அண்மைய பதிவுகள்

உங்கள் கணினியில், பயனர் மாற்றம் (Switch User) சுலபமாய் செய்ய...


Tsdiscon என்பது விண்டோஸின் உள்ளேயே இருக்கும் ஒரு செயலியாகும்.
இதனை பயன்படுத்தி, ஒரு பயனர் கணக்கிலிருந்து இன்னொரு பயனர் கணக்குக்கு எளிதாய் மாறலாம்.

இதனை கீழ்க்கண்ட முறையில் சுலபமாக செய்யலாம்.

1. மை கம்ப்யூட்டர் சென்று, C:\Windows\System32 டைரக்டரிக்கு செல்லுங்கள்.

2. அதில் காணப்படும் tdsdiscon என்ற கோப்பினை வலது க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட் கட் கொண்டு வாருங்கள்.




3. உங்கள் டெஸ்க்டாப்பிற்கு சென்று வந்திருக்கும் ஷார்ட் கட்டை, Switch user என பெயர் மாற்றம் (rename) செய்யுங்கள்.




4. பின்னர் அந்த ஐகானை வலது க்ளிக் செய்து ப்ராபர்டீஸ் (properties) தேர்ந்தெடுங்கள்.

5. வரும் விண்டோவில், ஷார்ட்கட் டேபை தேர்ந்தெடுத்து, அதில் Change icon பட்டனை அழுத்துங்கள்.



6. வரும் ஐகான்களில் உங்களுக்கு பிடித்த ஐகானை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.






7. இப்போது இந்த ஐகானை டபுள் க்ளிக் செய்தால் Switch User விண்டோ உங்களுக்குக் கிடைக்கும்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin