அண்மைய பதிவுகள்

நேரகாலம் தெரியாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்ட அஜித்.







அரசியல் துறையில், கலைத்துறையினர் புக ஆரம்பித்ததிலிருந்தே, கலைத்துறையில், அரசியல் புக ஆரம்பித்து விட்டது. திரைத்துறையினரைக்கொண்டு விளம்பரம் தேடும் அரசியல்வாதிகளும், தன் திரையுலக செல்வாக்கை அரசியலாக மாற்றிக்கொள்ள துடிக்கும் பல நடிகர்களும் காலம் காலமாக தமிழ் நாட்டில் இருந்து வருகிறார்கள். இதில் தவறா, சரியா என்பதற்குள் நாம் போக வேண்டாம்.

திரைத்துறையினர் மீது கரிசனம் கொண்டு திரையுலக தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்தார். எல்லோருடைய குறைகளையும் தீர்த்து வைக்கிறாரே, தன்னுடைய குறையையும் முதல்வர் தீர்த்து விட மாட்டாரா என்ற ஆதங்கத்தில், "போராட்டங்களில் கலந்து கொள்ளச்சொல்லி மிரட்டுகின்றனர்" என ஒரு தகப்பனிடம் முறையிடுவது போல முறையிட்டு நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டார் அஜித்.

அவராவது பரவாயில்லை. எப்படியாவது ரஜினியை வம்புக்கிழுத்து, ஆதாயம் தேடிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பல பேருடைய பார்வையில் இருந்து அவரது "கைதட்டல்" தப்பவில்லை.
எத்தனையோ பேர் கை தட்டினாலும், ரஜினியின் கை அசைவுக்கு தனி மரியாதை உண்டல்லவா. அவர் சும்மா கைதட்டியிருக்கலாம். எழுது நின்று கை தட்டி. பலரின் வாய்களுக்கு தீனி போட்டு விட்டார்.






தான் பேசியதன் கரு வேறு. ஆனால் பிரச்னை போகும் பாதை வேறு என்பதை தெரிந்து கொண்ட அஜித்தும், "அடப்பாவிகளா... கை தட்னது குத்தமாடா ?" என்று நொந்து கொண்ட ரஜினியும், மறுநாள் முதல்வரை சந்தித்த பிறகும் பிரசனை தீர்ந்தபாடில்லை. சம்பந்தமே இல்லாத ஜோக்கர்.. சாரி ஜாகுவார் தங்கம் பிரச்சனையில் தலையிட்டு, "என்னை தாக்க வந்தார்கள். வீட்டை தாக்கினார்கள்" என்று தீ கொழுத்திப்போட்டு, சூட்டில் குளிர்காயவும், வெளிச்சத்தில் தன முகத்தை வெளியில் காட்டவும் ஆளாய் பறக்கிறார். அவரது குற்றச்சாட்டிற்கு ஆதரவு இல்லை என்பது தெரிந்ததும், ஜாதி சங்கங்களை துணைக்கு இழுக்கிறார்.

இப்போதைக்கு இந்த பிரச்னை முடியாது போல தெரிகிறது. திரைத்துறையினரிடையே இருக்கும் பனிப்போர் அஜித் மூலமாக மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அய்யா அறிவு ஜீவி ஜாகுவார் தங்கமே.... ஏற்கனவே அரசியலும் சினிமாவும் ஒன்றாய் கலந்து நாறிக்கிடக்கிறது. இதில் நீ போய் ஜாதியையும் கலக்காதே. உனக்கு கோடி புண்ணியம்.

சரி....

எப்படியோ போகட்டும்...

Mr.அஜித் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

மக்களுக்காக போராடுவது போல திரைப்படத்தில் நடிக்கிறீர்கள் சரி. தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது ஒரு பிரச்சனையில், (போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்) குறைந்தபட்சம் அறிக்கையாவது கொடுக்கலாமே. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் ?

நீங்கள் எந்த போராட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை என்பதை நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது.

"நூறு கோடிப்பேர்ல ஒரு ஆள். ஆறு கோடிப்பேர்ல மொத ஆள்" என்பதை இனியாவது கொஞ்சம் செயல்படுத்துங்களேன்.



1 comments:

elayaraja said...

Mr.அஜித் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

மக்களுக்காக போராடுவது போல திரைப்படத்தில் நடிக்கிறீர்கள் சரி. தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது ஒரு பிரச்சனையில், (போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்) குறைந்தபட்சம் அறிக்கையாவது கொடுக்கலாமே. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் ? hello read the below articals........

அஜித் மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிடும் யதார்த்தவாதி. சில மாஸ் நடிகர்கள் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் மாதத் தொடக்கத்தில்

அசல் - மேலும் படங்கள்

பள்ளி மாணவர்களுக்கு தங்கள் படம் போட்ட நோட்டுப்புத்தகத்தைக் கொஞ்சம் கொடுத்து விட்டு, மொத்த தமிழ்நாட்டுக்கும் கொடுத்த மாதிரி வள்ளல் பிலிம் காட்டுவார்கள்.

