அண்மைய பதிவுகள்

உங்கள் ப்ளாக் - இன் சர்வர் எங்கிருக்கிறது (ஐ.பி.அட்ரஸ்) தெரியுமா ?

நாம் நம்முடைய ப்ளாக் அட்ரசை, ப்ரவ்சரில், அடித்து விட்டு காத்திருப்போம்.
சில நொடிகளில் நம்முடைய ப்ளாக் ப்ரவ்சரில் அழகாக விரிந்திருக்கும்.


ஆனால், நம்முடைய ப்ளாக் - பெற நமது ப்ரவ்சர் அனுப்பிய கோரிக்கை எங்கெங்கெல்லாம் சென்று, அங்கீகரிக்கப்பட்டு, கடைசியில் பெற்று வரப்படுகிறது என்பதை அறிய வேண்டுமா ?


உங்கள் கணினியிலேயே ஒரு கட்டளை உள்ளது.


பயன்படுத்தி பாருங்கள். மிக ஸ்வாரஸ்யமாக இருக்கும்.


உங்கள் START பட்டனை அழுத்துங்கள்.


அதில் RUN சென்று command என்று டைப் செய்யுங்கள்.







வரும் MS-DOS ஸ்க்ரீனில், tracert www.yourblogname.com டைப் செய்து காத்திருங்கள்.






அவ்வளவுதான். உங்கள் கோரிக்கை எந்தெந்த மில்லி செகன்ட் - இல் எந்தெந்த சர்வரை அடைந்தது என்று .பி. அட்ரசுடன் உங்களுக்கு விளக்கமாய் காட்டும். சில நேரங்களில் உங்கள் கோரிக்கை சர்வரை எட்டவில்லை எனில், * தோன்றும்.
கடைசியில் google சர்வரை அடைந்து விடும்.


கடைசியில் வரும் .பி அட்ரசை உங்கள் உலவியில் டைப் செய்து பாருங்கள்.
ஆச்சரியம் காத்திருக்கிறது.


உங்கள் ப்ளாகிற்கு மட்டுமின்றி எந்த ஒரு தளத்தின் மூலத்தையும் இந்த கட்டளையின் மூலம் அறியலாம்.


பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.

7 comments:

பின்னோக்கி said...

உபயோகமான பதிவு. நீங்கள் கூறியபடி, கடைசி ஐபி அட்ரஸில் ஆச்சர்யம் இருந்தது :). நன்றி.

யூர்கன் க்ருகியர் said...

unable to resolve target system name www.graphicopes.com என்று வருகிறது.. ஏன் எனக்கு வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை. :(

யூர்கன் க்ருகியர் said...

பாடமெல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு .
ஆரகுள் விலையினை பார்த்தா என்னால வாங்கமுடியுமென்று தெரியவில்லை. :(

TAMIL said...

நல்ல பதிவு , முயற்சிக்கு நன்றி

பா.வேல்முருகன் said...

திரு யூர்கன்.
உங்களுடைய graphicopes நானும் ட்ரை பண்ணேன்.
சரியாக வருகிறது.
ஸ்பெல்லிங் மாற்றி டைப் பண்ணினேன். நீங்கள் சொன்ன பிழை வருகிறது.
ஸ்பெல்லிங் செக் பண்ணுங்களேன். ப்ளீஸ்.

பா.வேல்முருகன் said...

திரு தமிழ் மற்றும் பின்னோக்கி அவர்களுக்கு...,

பின்னூட்டம் இட்டதற்கு நன்றி நண்பர்களே.

Muruganandan M.K. said...

மிக உபயோகமான பதிவு. நன்றி

Post a Comment

Blog Widget by LinkWithin