அண்மைய பதிவுகள்

அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - பாடம் - 1.



தகவல் தளம் - ஒரு அறிமுகம் .
---------------------------------------

தகவல் தளம் (DATABASE) - ன்னா என்னன்னு ஈசியா சொல்லனும்னா , தகவல்களின் தொகுப்புதாங்க தகவல் தளம் .
அதாவது, தகவல்களை, சேமிச்சு வைக்கிற இடத்தை அல்லது ஒரு அமைப்பை , Database, தமிழ்ல தகவல்தளம் அப்டீன்னு சொல்றோம்.

இதில உள்ள தகவல்களை நிர்வகிக்கறதை தகவல் தள நிர்வாகம் (Database Management) அப்டீன்னு சொல்லுவாங்க.

தரவு எல்லோரிடமும் உள்ளது (Data Exists Everywhere)
-----------------------------------------------------------------

எல்லா இடத்துலயும் தரவு (DATA) இருக்குங்க.
ஒரு ஓட்டப்பந்தயம் நடந்தா , எந்த நேரத்துல, எந்த இடத்துல நடந்தது ?. அதை யார் நடத்துனாங்க. அதுல எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?. அவங்க ஒவ்வொருத்தரோட பேர் என்ன ? அவங்க ஒவ்வொருத்தரும் எந்த இடத்துல இருந்து வந்திருக்காங்க. கடைசியா அதுல யார் ஜெயிச்சது. அப்டி ஜெயிச்ச ஒருத்தர் எவ்வளவு நேரத்துல பந்தய தூரத்தை, கடந்தாரு. இது ஒரு உலக சாதனையா ? அப்டீனு பாக்கறதுக்கு பழைய பந்தய வரலாறு. இது ஒவ்வொன்னுமே தரவுதான்.

பந்தயத்தை விடுங்க. நம்ம உடம்புலேயே பாருங்க. நம்மளோட எடை என்ன ? உயரம் எவ்வளவு ? ரத்த அழுத்தம் எவ்வளவு ? கண்ணாடி போட வேண்டியிருக்கா ? அப்படி போட வேண்டியிருந்தா பார்வை திறன் எவ்வளவு .

அப்பப்பா.. எவ்வளவு தரவுகள் . இப்படி எல்லா இடத்துலயும் தரவுகள் இருக்கு .

இதை எல்லாத்தையும் தொகுத்தா நமக்கு தகவல்கள் கிடைக்கும்.

ORACLE - ங்கறது ஒரு தொடர்புடைய தகவல் தள மேலாண்மை அமைப்பு (Relational Database management System).

இதை இங்க்லீஷ்ல RDBMS அப்டீன்னு சுருக்கமா சொல்லுவாங்க.


ஆரக்கிள் கட்டமைப்பு
--------------------------

இந்த தகவல்தளம், நினைவகத்தை பயன்படுத்துவதற்கும் (Memory management),
வரக்கூடிய தகவல்கள் , அந்த தகவல்கள் யாரால கொடுக்கப்படுது (user),
அதை எந்த இடத்துல ஒரு நேர்த்தியா சேமிச்சு வைக்கறது, (Database writer),
என்னென்ன தகவல்கள் சேர்க்க, மாற்ற , அழிக்கப்படுதுங்கறதை எழுதி வைக்க (Log writer),
செயல்படுத்தப்பட்ட கட்டளைகளின் விளைவா , அந்த தகவல் தளத்துல என்னென்ன மாற்றங்கள் நடந்தது (Archive),
அப்டீங்கரதேல்லாம் பின்புலத்துல இருந்து தானாகவே செயல்படக்கூடிய செயலிகள் (background processes), உடனுக்குடனே நம்ம வன்தட்டுல ஒரு சில பைல்ஸ்ல எழுதுறதின் மூலமா நடக்குது.

இதைப்பத்தி நாம பின்னால விரிவா பாக்கலாம்.

அடுத்ததா....
டேபிள் (Table) என்றால் என்ன ? நிரல் (Column), நிரை (Row) அப்டீன்னு எதை சொல்றோம் அப்டீன்னு அடுத்த பாடத்துல பாக்கலாம்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin