அண்மைய பதிவுகள்

கூகிள் Buzz போல ட்விட்டரை ஜிமெயிலில் இணைக்க...

5 comments
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள Buzz தானாகவே ஜிமெயிலின் இடப்புறத்தில் உட்கார்ந்து கொண்டது. அது போல ட்விட்டரையும் வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அதைக் கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.

ஜிமெயில் ஓபன் செய்து labs பகுதிக்கு செல்லுங்கள்.




அதில்
Add any Gadget by URL என்னும் ஆப்ஷனை எனாபில் செய்து கொள்ளுங்கள். பின்னர் சேமித்து வெளியேறுங்கள்.





வெளியில் வந்த பிறகு ஜிமெயிலின் வலது ஓரத்தில் இருக்கும் settings க்ளிக் செய்து Gadgets டேபை செலக்ட் செய்யுங்கள்.

அதில் Add a Gadget by its URL என்பதன் கீழ் கீழே கொடுத்துள்ள code - ஐ காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

https://twittergadget.appspot.com/gadget-gmail.xml






பின்னர் ஜிமெயிலின் முகப்பு பக்கத்தில் பாருங்கள். கீழே ட்விட்டர் இணைந்திருக்கும். அதனை க்ளிக் செய்து login செய்து கொள்ளுங்கள்.






குறிப்பு : இதைப்போல facebook - ஐ,

கீழே கொடுத்துள்ள code - ஐ பயன்படுத்தி இணையுங்கள்.

http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml



அன்புடன்..,






கூட்டாஞ்சோறு - 1

0 comments
இந்த வார கூட்டாஞ்சோறு.
(
பார்த்து, கேட்டு, அனுபவித்த விஷயங்கள்)

-----------------------------------------------------------------------------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பருடன், கோவை செல்ல வேண்டியதாயிற்று. செல்லும்வழியில், எப்போதும் போல டிரைவர், கண்டக்டர்களுக்கு, டெப்போ மேனஜர்களுக்கு கமிஷன் கொடுத்து, பயணிகளிடம் கொள்ளை லாபம் அடிக்கும் மோட்டல் ஒன்றில் பேருந்து நின்றது. பலரின் அறிவுரைப்படி, இது போன்ற இடங்களில், எந்தவொரு பொருளும் வாங்குவதில்லை. தரமும் இருப்பதில்லை. விலையும் நமக்கு கட்டுபடியாவதில்லை. கால் மணி நேரம் என்ன செய்வதென்று தெரியாமல், பிரதான சாலை வரை நடந்து சென்று வரலாம் என்று நடந்தோம். அந்த மோட்டலின் அருகே இருந்த வெற்றிடத்தை பார்த்த போது, ரொம்பவும் வேதனையாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் தேநீர் குடித்து எறிந்த பிளாஸ்டிக் தம்ளர்கள், குவியல் குவியலாக கிடந்தன. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தினைத்தரும் இந்த பிளாஸ்டிக் கப்களை நமது அரசு தடை செய்யும் நாள் வருமா ?





(என்னால் முழுவதுமாக படமெடுக்க முடியவில்லை. இது போல பல குவியல்கள் கிடந்தன.)


-----------------------------------------------------------------------------------------------


தொலைக்காட்சி நிகழ்ச்சி.

இன்று (25.02.2010) காலை பல் பிரச்சனைகள் குறித்து காலையில் பாலிமர் டி.வி யில் விவரித்துக்கொண்டிருந்தார் மருத்துவர். ஒவ்வொரு பல்லிலும் மூன்று அடுக்குகள் இருப்பதையும், (3 layers) அதனால் ஏற்படும் உபாதைகளையும் சுருக்கமாக சொன்னார்.





மேல் அடுக்கில் சொத்தை ஏற்படும்போது எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. ஆனால், இதனை முதலிலேயே சரி செய்து விட்டால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம் எனவும், அதற்கு கீழ் இரண்டாவது அடுக்கு பாதிக்கப்படும்போது, பல் கூச்சம் ஏற்படுவதாகவும், அதற்கும் கீழ் உள்ள அடுக்கு பாதிக்கப்படும்போதுதான் தாங்க முடியாத வழியும், வேதனையும் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பற்களை பராமரிக்க,

1. காலையும், இரவும் பல் துலக்குவதை கட்டாய வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
2. அதிகமான குளிர்ச்சி, மற்றும் சூடான உணவுகளை பல்லில் வெகு நேரம் படும்படி உண்ணக்கூடாது.
3. குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை, professional க்ளீனிங் செய்து கொள்ளல் வேண்டும்.

