(QR Code) QR குறியீடு பற்றி தெரிந்து கொள்வோம். - உங்கள் தளத்துக்கான QR குறியீடு.
Labels:
ஆக்கங்கள்,
மென்பொருள்கள்
நாம் அனைவருக்கும் பட்டைக்குறியீடு (Bar Code) பற்றி தெரிந்திருக்கும்.
பட்டைக்குறியீட்டில் தகவல்களைப்பதிந்து அவற்றிற்குரிய படிப்பான்கள் மூலம் தகவல்களை படிக்கும் முறை பற்றி நமக்கு நன்கு தெரியும். பட்டைக்குறியீட்டிலிருந்து தகவல்களைப் பெரும் வேகமும், அதன் துல்லியமும், அதனை மிகவும் பிரபலப்படுத்தியது. மேலும் அதிக தகவல்களை, பட்டைக்குறியீடில் பரிமாற, இரு பரிமாண பட்டைக்குறியீடு பயன்படுகிறது.
இரு பரிமாண பட்டைக்குறியீட்டில், பல முறைகள் உள்ளன. நாம் இந்தப்பதிவில், QR குறியீட்டைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
QR code என்னும், இரு பரிமாண பட்டைக்குறியீடு "டென்சோ-வேவ்" என்ற நிறுவனத்தால் 1994 - ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. QR என்பது Quick Response என்பதன் சுருக்கமாகும்.
QR குறியீட்டில் 7089 எண்களும் (numeric) , 4296 எண்ணெழுத்துக்களும் (alphanumeric) குறியிடும் ஆற்றல் மிகுந்தவை. இதன் நான்கு புறத்திலும் இருக்கும் சதுர வடிவத்தைக்கொண்டு 360 அளவு கோணத்திலிருந்தும் இதனை படித்துணர முடியும் என்பது இதன் சிறப்பாகும். அதே போல, ஒரே குறியீட்டை பல பாகங்களாகப்பிரித்து, தனித்தனியே தகவல்களைப்பெறவும் முடியும்.
நீங்கள் எங்கோ ஒரு QR குறியீடைக் காண்கிறீர்கள். அதில் பொதிந்திருக்கும் தகவல்களை அறிய உங்கள் கைபேசியில், படமெடுக்கும் வசதியும் (Camera), படிப்பான் மென்பொருளும் இருந்தால் போதும். அதனைக்கொண்டே அதிலிருக்கும் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். மிக அதிகமாய், இணைய முகவரிகளை பதிந்து வைக்க QR Code பயன்படுகிறது. கைபேசி QR படிப்பான் மென்பொருள் பல தளங்களில் கிடைக்கின்றன.
படிப்பான் மென்பொருள் வழங்கும் ஒரு தளம் காண இங்கு சொடுக்கவும்.
இந்தக் காணொளியைப்பாருங்கள்.
QR குறியீடு பற்றி மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.
உங்கள் ப்ளாகைப்பற்றிய QR குறியீடு பெற நீங்கள் கஷ்டப்பட வேண்டியதே இல்லை. கீழே உள்ள நிரலை உங்கள் உலாவியில் முயற்சித்தாலே போதும். கூகுல், உங்கள் ப்ளாகிற்கான QR குறியீட்டைக்கொடுத்து விடும். கீழே உள்ளது கனா காலத்திற்கான குறியீடு.
http://chart.apis.google.com/chart?cht=qr&chl=http://YOUR-WEBSITE-ADDRESS/mobile&chs=120x120
மேலும் பல படிப்பான் மென்பொருள்கள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.
நன்றி :
http://www.qrme.co.uk
http://www.denso-wave.com
http://chart.apis.google.com
http://www.qrme.co.uk
http://www.denso-wave.com
http://chart.apis.google.com
http://en.wikipedia.org/wiki/QR_Code
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,
பா.வேல்முருகன்.
இந்த தகவல் பலரையும் சென்றடைய இங்கு வாக்களித்து ஆதரியுங்கள்.
2 comments:
நல்ல தகவல்.
இந்த குறியீடுகள் இணையதளங்களில் எத்தகைய விதத்தில் பயன்படும் என்று கூறினால் மேலும் பயனளிக்கும்
தங்கள் வருகைக்கு நன்றி நீச்சல்காரன். அதனைப்பற்றி இன்னொரு பதிவிடுகிறேன்.
Post a Comment