அப்படிப்பட்ட சில நடிகர்களுக்கு மத்தியில் அஜித் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர். சுனாமியில் பெற்றோரை இழந்த 200 பள்ளிக்குழந்தைகளின் கல்விச்செலவை சத்தமில்லாமல ஏற்றுகொண்டிருப்பவர். மூத்த பத்திரிகையாளர்கள் இரண்டுபேர் சிறுநீரக செயல் இழப்பால் படுத்தபோதும், ஒருவர் ஃபைபாஸ் அறுவைசிகிச்சை செய்தபோதும் லட்சக்கணக்கில் செலவு செய்தவர், என்று பொய் சொல்லாத யாருக்கும் அள்ளிக்கொடுப்பதில் பரந்த மணம் கொண்டவர்.

அப்படிப் பட்டவரை அதிமுகவில் இணைத்துவிட வேண்டும் என்று முடிவுசெய்த ஜெயலலிதா கடந்த 1995-ஆம் ஆண்டு அஜித்தை தம் கார்டன் இல்லத்துக்கு அழைத்து கழகத்தில் இணைந்து விடுங்கள் அரசியலில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனக்கேட்ட்தாகவும், அதற்கு அஜித் “ நான் தமிழனாகவே இருக்க விரும்புகிறேன். ஜாதி, மதம், இனம், அரசியல் எதனாலும் நானோ எனது ரசிகர்களோ சிதறிபோவதை விரும்பவில்லை. அதுவுமில்லாமல் நான் அதிமுகவில் சேர்ந்தால் என் மீது சாதிச் சாயம் பூசூவார்கள். அதை நான் விரும்பவில்லை. எனது சாதியை பார்த்து என் படங்களைப் பார்க்க வந்தால் எனது ஒவ்வோரு படமும் ஒரு வாரம் கூட ஓடாது. நான் எல்லோருக்கும் பொதுவானவன். அரசியலை விரும்பாதவன்” என்று அதிரடியாக சொன்னாராம். அப்படிப்பட்ட அஜித் மீது இப்போது வலுக்கட்டாயமாக அரசியலை தினிக்க முயற்சிக்கிறது திமுக என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் அதிரடியாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

முதல்வருக்கான பாராட்டு விழாவில் தைரியமாக மனதில் உள்ளதை முதல்வர் முன்னிலையிலேயே அஜித் சொல்லிவிட தொடக்கத்தில் முதல்வரே அஜித்தை கோபித்துக்கொள்ளவில்லையாம். உள்ளத்தான்யா சொன்னான் என்று துரைமுருகனிடம் சொன்ன கலைஞர் இப்போது அஜித் மீது கோபத்தில் இருக்கிறாராம். இந்த கோபத்துக்கு காரணம் விஜய் தரப்பு என்கிறது திமுக வட்டாரம். முதல்வர் உள்ள மேடை என்ற மரியாதை கூட இல்லாமல் இப்படி அஜித் பேசியதற்கு நீங்கள் கண்டித்திருக்க வேண்டும். அந்த மேடையில் அஜித் மட்டும்தான் ஹீரோவா? என்று உதயநிதியைக் கூப்பிட்டு சொல்ல அவர் அப்பா மூலம் தனது தாத்தாவுடம் விஜய் தரப்பு கோபத்தை எடுத்துச் சென்றாராம். விளைவு! விஜய்க்கு இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டத்தை மனதில் வைத்து அஜித் மீது அரசியலை தினித்து அவரை அடுத்த சந்தர்ப்பத்தில் வாய் திறக்காமல் செய்வது என்ற முடிவை எடுத்திருப்பதாக நம்பத்த்த் தகுந்த வட்டாரங்கள் படபடக்கின்றன.

இந்த அரசியலின் முதல் கட்டமாக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில் முதல்வருக்கான பாராட்டு விழாவை தனக்கே தனக்கென்று கலைஞர் டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது. இதற்கான விளம்பர ப்ரமோ அடிக்கடி கலைஞர் குழும சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரும், படமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அந்த பாராட்டு விழாவின் ஹைலைட்டாக இருந்த அஜித்தின் முகம் ஒரு நொடி கூட அதில் இல்லை. இந்த அதிரடி நடவடிக்கையில் விஜய் தரப்பு கொஞ்சம் சந்தோஷப் பட்டாலும், அஜித்துக்கு அசல் ரிலீஸுக்கு பிறகான நிகழ்வுகளில் கிடைத்திருக்கும் விளம்பரமும், கௌரமும் கண்டு, வெறுப்பில் கடுகடுத்துக் கிடக்கிறதாம் விஜய் தரப்பு.

Post a Comment

Blog Widget by LinkWithin