இவை தவிர, நாம் பல் துலக்கும்போது, பல்லின் முன்புறமும், பின்புறமும் மட்டுமே சுத்தம் செய்கிறோம். இரண்டு பற்களுக்கு இடையில் சுத்தம் செய்ய முடிவதில்லை. அந்த இடைப்பட்ட இடங்களை flossing முறைப்படி சுத்தம் செய்து கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.








படங்கள் நன்றி : கோல்கேட், விக்கிபீடியா இணையதளங்கள்.

ப்ளாஷிங் பற்றிய படங்கள் ஏதாவது கிடைக்குமா என இணையத்தில் தேட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில், flashing என டைப் செய்ய நம் கூகிளார் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.





அதன் பிறகுதான் தெரிந்தது... flashing என்றால் Exhibitionism என்று கூட அர்த்தமாமே.

-----------------------------------------------------------------------------------------------


அன்புடன்..,




(கையெழுத்து போட கற்றுக்கொடுத்த vandhemaadharam சசிக்குமாருக்கு நன்றி)



உங்கள் கணினியின் காம் (COM) போர்ட் சரியாக வேலை செய்கிறதா ?

1 comments

ஒரு சில நேரங்களில், உங்கள் கணினியில், கம்யூனிகேஷன் போர்ட் என அழைக்கப்படும், COM போர்ட்டில் கனெக்ட் செய்யப்படும் வெளி சாதனங்கள் (Extenal devices) இயங்க மறுக்கும். அப்போது அந்த சாதனத்தில் பிரச்சனையோ என நாம் யோசிக்கத்தோன்றும். ஆனால், நாம் அந்த சாதனத்தை இணைத்திருக்கும் COM போர்ட் சரியாக வேலை செய்யாமல் போனாலும், அந்த சாதனம் இயங்காமல் போயிருக்கலாம் அல்லவா? அந்த காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

ஒரு சுலபமான வழி.

பொதுவாக கணினி, காம் போர்ட் மூலமாக, 3 வது pin வழியாக தகவல் அனுப்பும். 2 வது pin வழியாக தகவல்களைப்பெறும். இந்த இரண்டு பின்களிடையே தொடர்பு ஏற்படுத்தினால், அந்த போர்ட் வேலை செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில், சோதித்தறிய வேண்டிய காம் போர்ட்டில், ஏதாவது சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதனை நீக்குங்கள்.
பின்னர், உங்கள் கணினியில் ஹைபர்டெர்மினல் ஓபன் செய்து கொள்ளுங்கள்.






பின்னர் கனெக்ஷன் டெஸ்க்ரிப்ஷன் விண்டோவில் ஏதாவதொரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்.






பின்னர், நீங்கள் சோதித்துப்பார்க்க வேண்டிய காம் போர்ட்டை தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள்.





போர்ட் செட்டிங்க்ஸ் விண்டோவில் எதுவும், மாற்ற வேண்டாம். OK பொத்தானை அழுத்துங்கள்.





இப்பொழுது தோன்றும் விண்டோவில், ஏதாவது டைப் செய்யுங்கள். நீங்கள் டைப் செய்யும் எந்த எழுத்தும், நமக்கு தெரியாது.

இப்பொழுது ஜெம் கிளிப் கொண்டோ, அல்லது சிறு ஒயர் கொண்டோ, காம் போர்ட்டில், இரண்டாவது, அல்லது மூன்றாவது பின்களை ஷார்ட் செய்யுங்கள் (மிகவும் பாதுகாப்புடன் கவனமாக செய்யவும்.).







இப்போது
ஷார்ட் செய்தபடியே ஹைபர்டெர்மினல் விண்டோவில் டைப் செய்யுங்கள். இப்போது நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் வெளியில் தெரியும். அவ்வாறு தெரிந்தால், உங்கள் காம் போர்ட் வேலை செய்கிறது என்று பொருள். இல்லையென்றால் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை அறியலாம்.





பயனுள்ள தகவலாக இருந்தால், வாக்கு மற்றும் பின்னூட்டமிடுங்களேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.




வழக்கம்போல ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நாமம்.

0 comments


எல்லா வருடங்களைப்போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லாத ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார் மம்தா பானர்ஜி.





அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு பொது மனிதனாக இருந்து பார்த்தால் இதுவரை தமிழகத்திற்கு எந்தவொரு ரயில்வே அமைச்சரும் நல்ல திட்டங்கள் போட்டதாக தெரியவில்லை. ரயில்களே எட்டிப்பார்க்காத நகரங்கள் மட்டுமல்ல, மாவட்டங்களே தமிழ்நாட்டில் உள்ளன. போடப்படும் ஒரு சில திட்டங்களும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்து வருகின்றன. புதிய ரயில் திட்டங்களுக்கு, தமிழகத்தை, மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. மாநில அரசும் குரல் கொடுப்பதில்லை.



எங்கள் தேனி மாவட்ட மக்களின், தேனி - திண்டுக்கல் ரயில்பாதை திட்டம் வாழ்நாள் கனவாகவே இருந்து வருகிறது. குறைந்தபட்சம், போடியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரயிலையாவது அகலரயில்பாதையாக மாற்றினால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்.



தமிழக அரசு இது போன்ற மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து, இனி வரும் காலங்களிலாவது மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தினால் தமிழக மக்களின் உரிமைகள் மதிக்கப்படும்.








நேரகாலம் தெரியாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்ட அஜித்.

1 comments






அரசியல் துறையில், கலைத்துறையினர் புக ஆரம்பித்ததிலிருந்தே, கலைத்துறையில், அரசியல் புக ஆரம்பித்து விட்டது. திரைத்துறையினரைக்கொண்டு விளம்பரம் தேடும் அரசியல்வாதிகளும், தன் திரையுலக செல்வாக்கை அரசியலாக மாற்றிக்கொள்ள துடிக்கும் பல நடிகர்களும் காலம் காலமாக தமிழ் நாட்டில் இருந்து வருகிறார்கள். இதில் தவறா, சரியா என்பதற்குள் நாம் போக வேண்டாம்.

திரைத்துறையினர் மீது கரிசனம் கொண்டு திரையுலக தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்தார். எல்லோருடைய குறைகளையும் தீர்த்து வைக்கிறாரே, தன்னுடைய குறையையும் முதல்வர் தீர்த்து விட மாட்டாரா என்ற ஆதங்கத்தில், "போராட்டங்களில் கலந்து கொள்ளச்சொல்லி மிரட்டுகின்றனர்" என ஒரு தகப்பனிடம் முறையிடுவது போல முறையிட்டு நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டார் அஜித்.

அவராவது பரவாயில்லை. எப்படியாவது ரஜினியை வம்புக்கிழுத்து, ஆதாயம் தேடிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பல பேருடைய பார்வையில் இருந்து அவரது "கைதட்டல்" தப்பவில்லை.
எத்தனையோ பேர் கை தட்டினாலும், ரஜினியின் கை அசைவுக்கு தனி மரியாதை உண்டல்லவா. அவர் சும்மா கைதட்டியிருக்கலாம். எழுது நின்று கை தட்டி. பலரின் வாய்களுக்கு தீனி போட்டு விட்டார்.






தான் பேசியதன் கரு வேறு. ஆனால் பிரச்னை போகும் பாதை வேறு என்பதை தெரிந்து கொண்ட அஜித்தும், "அடப்பாவிகளா... கை தட்னது குத்தமாடா ?" என்று நொந்து கொண்ட ரஜினியும், மறுநாள் முதல்வரை சந்தித்த பிறகும் பிரசனை தீர்ந்தபாடில்லை. சம்பந்தமே இல்லாத ஜோக்கர்.. சாரி ஜாகுவார் தங்கம் பிரச்சனையில் தலையிட்டு, "என்னை தாக்க வந்தார்கள். வீட்டை தாக்கினார்கள்" என்று தீ கொழுத்திப்போட்டு, சூட்டில் குளிர்காயவும், வெளிச்சத்தில் தன முகத்தை வெளியில் காட்டவும் ஆளாய் பறக்கிறார். அவரது குற்றச்சாட்டிற்கு ஆதரவு இல்லை என்பது தெரிந்ததும், ஜாதி சங்கங்களை துணைக்கு இழுக்கிறார்.

