அண்மைய பதிவுகள்

அதிகமான கொழுப்பு "அந்த" விஷயத்தை பாதிக்குமா?



பொண்ணுங்களுக்கு, ரத்தத்துல இருக்குற அதிகப்படியான இருக்கற கொழுப்பு இதயத்தை மட்டுமில்லாம "அந்த" விஷயத்துல கிடைக்கிற சந்தோசத்தையும் பாதிக்குதாம்ங்க. இது மூலமா என்ன சொல்றாங்கன்னா, ஸ்டேட்டின் (statin) மாதிரியான கொழுப்பை குறைக்கக்கூடிய மருந்தெல்லாம், பெண்மை குறைபாடை (Female Sexual Dysfunction - FSD) தீர்க்கறதுக்கு மருந்தா பயன்படுத்தலாம் -னு சொல்றாங்க.



ரத்தத்துல அதிகமா கொழுப்பும், கொழுப்பு சார்ந்த பொருள்களும், அதிகமா சேர்றதை ஹைபர்லிபிடேமியா (hyperlipidemia) அப்டீன்னு சொல்லுவாங்க. இது ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடை உண்டக்குதாம். எப்டீன்னா, ரத்தக்குழாய்கள்ள, இந்த கொழுப்புகள் எல்லாம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை உண்டாக்கக்கூடிய செல்களுக்கு, ரத்தம் பாயறதுக்கு தடை உண்டாக்கறதுனால, ஆண்மைகுறைபாடு ஏற்படுது. அதுபோல், பெண்களுக்கும் ஏற்படுத்தலாம் அப்டீன்னு, ஆராய்ச்சி பண்ணதுல, முதல்பாராவுல சொன்னதை கண்டுபிடிச்சிருக்காங்க.




கேத்தரின் எஸ்போசிடோ (Catherine Esposito) - ங்கற பெண் ஆராய்ச்சியாளரும், அவங்களோட சக ஆராய்ச்சியாளர்களும், மெனோபாஸ் ஆகாத (premenopausal) பொண்ணுங்கள்ல, ஹைபர்லிபிடேமியா இருக்கக்கூடிய, அப்புறம் இல்லாத பொண்ணுங்களை ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.

ஆராய்ச்சியோட முடிவுல, ஹைபர்லிபிடேமியா இருக்கற பொண்ணுங்க, இல்லாத பொண்ணுங்களை விட செக்ஸ் - ல குறைவான கிளர்ச்சியும், மிதமான உச்சகட்டத்தையும்தான் அடைஞ்சாங்கலாம்.
ஆனா, ஹைபர்லிபிடேமியா இருக்கக்கூடிய பொண்ணுங்களுக்கு, "அந்த" ஆசை எல்லா பொண்ணுங்களை போலவே இருக்குமாம்.

அதுனால, பசங்களா இருந்தாலும், பொண்ணுங்களா இருந்தாலும், கொழுப்புள்ள உணவை அதிகமா சாப்பிடறதுனால, "அந்த" விஷயத்துல கண்டிப்பா கொஞ்ச அளவாவது பாதிப்பு இருக்கும்.

கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடறதை குறைங்க.

எனக்கு வோட்டு போடறதை குறைக்காதீங்க.




1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உபயோகமான தகவல்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .........


(கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடறதை குறைங்க.

எனக்கு வோட்டு போடறதை குறைக்காதீங்க)

பார்ரா..........எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க

Post a Comment

Blog Widget by LinkWithin