அண்மைய பதிவுகள்

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.


தேவையான டூல்ஸ் எல்லாம் எடுத்துட்டீங்களா ? அதே போல, ஈத்தர்நெட் காடு செக் பண்ணீட்டீங்களா ?

இப்போ நாம CAT5 கேபிள் மூலமா நாம ரெண்டு கம்ப்யூட்டரையும் இணைக்க போறோம்.

அந்த தேவையான நீளமுள்ள, CAT5 கேபிள் - ல ஒரு முனையை எடுத்து, மேலே உள்ள வெள்ளை நிற லேயரை மட்டும் ஒரு இன்ச் அளவுக்கு பிரிச்சு எடுத்துருங்க. அதுக்கு உள்ளே, 8 நிறங்கள் - ல சின்ன சின்ன வயர்கள் இருக்கும். அதுல, 4 வயர்கள்ல முழு நிறமாவும் மீதமுள்ள 4 வயர்கள் - ல வெள்ளை நிறம் கலந்தும் இருக்கும். ஒவ்வொன்னைய்ம் தனித்தனியா பிரிங்க.



அப்புறம் கீழ சொல்லியிருக்க மாதிரி வரிசையில, ஒவ்வொரு வயரையும் வரிசையா சேர்த்து வைங்க.

1 . வெள்ளையும் ஆரஞ்சும்.
2. ஆரஞ்சு மட்டும்.
3. வெள்ளையும் பச்சையும்.
4. ஊதா மட்டும்
5. வெள்ளையும் ஊதாவும்.
6. பச்சை மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.





இந்த வரிசையில எல்லா வயர்களையும் இடமிருந்து வலமா வச்சுக்கோங்க. வச்சுட்டு எல்லா வயர்களின் முனையும் சமமா வர்ற மாதிரி க்ரிம்பிங் டூல் - ல இருக்கும் கட்டர் உதவியோட கட் பண்ணுங்க.



இப்போ எல்லா வயர்களையும் சேர்ந்த மாதிரி பிடிச்சுட்டு, RJ45 கனெக்டர் - ல கரெக்டா உள்ளே வைங்க. கடைசி வரைக்கும் வயர் போயிடுச்சான்னு பக்கவாட்டுல செக் பண்ணிக்கோங்க.



இப்போ வயரையும், கனெக்டரையும் சேர்ந்தாப்புல பிடிச்சுட்டு, க்ரிம்பிங் டூல் - ல RJ45 க்ரிம்ப்பர் - ல கரெக்டா வச்சு (கட்டிங் பிளேயர் போல) டூல அழுத்தி கரிமப் பண்ணுங்க. தைரியமா அழுத்தலாம். கனெக்டர் உடையாது.



இப்போ ஒரு பக்கம் நாம க்ரிம்ப் பண்ணியாச்சு. இதே போல அடுத்த முனைல (தேவையான அளவு நீளத்துக்கு CAT5 கேபிள கட் பண்ணிக்கோங்க) கீழே உள்ளது போல வரிசையில வயர்களை அடுக்கி, இந்த பக்கத்துல பண்ணினது போலவே க்ரிம்ப் பண்ணுங்க.
வயர்களின் வரிசை.

1. வெள்ளையும் பச்சையும்.
2. பச்சை மட்டும்.
3. வெள்ளையும் ஆரஞ்சும்.
4. ஊதா மட்டும்.
5. வெள்ளையும் ஊதாவும்.
6. ஆரஞ்சு மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.


ரெண்டு பக்கமும் அழகா க்ரிம்ப் பண்ணிட்டீங்களா. அடுத்து, இந்த கேபிளை, கம்ப்யூட்டர்ல இணைக்க வேண்டியதுதான் பாக்கி.

இப்போ உங்க கம்ப்யூட்டருக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா, ஈத்தர்நெட் போர்ட் இருக்கும். ரெண்டு கம்ப்யூட்டர்லயும், அந்த போர்ட் - ல இந்த கேபிளோட ரெண்டு முனைகளையும் இணைச்சுடுங்க.






அடுத்ததா, கம்ப்யூட்டர்ல பண்ண வேண்டிய செட்டிங்ஸ் பத்தி நாளைக்கு சொல்றேனே. ...




2 comments:

யூர்கன் க்ருகியர் said...

RJ45 Connector 1 <====> RJ45 Connector 2

1 - 3;
2 - 6;
3 - 1;
4 - 4;
5 - 5;
6 - 2;
7 - 7;
8 - 8;


Right ?

இரா.கதிர்வேல் said...

மிகவும் பயனுள்ள தகவல் நன்றாக தெளிவாக விளக்கியுள்ளிர்கள்

Post a Comment

Blog Widget by LinkWithin