அண்மைய பதிவுகள்

க்ளாக்கோமா எனப்படும் கண் பிரச்னை.



முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே கொடுத்து வரும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில், பாலிமர் தொலைகாட்சி அறிவியலுக்கும், போது அறிவுக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.




இன்று காலை புத்தம் புது காலை நிகழ்ச்சியில், கண் பிரச்சனைகள் பற்றி மருத்துவர் ஒருவர் விவரித்துக்கொண்டிருந்தார். பாதி நிகழ்ச்சியிலிருந்து பார்க்க தொடங்கியதால், மருத்துவரின் பெயரை தெரிந்துகொள்ள முடியவில்லை.

க்ளாக்கோமா
(Glaucoma) என அழைக்கப்படும் , கண் பிரச்னை பற்றி அழகாய் விவரித்தார்.
கண் கருவிழிக்கும் (iris), விழித்திரைக்கும் (cornea) இடையே உள்ள பகுதி anterior chamber என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி முழுவதும், aqueous எனப்படும் தெளிவான திரவத்தால் நிரப்பபட்டிருக்கும். இந்த திரவம் சுரக்கப்பட்டு, anterior chamber க்கு வெளியில் சிக்கலான வெளியேற்றுப்பாதை மூலம் வெளியேறுகிறது. இந்த திரவம் சுரத்தலும், வெளியேறுதலும் இடையேயான சமநிலை மாறும்பொழுது IOP எனப்படும், கண்ணின் Intraocular pressure எனப்படும் அழுத்தம் மாறுபடுகிறது. இந்த அழுத்தமானது, அதிகபட்ச அளவான 20mm க்கு குறைவாக இருக்க வேண்டும். இதைவிட அதிகமானால் இந்த அழுத்தம், பார்வை நரம்பை (optic nerve) பாதித்து, க்ளாக்கோமா ஏற்படுகிறது.











இந்த அழுத்தத்தைக் கண்டறிய டோனோ மீட்டர் (tono meter) பயன்படுகிறது.







க்ளாக்கோமா
கண்ணின் உட்புறத்தில் ஏற்படும் பிரச்னை என்பதால், அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. சோதனை மூலமே க்ளாக்கோமாவை தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் கீழ்க்கண்ட பிரச்சனைகள், க்ளாக்கோமா இருக்கலாமோ என்பதை அறிய இயலும்.


1. பார்வை குறைதல்.
2. கடுமையான கண் வலி.
3. தலைவலி
4. வாந்தி மற்றும் குமட்டல்.
5. கண்ணீர்
6. வெளிச்சத்தில் பார்வை கூசுதல்.
7. விழித்திரை விரிவடைதல்.

க்ளாக்கோமாவை, மருதுகள் மூலமே கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும் (கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். குணப்படுத்த இயலாது). அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்துகளால் கட்டுப்படுத்த இயலாத போது அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் மருத்துவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.


மேலும், 40 வயதுக்கு மேல் அடிக்கடி கண்ணின் அழுத்தத்தை சோதனை செய்து கொள்ள வேண்டும். என்றும் அவர் சொன்னார்.

நல்ல தகவல்களாக இருந்ததால் இதனை இங்கு பதிவிடுகின்றேன்.



அன்புடன்..,


பா.வேல்முருகன்.



1 comments:

பொற்கோ said...

மிகவும் பயனுள்ள பதிவு!

Post a Comment

Blog Widget by LinkWithin