அண்மைய பதிவுகள்

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.



விண்டோஸில், இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி ?

நம்ம வீட்ல ரெண்டு கப்யூட்டர் இருக்குன்னு வச்சுக்கோங்க. சிலர்கிட்ட ஒரு லேப்டாப்பும், ஒரு டெஸ்க்டாப்பும் இருக்கும். சிலர்கிட்ட ரெண்டு லேப்டாப் இருக்கும். அது ரெண்டையும், தனித்தனியா பயன்படுத்தும்போது, ஒன்னுல இருக்கக்கூடிய பைல்களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாத்தனும்னா, ரெண்டு கம்ப்யூட்டருக்கும் நடுவுல நெட்வொர்க் - ன்னு சொல்லக்கூடிய இணைப்பு இருக்கணும்.

இந்த ரெண்டு கம்ப்யூட்டருக்கும் நெட்வொர்க் பண்ணனும்னு நீங்க நினைச்சா, கீழே சொல்லிருக்க மாதிரி நீங்க செஞ்சா போதும். சுலபமா சின்ன நெட்வொர்க் பண்ணிடலாம். (ரெண்டு கம்ப்யூட்டர்கள்ளையும், ஈத்தர்நெட் கார்டு (Ethernet Card) இருக்கணும்.

சரி, இப்போ என்னென்ன வேணும்னு சொல்லிடறேன்.

1. 2 - RJ45 இணைப்பான்கள்.


2. தேவையான நீளத்துக்கு, CAT5 கேபிள்.
3. சின்ன கத்தி.
4. RJ45 க்ரிம்ப்பிங் கருவி.



இப்போ நம்மோட ரெண்டு கணினிகள்ளையும், ஈத்தர்நெட் கார்டு இருக்கான்னு செக் பண்ணிக்கணும்.
அது எப்படி பண்றதுன்னு நீங்க கேக்கலாம்.

(கீழே உள்ளதெல்லாம் விண்டோஸ் எக்ஸ்.பி - யில் பார்க்கக்கூடியது).

உங்க கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்ல இருக்கா My Computer ஐகானை, வலது க்ளிக் பண்ணுங்க.



அதுல வர்ற, properties மெனு - வை க்ளிக் பண்ணுங்க.



இப்போ System Properties - ங்கற தலைப்புல, ஒரு விண்டோ கிடைக்கும்.


அதுல, Harware - ங்கற டேபை தேர்ந்தெடுத்து, அதுக்கு கீழே டிவைஸ் மேனேஜர் பட்டனை, க்ளிக் பண்ணுங்க.

இப்போ டிவைஸ் மேனேஜர் - ன்னு, இன்னொரு விண்டோ திறக்கும்.



அதுல, network Adapters - ங்கற தலைப்புக்கு பக்கத்துல இருக்கும், (+) அடயாளத்தை க்ளிக் பண்ணீங்கன்னா, அதுக்கு கீழே அந்த நெட்வொர்க் அடாப்டரோட பெயரும், அதோட டிரைவர் பெயரும் இருக்கும்.

அப்படி இருந்தா, உங்க கணினியில, நெட்வொர்க் அடாப்டர் (Ethernet Card) இருக்குன்னு அர்த்தம்.
அப்படி இல்லன்னா, தனியா ஈத்தர்நெட் கார்டு இணைக்க வேண்டியிருக்கும்.
இப்போ வரக்கூடிய பிராண்டட் கணினிகள்ள, இது சேர்ந்தே கிடைக்குது.


அடுத்ததா, RJ45 connectors - கனெக்ட் பண்ணி, ரெண்டு கம்ப்யூட்டரையும் எப்டி இணைக்கிறதுன்னு நாளைக்கு சொல்றேன்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin