அண்மைய பதிவுகள்

உங்கள் கணினி பணிநிறுத்தம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா ?

உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேரங்களில் வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதன் பின்புலத்தில் பல செயல்கள் (Background processes) நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் கணினியின் இயக்கம் நிற்கும்.
 
ஒரு சில செயல்கள் தானாக நிற்பதில்லை. பணி நிறுத்தம் (Shut down) செய்யும்போது இந்த செயல்களை உடனடியாக நிறுத்துவதன் மூலம், கணினியின் இயக்கத்தை வேகமாக நிறுத்தலாம்.

உடனடியாக எப்படி நிறுத்துவதென்று பார்ப்போம்.

Start ---> Run சென்று regedit என தட்டச்சுங்கள்.

பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில்,

HKEY_CURRENT USER\Control Panel\Desktop

என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
 பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இருசொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.

OK கொடுத்து வெளியேறுங்கள்.

இனி, உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுக்காது.

மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,

பா.வேல்முருகன்.


6 comments:

ஸ்ரீராம். said...

இது எனக்கு உபயோகமான தகவல். Thank U.

Sukumar said...

ரொம்ப பயனுள்ள பதிவு தலைவரே... தொடருங்கள்.....!!

பா.வேல்முருகன் said...

என் தளத்துக்கு வந்தமைக்கு நன்றி சுகுமாரன் சாமிநாதன் சார். பின்னூட்டமிட்டதற்கு கூடுதல் நன்றிகள்.

பா.வேல்முருகன் said...

நன்றி ஸ்ரீராம்.

ஆமா. எங்கள் ப்ளாக் - னு பேர் வச்சுருக்கீங்களே.

நீங்க எத்தன பேரு ?

ஸ்ரீராம். said...

'சைட் பார்'ல பெயர்கள் பார்க்கவில்லையா?

DR said...

முறையாக மூடப்பட வேண்டிய இயக்கங்கள் (Process) இப்படி கொலை ( Kill ) செய்யப்படுவதால், பின்னாளில் அந்த குறிப்பிட்ட இயக்கத்தில் பிரச்சினை வராது என்று என்பதை சோதித்து விட்டு சொன்னால் மிக்க நலம்...

Post a Comment

Blog Widget by LinkWithin