அண்மைய பதிவுகள்

Showing posts with label குறிப்புகள். Show all posts
Showing posts with label குறிப்புகள். Show all posts

உங்கள் கணினி பணிநிறுத்தம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா ?

6 comments
உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேரங்களில் வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதன் பின்புலத்தில் பல செயல்கள் (Background processes) நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் கணினியின் இயக்கம் நிற்கும்.
 
ஒரு சில செயல்கள் தானாக நிற்பதில்லை. பணி நிறுத்தம் (Shut down) செய்யும்போது இந்த செயல்களை உடனடியாக நிறுத்துவதன் மூலம், கணினியின் இயக்கத்தை வேகமாக நிறுத்தலாம்.

உடனடியாக எப்படி நிறுத்துவதென்று பார்ப்போம்.

Start ---> Run சென்று regedit என தட்டச்சுங்கள்.

பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில்,

HKEY_CURRENT USER\Control Panel\Desktop

என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
 பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இருசொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.

OK கொடுத்து வெளியேறுங்கள்.

இனி, உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுக்காது.

மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,

பா.வேல்முருகன்.


உங்கள் தளத்துக்கு வருவோரை வேறொரு தளத்துக்கு திருப்பி விட.., (redirect to other site)

14 comments

என்னடா இது. வாசிப்போரை வரவழைப்பதே பெரும்பாடாய் இருக்கும்போது, வருவோரை வேறு இடத்துக்கு அனுப்பவா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.




நீங்கள் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்கள். சில நாட்கள் கழித்து அதனை மூடிவிட்டு புதியதாய் வேறொரு வலைப்பூ தொடங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இரண்டு வலைப்பூக்களையும் உங்களால் நிர்வகிக்க முடியாது மற்றும், ஏற்கனவே இருக்கும் வாசகர்களையும் தக்க வைக்க வேண்டும். இதற்கு என்ன வழி. பழைய தளத்துக்கு வரும் வாசகர்களை தானாகவே புதிய தளத்துக்கு வரவழைப்பதுதான் சிறந்த வழி.



எப்படி இவ்வாறு திருப்பி விடுவது என்பதை சொல்கிறேன். இந்த சிறு நிரலை நகலெடுத்து உங்கள் பழைய தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி விட்டாலே போதும்.



<script type='text/javascript'>
location.replace("http://SITE-TO-BE_REDIRECTED");
</script>


அல்லது..,

<script type='text/javascript'>
location.href = "http://SITE-TO-BE_REDIRECTED";
</script>


ப்ளாகரில்,  வழக்கம்போல,

Layout -- > Edit HTML சென்று,




<head> என்பதற்கு மேலே, மேற்கண்டவற்றில் ஏதோவொரு நிரலை ஒட்டி விடுங்கள்.

http://SITE-TO-BE_REDIRECTED என்பதில், மாற்றி அனுப்பப்பட வேண்டிய தள முகவரியை சேர்க்க மறக்காதீர்கள்.

மீண்டும் வருகிறேன்..,

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

நண்பர் நீச்சல்காரன் அவர்களின் மேலுமொரு குறிப்பு.

கீழ்க்கண்ட நிரலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சில உலவிகளில் ஜாவா ஸ்கிரிப்ட் வசதியில்லாமல் இருக்கும் நிலையில் கீழ்க்கண்ட நிரலிகள் மிகுந்த பயன் தரும். இந்த தகவலையும் இணைத்துக்கொள்ளுங்கள். Paste it Just below the HEAD tag {Please use open bracket here}meta content="0;url=http://www.SITE-TO-BE_REDIRECTED.com" http-equiv="REFRESH">

Blog Widget by LinkWithin