பவர் பாயின்ட் - இன் ஒவ்வொரு ஸ்லைடையும் ஒவ்வொரு படமாக மாற்ற.
நாம் ஒரு பவர் பாயின்ட் ஸ்லைடில் எழுத்துகள், படங்கள், வேர்ட் ஆர்ட் என்று சேர்த்து ஒருங்கிணைத்து, ஸ்லைட் ஆக சேர்த்திருப்போம். சில நேரங்களில் நமக்கு அந்த ஸ்லைட் ஒவ்வொன்றும் மொத்தமாக தனித்தனி இமேஜ் ஆக தேவைப்படும்.
இதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது.
தேவையான பவர்பாயின்ட் பைலை திறந்து கொள்ளுங்கள்.
பின், மெனுவில் பைல் சென்று, Save As... என்பதை தேர்வு செய்யுங்கள்.
வருகின்ற உரை பெட்டியில், எந்த இடத்தில் சேமிப்பது என்று தேர்ந்தெடுத்து, கீழே, Save As Type என்பதில், Enhanced Windows Metafile என்பதை தேர்ந்தெடுங்கள்.
பின்னர் Save பட்டனை அழுத்துங்கள்.
நீங்கள் அனைத்து ஸ்லைட் களையும் மாற்ற வேண்டி இருந்தால், Every Slide என்பதை க்ளிக் செய்யுங்கள்.
சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர், கீழே உள்ளது போல தகவல் கிடைக்கும். OK கொடுத்து விட்டு My Computer சென்று, சேமித்த இடத்துக்கு செல்லுங்கள்.
அங்கே உங்கள் ஸ்லைட்கள் எல்லாம் தனித்தனி படங்களாக விரிந்திருக்கும்.
ஆனால், எல்லாம் .emf பைல்களாக இருக்கும்.
இவற்றை எப்படி jpg ஆக மாற்றுவது. MS Paint - இல் ஒவ்வொரு பைலையும் திறந்து Save As மூலம் jpg ஆக மாற்றலாம். ஆனால், அது அதிக நேரம் பிடிக்கும்.
எனது முந்தைய பதிவொன்றில் சொன்னது போல, format factory மென்பொருள் மூலம்,
இந்த பைல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில், jpg ஆக மாற்றி விட முடியும்.
பின்னர் format factory அவுட்புட் போல்டருக்கு சென்று பார்த்தீர்கள் என்றால், எல்லா ஸ்லைட்களும் எந்த வித தெளிவு இழப்புமின்றி, படங்களாக மாற்றப்பட்டிருக்கும்.
பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.
3 comments:
எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்
பயனுள்ள தகவல்கள்.
in powerpoint click 'save as' and save as type jpeg interchange format. now the slide is saved as jpeg
Post a Comment