இப்போதைக்கு இந்த பிரச்னை முடியாது போல தெரிகிறது. திரைத்துறையினரிடையே இருக்கும் பனிப்போர் அஜித் மூலமாக மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அய்யா அறிவு ஜீவி ஜாகுவார் தங்கமே.... ஏற்கனவே அரசியலும் சினிமாவும் ஒன்றாய் கலந்து நாறிக்கிடக்கிறது. இதில் நீ போய் ஜாதியையும் கலக்காதே. உனக்கு கோடி புண்ணியம்.

சரி....

எப்படியோ போகட்டும்...

Mr.அஜித் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

மக்களுக்காக போராடுவது போல திரைப்படத்தில் நடிக்கிறீர்கள் சரி. தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது ஒரு பிரச்சனையில், (போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்) குறைந்தபட்சம் அறிக்கையாவது கொடுக்கலாமே. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் ?

நீங்கள் எந்த போராட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை என்பதை நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது.

"நூறு கோடிப்பேர்ல ஒரு ஆள். ஆறு கோடிப்பேர்ல மொத ஆள்" என்பதை இனியாவது கொஞ்சம் செயல்படுத்துங்களேன்.



க்ளாக்கோமா எனப்படும் கண் பிரச்னை.

1 comments


முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே கொடுத்து வரும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில், பாலிமர் தொலைகாட்சி அறிவியலுக்கும், போது அறிவுக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.




இன்று காலை புத்தம் புது காலை நிகழ்ச்சியில், கண் பிரச்சனைகள் பற்றி மருத்துவர் ஒருவர் விவரித்துக்கொண்டிருந்தார். பாதி நிகழ்ச்சியிலிருந்து பார்க்க தொடங்கியதால், மருத்துவரின் பெயரை தெரிந்துகொள்ள முடியவில்லை.

க்ளாக்கோமா
(Glaucoma) என அழைக்கப்படும் , கண் பிரச்னை பற்றி அழகாய் விவரித்தார்.
கண் கருவிழிக்கும் (iris), விழித்திரைக்கும் (cornea) இடையே உள்ள பகுதி anterior chamber என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி முழுவதும், aqueous எனப்படும் தெளிவான திரவத்தால் நிரப்பபட்டிருக்கும். இந்த திரவம் சுரக்கப்பட்டு, anterior chamber க்கு வெளியில் சிக்கலான வெளியேற்றுப்பாதை மூலம் வெளியேறுகிறது. இந்த திரவம் சுரத்தலும், வெளியேறுதலும் இடையேயான சமநிலை மாறும்பொழுது IOP எனப்படும், கண்ணின் Intraocular pressure எனப்படும் அழுத்தம் மாறுபடுகிறது. இந்த அழுத்தமானது, அதிகபட்ச அளவான 20mm க்கு குறைவாக இருக்க வேண்டும். இதைவிட அதிகமானால் இந்த அழுத்தம், பார்வை நரம்பை (optic nerve) பாதித்து, க்ளாக்கோமா ஏற்படுகிறது.











இந்த அழுத்தத்தைக் கண்டறிய டோனோ மீட்டர் (tono meter) பயன்படுகிறது.







க்ளாக்கோமா
கண்ணின் உட்புறத்தில் ஏற்படும் பிரச்னை என்பதால், அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. சோதனை மூலமே க்ளாக்கோமாவை தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் கீழ்க்கண்ட பிரச்சனைகள், க்ளாக்கோமா இருக்கலாமோ என்பதை அறிய இயலும்.


1. பார்வை குறைதல்.
2. கடுமையான கண் வலி.
3. தலைவலி
4. வாந்தி மற்றும் குமட்டல்.
5. கண்ணீர்
6. வெளிச்சத்தில் பார்வை கூசுதல்.
7. விழித்திரை விரிவடைதல்.

க்ளாக்கோமாவை, மருதுகள் மூலமே கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும் (கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். குணப்படுத்த இயலாது). அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்துகளால் கட்டுப்படுத்த இயலாத போது அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் மருத்துவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.


மேலும், 40 வயதுக்கு மேல் அடிக்கடி கண்ணின் அழுத்தத்தை சோதனை செய்து கொள்ள வேண்டும். என்றும் அவர் சொன்னார்.

நல்ல தகவல்களாக இருந்ததால் இதனை இங்கு பதிவிடுகின்றேன்.



