அண்மைய பதிவுகள்

ஆரக்கிள் பாடங்கள் - பாடம் 5(iii) - (தகவல்கள் நீக்க உதவும் கட்டளை மற்றும் கட்டளை வகைகள்)



ஒரு டேபிள் உருவாக்கி, அதில் தகவல்களை சேர்த்து, சேர்த்த தகவல்களை மாற்றவும் கற்றுக்கொண்டோம். இவ்வாறு சேர்க்கப்பட்ட நிரை (row) ஒன்றை நாம் நீக்க வேண்டும் எனில், DELETE கட்டளை பயன்படுத்தலாம். DELETE கட்டளையின் அமைப்பு.
DELETE [FROM] table WHERE (condition)
முன்பு கூறியவற்றைப்போலவே.., பெரிய எழுத்துக்களில் உள்ளவை (DELETE, FROM, WHERE) போன்றவை கட்டளை குறிச்சொற்கள். table என்பது எந்த டேபிளில் இருந்து தகவல்களை நீக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். (condition) என்பது எந்த நிபந்தனைக்கு உட்பட்ட நிரைகள் நீக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பதாகும். நமது எடுத்துக்காட்டில், கீழ்கண்ட தகவல்கள் டேபிளில் இருப்பதாகக்கொள்வோம். இதில், VELS என்ற பெயருடைய மாணவனின் பெயரை நீக்குவதை கொள்வோம்.

அதற்குரிய கட்டளை...

DELETE FROM STUD_MAST WHERE STUD_NAME = 'VELS'







தகவல் வரையறை கட்டளைகள் மற்றும் தகவல் கையாளல் கட்டளைகள்:


இந்த
பதிவிலும், இதற்கு முந்தைய பதிவுகளிலும் கூறப்பட்ட, INSERT, UPDATE, DELETE கட்டளைகள் தகவல் கையாளல் கட்டளைகளாகும் (DATA MANIPULATION LANGUAGE COMMANDS). vai ஒரு டேபிளில் (table) அல்லது ஒரு வ்யூவில் (View) உள்ள தகவல்களை சேர்க்க, மாற்ற, நீக்க பயன்படும் கட்டளைகளாகும்.


இவை தவிர, தகவல் வரையறை கட்டளைகள் (DATA DEFINITION LANGUAGE STATEMENTS) எனப்படுபவை, ஒரு டேபிள் அல்லது ஒரு வ்யூவை வரையறை செய்ய பயன்படும் கட்டளைகளாகும். அவற்றில் சில.., CREATE, ALTER, DROP, REPLACE, TRUNCATE போன்றவைகளாகும்.

இப்போது நாம் டேபிள் பற்றி மட்டும் படித்து வருவதால், அது தொடர்பான கட்டளைகளை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.

CREATE - இந்த கட்டளை, டேபிள் வ்யூ, சினாநிம், பங்ஷன் போன்றவற்றை, உருவாக்க பயன்படுகிறது.


ALTER :இந்த கட்டளை, டேபிள், அல்லது பயனர் (யூசர்), டேபிள்ஸ்பேஸ், டேட்டாபேஸ் போன்றவற்றின் அமைப்பினை மாற்ற பயன்படுகிறது.



DROP : இது ஒரு டேபிளையோ ஒரு பயனர் கணக்கையோ, டேபிள் ஸ்பேஸையொ அல்லது பங்ஷனையோ நீக்க பயன்படுகிறது.




REPLACE : இந்த கட்டளை ஒரு டேபிளின் பெயரினை மாற்ற பயன்படும்.


TRUNCATE : இந்த கட்டளை ஒரு டேபிளில் இருக்கும் அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் நீக்க பயன்படுகிறது.



(DELETE கட்டளை மூலமும் ஒரு டேபிளில் இருந்து அனைத்து தகவல்களையும் நீக்க முடியும். ஆனால், DELETE கட்டளை மூலம் தவறாக நீக்கப்படும் நிரைகளை COMMIT கட்டளை கொடுப்பதற்கு முன் மீட்டு விடலாம். ஆனால் TRUNCATE கட்டளையில் திரும்ப பெற முடியாது.)


இவை தவிர கட்டுப்பாடுகள் வரையறை செய்யும் (CONTROL STATEMENTS) கட்டளைகளும் உண்டு.


அவை.., GRANT, REVOKE போன்றவைகளாகும்.


இவை ஒரு பயனரின், ஆப்ஜெக்ட் - களை மற்ற பயனர் ஒருவர் அணுகுவதற்கு அனுமதி கொடுக்கவும், அனுமதி நீக்கவும் பயன்படுபவைகளாகும்.


அடுத்த பதிவில், கன்ஸ்ட்ரைன்ட்ஸ் பற்றி காண்போம்.





0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin