எம்.பி.3 (MP3) பைலுக்கு டேக் (tag) போடலாம் வாங்க.
ஒரு எம்.பி. 3 பைல் உங்க மொபைல்-ல ப்ளே (Play) ஆகும்போது பக்கத்துல ஒரு படம் இருக்கும். பொதுவா அந்த படத்தோட ஸ்டில் (Still) இதுக்கும். அந்த படம் உங்களுக்கு பிடிக்கலேன்னா, வேற படம் மாத்துறதுக்கு,
ஒரு சில பாடல்கள் - ல பாடுனவங்கோளோட பெயர் (Singers) இல்லாம இருக்கும். சில பாடல்கள்- ல இசையமைப்பாளர் (Music director) பெயர் இல்லாம இருக்கும்.
அந்த மாதிரி இல்லாம இருக்கும்போது, நாம ஒரு 500, 600 பாட்டு வச்சிருந்தோம்னா, ஐபாட்(iPod),மொபைல்ல (Mobile),நம்ம கம்ப்யூட்டர்லயே மீடியா பிளேயர்ல (Media Player) கேக்கும்போது தொகுப்பா கேக்க முடியாது.
இந்த எல்லா தகவலும் அந்த எம்.பி.3 பைல்- ல இருந்தாதான் அதை தொகுத்து கேக்கலாம். எடுத்துக்காட்டா, இளையராஜாவோட பாடல்கள் மட்டும் கேக்க, கம்போசர் (Composer) டேக் - ல இளையராஜா - ன்னு இருந்தா நாம ஈசியா பிரிச்சுக்கலாம். எம்.பி.3 டேக் - வின்-ஆம்ப் (Winamp player) பிளேயர்ல போட்டுக்கலாம். மத்த பிளேயர் - ல எனக்கு தெரிஞ்சு அந்த வசதி இல்ல.
இதுக்காகவே ஒரு குட்டி மென்பொருள் (Software) இணையத்துல இருக்கு. அதை நீங்க இங்க போயி பதிவிரக்கிக்கலாம். இதை பதிவிறக்கி, கணினியில நிறுவினா, கீழே உள்ள மாதிரி ஒரு விண்டோ கிடைக்கும்.அதுல மேல Add Directory பட்டனை அழுத்தி, நீங்க பாடல்கள் வச்சிருக்க போல்டரை (folder) தேர்ந்தெடுங்க.
எல்லா பாடல்களும் வரிசையா வரும். அதுல வலது பக்கம், ஏதாவது ஒரு பாடலை தேர்வு செஞ்சீங்கன்னா, இடது பக்கத்துல டேக் கிடைக்கும். நாம தேவையான தகவல்களை மாத்திக்கலாம்.
0 comments:
Post a Comment