அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - பாடம் - 3
Labels:
ஆரக்கிள்
தரவு வகைகள் CHAR, NCHAR, VARCHAR, VARCHAR2, NVARCHAR2, NUMBER, PLS_INTEGER, BINARY_INTEGER, LONG, DATE, TIMESTAMP, RAW, LONGRAW, ROWID, UROWID, MLSLABEL, BLOB, CLOB, NCLOB, BFILE, XMLType - ன்னு பல வகைப்படும்.
ஆனா, நாம அடிப்படையானவைகள மட்டும் எடுத்துக்கலாம்.
அடிப்படையில முக்கியமானது, NUMBER, CHAR, VARCHAR, VARCHAR2, DATE, இவைகள் மட்டும்தான். மத்த வகைகளை பத்தி அதை பயன்படுத்தும்போது தெரிஞ்சுக்கலாம்.
1. NUMBER(p,s) :
இது எண்களை குறிக்கும் தரவுகள்ல பயன்படுது. இதுல (p,s) - ன்னு இருக்கறது என்னன்னா,
p - precision, s-scale.
அதாவது, p -ங்கறது மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை, s - ங்கறது, தசம ஸ்தானங்களின் இலக்கங்களின் எண்ணிக்கை.
எடுத்துக்காட்டா,
NUMBER(5,2) - ன்னு குறிச்சா, மொத்தம் 5 இலக்கங்கள் சேமிக்கலாம். அதுல 2 இலக்கங்கள் புள்ளிக்கு அடுத்தபடி வரணும். அதாவது இதுல 999.99 வரைக்கும் சேமிக்கலாம்.
இந்த ப்ரசிசன் - ல 1 - ல இருந்து 38 வரைக்கும்கொடுக்கலாம்.
ஸ்கேல்ல -84 ல இருந்து 127 வரைக்கும் கொடுக்கலாம்.
2. CHAR(size) :
இது தீர்மானிக்கப்பட்ட அளவுடைய எழுத்துரு டேட்டாவை நிர்ணயம் பண்ண பயன்படுது.
அதென்ன, "தீர்மானிக்கப்பட்ட", "தீர்மானிக்கப்படாத " அப்டீன்னு, கேப்பீங்கங்கறது எனக்கு புரியுது.
ஒவ்வொரு எழுத்துருவும் ஒரு பைட் (byte) அளவுள்ள நினைவகத்தை ஆக்கிரமிக்கும். நாம டேபிள் உருவாக்கும் போது EMPL_NAME CHAR(8) - ன்னு நாம குறிப்பிட்டா, EMPL_NAME அப்டீங்கற நிரல் - ல அதிகபட்சமா 8 எழுத்துரு டேட்டாவை சேமிக்கலாம் (8 bytes). எடுத்துக்காட்டா, "RAJAMANI" அப்டீங்கற பெயரை எந்த பிரச்னையும் இல்லாம சேமிக்கலாம். இப்போ, "VEDHA" -ங்கற பேரை கொடுத்தா, அது 5 எழுத்துரு டேட்டாவை (5 byte) சேமிச்சுக்கிட்டு மீதமுள்ள 3 பைட் இடத்தை, வெற்றிடத்தால (ஸ்பேஸ்) - நிரப்பி வச்சுக்கும். யாருக்கும் அந்த இடத்த விடாது. அதுதான் "தீர்மானிக்கப்பட்ட" அப்டீங்கரதுக்கு அர்த்தம்.
அட்டவணைல ஆரக்கிளோட ஒவ்வொரு பதிப்புளையும், எப்படி சேமிக்கலாம்னு சொல்லிருக்கேன்.
3. VARCHAR, VARCHAR2(size),
இப்பல்லாம், VARCHAR அதிகமா பயன்படுத்துறது இல்லங்க. VARCHAR2 - அதிகமா பயன் படுத்துறாங்க.
இதுவும் எழுத்துரு டேட்டாவை சேமிக்கதான் பயன்படுது. ஆனா இது இடமெல்லாம் போட்டு வைககாதுங்க.
எடுத்துக்காட்டா, EMPL_NAME VARCHAR(8) அப்டீன்னு குறிப்பிட்டா, அந்த நிரல் - ல "VEDHA" - ங்கற டேட்டாவை சேமிக்கலாம். மீதமுள்ள 3 பைட் இடத்தை ஆக்ரமிக்காது. ஒருவேளை பின்னாடி அதுக்கு மேல சேமிக்கனும்னாலும், 5 பைட் போக மீதமுள்ள எழுத்துகளை, வேறொரு இடத்துல சேமிச்சு வச்சுக்கும். நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல.
4. DATE :
இது தேதியை சேமிச்சு வைக்க பயன்படுது.
இந்த அட்டவணைல உள்ளபடி இதுக்கு இடைல எந்த தேதியும் சேமிக்கலாம்.
இது தேதியை சேமிச்சு வைக்க பயன்படுது.
இந்த அட்டவணைல உள்ளபடி இதுக்கு இடைல எந்த தேதியும் சேமிக்கலாம்.
மத்தது எல்லாம் அடுத்தடுத்து பார்ப்போம்.
இன்னிக்கு SQL*Plus பத்தி சொல்ல முடியல. அடுத்த பாடத்துல பாக்கலாம்.
1 comments:
அருமையான பதிவு ... உங்களுடைய சேவை தொடரட்டும் ...
Post a Comment