அண்மைய பதிவுகள்

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

குறிப்பு 1. நம் கணினியில் CD Writer இருந்தால் நீரோ (Nero), ராக்சியோ(Roxio) போன்ற மென்பொருள்கள் இல்லாமலேயே XP உதவியுடன் CD யில் தகவல்களை பதியலாம் என்பதை நாம் அறிவோம். இந்த பயன்பாடு தேவையில்லை என நினைத்தால், மை கம்ப்யூட்டர் சென்று, CD டிரைவை வலது க்ளிக் செய்து ப்ராபர்டீசில் Enable CD recording on this drive என்பதன் முன்னால் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி தகவல்களை பதிய இயலாது.




குறிப்பு 2. எந்த போல்டரையும் DOS மோடில் ஓபன் செய்ய...

ஸ்டார்ட்
--> ரன் --> சென்று regedit என டைப் செய்யுங்கள். அதில் HKEY_CLASSES_ROOT \Directory\shell சென்று, வலது க்ளிக் செய்து New --> Key என்பதை தேர்வு செய்யுங்கள்.




வலது
புறத்தில் அதற்கு ஒரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Open in Dos prompt என கொடுத்துள்ளேன்.



பின்னர் இடது புறத்தில்நாம் உருவாக்கிய key யை தேர்வு செய்து பின் வலது புறத்தில் மறுபடியும் அதன் கீழ் ஒரு key உருவாக்குங்கள். இதற்கு command என பெயர் கொடுங்கள்.




இப்போது வலது புறத்தில் இருக்கும் Default என்பதை டபுள் க்ளிக் செய்து வரும் ப்ராம்ப்ட் - இல் கீழே உள்ள மதிப்பை தட்டச்சு செய்யுங்கள்.







அவ்வளவுதான். இப்போது மை கம்ப்யூட்டர் சென்று எந்த போல்டரை வலது க்ளிக் செய்தாலும், வரும் மெனுவில் நீங்கள் முதலில் கொடுத்த key பெயருடன் ஒரு மெனு இருக்கும்.




அதனை
நீங்கள் செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட போல்டர் DOS மோடில் ஓபன் ஆகும். முயற்சித்து பாருங்களேன்.


குறிப்பு 3. எக்ஸ்.பி சில console utilities என அழைக்கப்படும் தொகுப்புகளுடன்தான் வருகிறது. சிலவற்றிற்கான ஷார்ட் கட் கீழே கொடுத்துள்ளேன். ஸ்டார்ட் --> ரன் சென்று கீழே கொடுத்துள்ளதை தட்டச்சு செய்து பாருங்கள்.


Computer Management - compmgmt.msc
Disk Managment - diskmgmt.msc
Device Manager - devmgmt.msc
Disk Defrag - dfrg.msc
Event Viewer - eventvwr.msc
Shared Folders - fsmgmt.msc
Group Policies - gpedit.msc
Local Users and Groups - lusrmgr.msc
Performance Monitor - perfmon.msc
Resultant Set of Policies - rsop.msc
Local Security Settings - secpol.msc
Services - services.msc
Component Services - comexp.msc

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin