அண்மைய பதிவுகள்

ஒரே கிளிக்கில் அண்மைய ஆவணங்களை (Recent Documents) நீக்க..





நமது கணினியில், நாம் திறந்து பார்த்த கோப்புகள் (Opened files) அண்மைய ஆவணங்களாக (Recent Documents) ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். பொதுவாக நாம் இவற்றை நீக்க, ஸ்டார்ட் பட்டன் அருகே வலது க்ளிக் செய்து, ப்ராபர்டீஸ் தேர்வு செய்து, பின் கஸ்டமைஸ் பட்டன் அழுத்தி, பின்னர் க்ளியர் பட்டன் அழுத்துவோம்.

(நாம் ஏதாவது கில்மா படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, யாரவது வந்து விட்டால், அதனை க்ளோஸ் செய்து விட்டு பின்னர் சுற்றி வளைத்து இந்த வேலையை செய்ய இயலாது.)

ஒரே
கிளிக்கில் இவை எல்லாம் க்ளியர் ஆகி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. கீழே உள்ள ஸ்க்ரிப்டை காப்பி செய்து ஒரு புதிய நோட்பேட் ஒப்பன் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
Set objFSO = CreateObject("Scripting.FileSystemObject")
sRD = WshShell.SpecialFolders("Recent")
if sRD <> "" then objFSO.DeleteFile(sRD & "\*.lnk")

பின்னர் அந்த பைலை எதாவது ஒரு பெயரில் .vbs என்ற எக்ஸ்டன்ஷனுடன் உங்கள் கணினியில் எதாவது ஒரு இடத்தில சேமியுங்கள்.

பின்னர் அதற்கு ஓர் ஷார்ட்கட் உருவாக்கி, டெஸ்க்டாப்பில் அல்லது குயிக் லாஞ்ச் டூல் பாரில் வைத்துக்கொள்ளுங்கள்.








இதனை டபுள் க்ளிக் செய்தாலே போதும். உங்கள் அண்மைய ஆவணங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் அழித்து விடலாம்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin