அண்மைய பதிவுகள்

கூட்டாஞ்சோறு - 1

இந்த வார கூட்டாஞ்சோறு.
(
பார்த்து, கேட்டு, அனுபவித்த விஷயங்கள்)

-----------------------------------------------------------------------------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பருடன், கோவை செல்ல வேண்டியதாயிற்று. செல்லும்வழியில், எப்போதும் போல டிரைவர், கண்டக்டர்களுக்கு, டெப்போ மேனஜர்களுக்கு கமிஷன் கொடுத்து, பயணிகளிடம் கொள்ளை லாபம் அடிக்கும் மோட்டல் ஒன்றில் பேருந்து நின்றது. பலரின் அறிவுரைப்படி, இது போன்ற இடங்களில், எந்தவொரு பொருளும் வாங்குவதில்லை. தரமும் இருப்பதில்லை. விலையும் நமக்கு கட்டுபடியாவதில்லை. கால் மணி நேரம் என்ன செய்வதென்று தெரியாமல், பிரதான சாலை வரை நடந்து சென்று வரலாம் என்று நடந்தோம். அந்த மோட்டலின் அருகே இருந்த வெற்றிடத்தை பார்த்த போது, ரொம்பவும் வேதனையாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் தேநீர் குடித்து எறிந்த பிளாஸ்டிக் தம்ளர்கள், குவியல் குவியலாக கிடந்தன. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தினைத்தரும் இந்த பிளாஸ்டிக் கப்களை நமது அரசு தடை செய்யும் நாள் வருமா ?





(என்னால் முழுவதுமாக படமெடுக்க முடியவில்லை. இது போல பல குவியல்கள் கிடந்தன.)


-----------------------------------------------------------------------------------------------


தொலைக்காட்சி நிகழ்ச்சி.

இன்று (25.02.2010) காலை பல் பிரச்சனைகள் குறித்து காலையில் பாலிமர் டி.வி யில் விவரித்துக்கொண்டிருந்தார் மருத்துவர். ஒவ்வொரு பல்லிலும் மூன்று அடுக்குகள் இருப்பதையும், (3 layers) அதனால் ஏற்படும் உபாதைகளையும் சுருக்கமாக சொன்னார்.





மேல் அடுக்கில் சொத்தை ஏற்படும்போது எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. ஆனால், இதனை முதலிலேயே சரி செய்து விட்டால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம் எனவும், அதற்கு கீழ் இரண்டாவது அடுக்கு பாதிக்கப்படும்போது, பல் கூச்சம் ஏற்படுவதாகவும், அதற்கும் கீழ் உள்ள அடுக்கு பாதிக்கப்படும்போதுதான் தாங்க முடியாத வழியும், வேதனையும் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பற்களை பராமரிக்க,

1. காலையும், இரவும் பல் துலக்குவதை கட்டாய வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
2. அதிகமான குளிர்ச்சி, மற்றும் சூடான உணவுகளை பல்லில் வெகு நேரம் படும்படி உண்ணக்கூடாது.
3. குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை, professional க்ளீனிங் செய்து கொள்ளல் வேண்டும்.

இவை தவிர, நாம் பல் துலக்கும்போது, பல்லின் முன்புறமும், பின்புறமும் மட்டுமே சுத்தம் செய்கிறோம். இரண்டு பற்களுக்கு இடையில் சுத்தம் செய்ய முடிவதில்லை. அந்த இடைப்பட்ட இடங்களை flossing முறைப்படி சுத்தம் செய்து கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.








படங்கள் நன்றி : கோல்கேட், விக்கிபீடியா இணையதளங்கள்.

ப்ளாஷிங் பற்றிய படங்கள் ஏதாவது கிடைக்குமா என இணையத்தில் தேட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில், flashing என டைப் செய்ய நம் கூகிளார் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.





அதன் பிறகுதான் தெரிந்தது... flashing என்றால் Exhibitionism என்று கூட அர்த்தமாமே.

-----------------------------------------------------------------------------------------------


அன்புடன்..,




(கையெழுத்து போட கற்றுக்கொடுத்த vandhemaadharam சசிக்குமாருக்கு நன்றி)



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin