அண்மைய பதிவுகள்

மடிக்கணினிகளில் கணினித்திரையை அணைத்து வைக்க..

நாம் பயன்படுத்தும் மேசைக்கணினியில், நாம் பயன்படுத்தாதபோது கணினித்திரையை அணைத்து (manually) வைப்பதன் மூலம், மின்பயன்பாட்டை குறைக்கலாம். அனால், பெரும்பாலான மடிக்கணினிகளில் அது போன்ற பொத்தான்கள் இருப்பதில்லை.

அந்த செயலை, இந்த சிறிய செயலியைக் (application) கொண்டு நிறைவேற்றலாம்.

இங்கு சொடுக்கி இந்த செயலியை பதிவிறக்குங்கள்.

பின்னர் இதற்கு கணினியின் மேசைத்தளத்தில் (desktop) ஒரு குறுக்கு வழி படவுரு (Short cut icon) ஒன்றை உருவாக்குங்கள்.

பின்னர், இந்த படவுருவை வலச்சொடுக்கு (right click) செய்து, பண்புகள் (properties) என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதில் சுருக்கு விசை (Short cut key) என்பதில் ஏதாவதொரு விசையை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்போது உங்கள் கணினித்திரையை இந்த சுருக்கு விசை கொண்டே அணைக்கலாம்.

மடிக்கணினிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


2 comments:

சசிகுமார் said...

நல்ல தகவல் நண்பா நான் இன்ஸ்டால் செய்து விட்டேன், தொடர்ந்து இது போல் பல நல்ல விஷயங்களை கூறவும்

பா.வேல்முருகன் said...

நன்றி சசி. நல்வரவு.

Post a Comment

Blog Widget by LinkWithin