பைல்களின் பாதையை காப்பி செய்ய...
நாம், சில நேரங்களில், நமது பைல்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது, அந்த பைல்களின் முழு பாதையையும் (Path) அந்த பைலின் பெயரோடு காப்பி செய்ய வேண்டியிருக்கும். அப்போது நாம், மேலே எக்ஸ்ப்ளோரரில் அட்ரஸ் பாரில் அந்த லொகேஷனை காப்பி செய்து பின், அந்த பைல் பெயரை மனதில் வைத்து, தேவையான இடத்தில் தட்டச்சு செய்வோம்.
இந்த செயல் ரொம்ப கஷ்டமானதாக இருந்ததில்லை.
ஆனாலும், சில நேரங்களில் PATH மிக நீளமானதாக இருக்கும் பட்சத்தில்,அந்த பைல் பெயரை முழு பாதையுடன் காப்பி செய்ய வசதி இருந்தால் நன்றாய் இருக்குமே என்று தோன்றுவதுண்டு. இதற்கும் ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.
இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்.
இதனை நிறுவிய பின்னர், நமது பைல் கான்டெக்ஸ்ட் ரைட் க்ளிக் மெனுவில் புதியதாய், Copy Path என்றொரு ஆப்ஷன் புதியதாய் தோன்றியிருக்கும். அதன் சப் மெனுவில்,
1. அதன் லொகேஷன் மட்டும் காப்பி செய்ய,
2. லொகேஷனுடன் பைலின் பெயரையும் காப்பி செய்ய,
3. பைலின் பெயரை மட்டும் காப்பி செய்ய, என மூன்று ஆப்ஷன்கள் தோன்றியிருக்கும்.
இதனை பயன்படுத்தி, நாம் லொகேஷன் காப்பி செய்து கொள்ளலாம்.
பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.
1 comments:
nice one...
Thanks
Post a Comment