அன்புடன்..,


பா.வேல்முருகன்.



விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

0 comments
குறிப்பு 1. நம் கணினியில் CD Writer இருந்தால் நீரோ (Nero), ராக்சியோ(Roxio) போன்ற மென்பொருள்கள் இல்லாமலேயே XP உதவியுடன் CD யில் தகவல்களை பதியலாம் என்பதை நாம் அறிவோம். இந்த பயன்பாடு தேவையில்லை என நினைத்தால், மை கம்ப்யூட்டர் சென்று, CD டிரைவை வலது க்ளிக் செய்து ப்ராபர்டீசில் Enable CD recording on this drive என்பதன் முன்னால் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி தகவல்களை பதிய இயலாது.




குறிப்பு 2. எந்த போல்டரையும் DOS மோடில் ஓபன் செய்ய...

ஸ்டார்ட்
--> ரன் --> சென்று regedit என டைப் செய்யுங்கள். அதில் HKEY_CLASSES_ROOT \Directory\shell சென்று, வலது க்ளிக் செய்து New --> Key என்பதை தேர்வு செய்யுங்கள்.




வலது
புறத்தில் அதற்கு ஒரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Open in Dos prompt என கொடுத்துள்ளேன்.



பின்னர் இடது புறத்தில்நாம் உருவாக்கிய key யை தேர்வு செய்து பின் வலது புறத்தில் மறுபடியும் அதன் கீழ் ஒரு key உருவாக்குங்கள். இதற்கு command என பெயர் கொடுங்கள்.




இப்போது வலது புறத்தில் இருக்கும் Default என்பதை டபுள் க்ளிக் செய்து வரும் ப்ராம்ப்ட் - இல் கீழே உள்ள மதிப்பை தட்டச்சு செய்யுங்கள்.







அவ்வளவுதான். இப்போது மை கம்ப்யூட்டர் சென்று எந்த போல்டரை வலது க்ளிக் செய்தாலும், வரும் மெனுவில் நீங்கள் முதலில் கொடுத்த key பெயருடன் ஒரு மெனு இருக்கும்.




அதனை
நீங்கள் செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட போல்டர் DOS மோடில் ஓபன் ஆகும். முயற்சித்து பாருங்களேன்.


குறிப்பு 3. எக்ஸ்.பி சில console utilities என அழைக்கப்படும் தொகுப்புகளுடன்தான் வருகிறது. சிலவற்றிற்கான ஷார்ட் கட் கீழே கொடுத்துள்ளேன். ஸ்டார்ட் --> ரன் சென்று கீழே கொடுத்துள்ளதை தட்டச்சு செய்து பாருங்கள்.


Computer Management - compmgmt.msc
Disk Managment - diskmgmt.msc
Device Manager - devmgmt.msc
Disk Defrag - dfrg.msc
Event Viewer - eventvwr.msc
Shared Folders - fsmgmt.msc
Group Policies - gpedit.msc
Local Users and Groups - lusrmgr.msc
Performance Monitor - perfmon.msc
Resultant Set of Policies - rsop.msc
Local Security Settings - secpol.msc
Services - services.msc
Component Services - comexp.msc

ஒரே கிளிக்கில் அண்மைய ஆவணங்களை (Recent Documents) நீக்க..

0 comments




நமது கணினியில், நாம் திறந்து பார்த்த கோப்புகள் (Opened files) அண்மைய ஆவணங்களாக (Recent Documents) ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். பொதுவாக நாம் இவற்றை நீக்க, ஸ்டார்ட் பட்டன் அருகே வலது க்ளிக் செய்து, ப்ராபர்டீஸ் தேர்வு செய்து, பின் கஸ்டமைஸ் பட்டன் அழுத்தி, பின்னர் க்ளியர் பட்டன் அழுத்துவோம்.

(நாம் ஏதாவது கில்மா படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, யாரவது வந்து விட்டால், அதனை க்ளோஸ் செய்து விட்டு பின்னர் சுற்றி வளைத்து இந்த வேலையை செய்ய இயலாது.)

