi எடிட்டரின் improved வெர்ஷன் எனப்படுகிறது.
ஆனால் கடைநிலை பயனரும் பயன்படுத்தும் வகையில் எளிதல்ல. இதுவும் விண்டோஸ், லினக்ஸ், மேக் தளங்களில் இயங்கக்கூடியது.

9.E-Text Editor





மல்டிடேபிங் வசதியுடன் வரும் இந்த எடிட்டர், பார்ப்பதற்கு எளிதாகவும், பயன்படுத்த வசதியாகவும் இருக்கிறது.

10.TextPad




பத்து மொழிகளுக்கான ஸ்பெல்செக்கர் வசதி, வார்ம்ஸ்டார்ட் feature எனப்படும், கடைசியாக, டேப்களில் க்ளோஸ் செய்யாமல் எடிட்டரை மூடும்போது பயனில் இருந்த பைல்களை தானாக திறக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது.


உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.






உங்கள் கோப்புகளை Back-up எடுக்க, சிறந்த , இலவச மென்பொருள்கள்.

4 comments

விண்டோஸ் இயங்குதளத்தில், நாம் மாற்றம் செய்யும் கோப்புகளையும், புதியதாய் ஏற்படுத்திய கோப்புகளையும், தானாகவே Backup எடுத்து வைக்கக்கூடிய அருமையான மென்பொருள்கள்.

ஒரு நெட்வொர்க்கில், பல கணினிகள் இணைந்திருப்பின், ஒரு கணினியின் backup இன்னொரு கணினியில் தானாக சேமிக்கவும், இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.

பயன்படுத்திப்பாருங்கள்.

1. AceBackup





இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.



2. TaskZip





இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.


3. WHL Backup

இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.

4. WorkGroup Backup




இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.

மீண்டும் வருகிறேன்..

அன்புடன்..

பா.வேல்முருகன்.

ஸ்க்ரீன் ஷாட் (Screen Shot) எடுக்க ஒரு எளிய மென்பொருள்.

1 comments
பொதுவாக நம் கணினியில் திரையில் தெரிவதை ஒரு கோப்பாக சேமிக்க, பிரிண்ட் ஸ்க்ரீன் (Print Screen) பட்டனை அழுத்தி, பின்னர் எம்.எஸ்.பெயின்ட் (MS Paint) சென்று பேஸ்ட் செய்து பின்னர் அதில் தேவையானவற்றை மட்டும் கட் செய்து கோப்பாக சேமிப்போம்.






இது சில நேரங்களில் கஷ்டமானதாக இருக்கும். ஒரு எளிய மென்பொருள் மூலம், பிரிண்ட் ஸ்க்ரீன் செய்யும் போதே தேவையான பகுதியை மட்டும் பிரித்து தானாகவே ஒரு பைலாக சேமிக்கும்படி செய்யலாம்.






சேமித்த பைலை, Rapidshare, sendSpace, Flickr, Imageshack, TinyPic, ImageBam, twitpic, MindTouch போன்ற தளங்களில் உடனே அப்லோட் செய்யலாம்.


இந்த சாப்ட்வேர் தேவையா என நீங்கள் நினைக்கத்தோன்றும். ஆனால் இதனை உபயோகிக்க தொடங்கினால், இதன் பயன் மிகவும் அருமையானதாக இருக்கிறது.

இதனை தரவிறக்க, இங்கு க்ளிக் செய்யவும்.




ரேபிட்ஷேர் தளத்திலிருந்து பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்க...

2 comments

ரேபிட்ஷேர் தளத்திலிருந்து நாம் ஒரு கோப்பினை மட்டுமே தரவிறக்க இயலும். ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளை தரவிறக்க முயன்றால் ப்ரீமியம் அக்கவுன்ட் பயனர் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் தரவிறக்க இயலும் எனச்சொல்லி ப்ரீமியம் அக்கவுன்ட் தொடங்க வலியுறுத்தும்.

ஆனால், ரேபிட்ஷேர் டவுன்லோட் ஆக்ஸலரேட்டர் மென்பொருள் உதவியுடன் ஒரே நேரத்தில் பல கோப்புகளை தரவிறக்கிக்கொள்ளலாம்.

அந்த மென்பொருளை தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.






இந்த மென்பொருளை நிறுவ, உங்கள் கணினியில் .Net framework நிறுவப்பட்டிருக்க வேண்டும்.


மென்பொருளை தரவிறக்கி என்னென்ன கோப்புகளை தரவிறக்கம் செய்ய வேண்டும் என சுட்டிகளை கொடுத்து விட்டால், அனைத்தையும் தரவிறக்கி வைத்து விடும்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.




Blog Widget by LinkWithin