ஒரே
கிளிக்கில் இவை எல்லாம் க்ளியர் ஆகி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. கீழே உள்ள ஸ்க்ரிப்டை காப்பி செய்து ஒரு புதிய நோட்பேட் ஒப்பன் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
Set objFSO = CreateObject("Scripting.FileSystemObject")
sRD = WshShell.SpecialFolders("Recent")
if sRD <> "" then objFSO.DeleteFile(sRD & "\*.lnk")

பின்னர் அந்த பைலை எதாவது ஒரு பெயரில் .vbs என்ற எக்ஸ்டன்ஷனுடன் உங்கள் கணினியில் எதாவது ஒரு இடத்தில சேமியுங்கள்.

பின்னர் அதற்கு ஓர் ஷார்ட்கட் உருவாக்கி, டெஸ்க்டாப்பில் அல்லது குயிக் லாஞ்ச் டூல் பாரில் வைத்துக்கொள்ளுங்கள்.








இதனை டபுள் க்ளிக் செய்தாலே போதும். உங்கள் அண்மைய ஆவணங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் அழித்து விடலாம்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



நண்பர்கள் ஏன் முக்கியம் தெரியுமா ?

0 comments









































-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-








அன்புடன்..,

பா.வேல்முருகன்.

கடைசியாக உங்கள் கணிப்பொறியை எப்பொழுது shutdown செய்தீர்கள்.

4 comments

சில அலுவலகங்களில், சில கணினிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். கடைசியாக எப்பொழுது ஷட்டவுன் செய்யப்பட்டது என்பதே மறந்து போயிருக்கும். அதனை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் கணினியில் இயங்கு பின்புலத்தில், EventLogger எனப்படும் ஒரு செயலி செயல்பட்டுக்கொண்டே இருக்கும். கணிப்பொறியின் செயல்பாடுகளை அது எழுதி வைத்துக்கொண்டே இருக்கும். அதில் 6006 என்ற என்னுடைய EventId தான், கணிப்பொறியின் இயக்கம் நிறுத்தப்படும்போது எழுதப்படும். அதில் உள்ள தேதி மற்றும் நேரத்தை வைத்து ஷட்டவுன்செய்யப்பட நேரத்தை அறியலாம்.

1. ஸ்டார்ட் --> ரன் --> சென்று Eventvwr.msc என டைப் செய்யுங்கள்.



2. வரும் விண்டோவில் System என்பதை தேர்வு செய்யுங்கள்.
விஸ்டா வாக இருந்தால் Windows Logs என்பதன் கீழ் System என்பதை தேர்வு seyyavum

3. வலது புறத்தில் வரும் தகவல்களை தேதி அடிப்படையில் இறங்குவரிசையில் வரிசைப்படுத்திக்கொள்ளுங்கள்.

4. இப்போது மேலே உள்ள வியூ (View) மெனுவில் Find என்பதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ கிடைக்கும். அதில் EventId என்பதில் 6006 என கொடுத்து Find Next பட்டனை க்ளிக் செய்யவும்.




5. இப்போது வலது புறத்தில் உங்கள் கணினி எந்த தேதியில் எந்த நேரத்தில் கடைசியாக ஷட்டவுன் செய்யப்பட்டது என்பது கிடைக்கும்.



இன்னொரு வழி (சுலபமான வழி) :

கீழே உள்ள ஸ்க்ரிப்டை அப்படியே காப்பி செய்து, ஒரு notepad ஓப்பன் செய்து பேஸ்ட் செய்யுங்கள். அந்த பைலை, ஏதாவதொரு பெயரில், கடைசியில் .vbs என்ற எக்ஸ்டன்ஷனில் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.

strValueName = "HKLM\SYSTEM\CurrentControlSet\Control\Windows\" _
& "ShutdownTime"
Set oShell = CreateObject("WScript.Shell")
Ar = oShell.RegRead(strValueName)
Term = Ar(7)*(2^56) + Ar(6)*(2^48) + Ar(5)*(2^40) + Ar(4)*(2^32) _
+ Ar(3)*(2^24) + Ar(2)*(2^16) + Ar(1)*(2^8) + Ar(0)
Days = Term/(1E7*86400)
WScript.Echo "ShutdownTime = " & CDate(DateSerial(1601, 1, 1) + Days) _
& " UTC"



நன்றி : VisualBasicScript.com



இப்போது டெஸ்க்டாப்பில் உள்ள அந்த பைலை டபுள் க்ளிக் செய்யுங்கள். தகவல் கிடைக்கும்.




(இந்த வழியை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே என்கிறீர்களா...? ஒரு பில்டப்புதான்.)...

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



Blog Widget by LinkWithin