கூகுல், யாஹூ போன்ற தேடுபொறிகளுக்கு நெடெக்ஸ் கர்ப்பரேஷனால் தலை வலி.
கூகுல், யாஹூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இனிமே, நெடெக்ஸ் கார்ப்பரேஷனுக்கு ( Netex Coprporation ) - பணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஏன்னா, WWW addressing page retival - ங்கிற டெக்னாலஜி தனக்குதான் சொந்தம்னு சொல்லி இந்த நிறுவனம் காப்புரிமை வாங்கிருக்கு.
இந்த காப்புரிமை பத்தி நீங்க தெரிஞ்சுக்கனுமா. இங்க கிளிக் பண்ணுங்க.
Aviv Refuah - இந்த பெயரை தமிழ்ல எப்டி எழுதுறதுன்னு தெரியல. இவர்தாங்க இந்த நெடெக்ஸ் கம்பெனி தலைமை செயல் அதிகாரி (CEO). இவரோட 17 - வது வயசுல இந்த கம்பெனிய தொடங்கிருக்காரு. இப்போ அவருக்கு 28 வயசாகுதாம். இந்த வயசுல என்ன சாதனை பாருங்க.
சரி, www addressing டெக்னாலஜி - ன்னா என்னன்னு பாப்போமா..,
உங்க உலவில (browser) தள முகவரி (site address) டைப் பன்றீங்கள்ள. அங்க முழுசா அடிக்காம பெயரை மட்டும் அடிசீங்கன்னா அது நேரா அந்த தளத்துக்கு போயிரும். உதரணத்துக்கு, நீங்க, http://www.dinamalar.com - ன்னு அடிக்காம, வெறும் dinamalar - ன்னு அடிசீங்கன்னா, அப்பவும் அது தினமலர் தளத்துக்கு போயிடும். அதே மாதிரி, கூகுல் ஓபன் பண்ணி, dinamalar - ன்னு டைப் பண்ணி, I'm Feeling Lucky - ன்னு கொடுத்தீங்கன்னா, நேர தினமலர் தளத்த திறக்கும். இந்த மாதிரி மாத்தி விடுதே, இதுதாங்க www addressing அப்டீங்கறது.
இந்த டெக்னாலஜி எங்களுக்குதான் சொந்தம்னு சொல்லி, இந்த Aviv Refuah இருக்காரே, அவர் காப்புரிமை வாங்கிட்டாராம்.
இந்த காப்புரிமை கிடைக்கப்போகுதுன்னு, அந்த நிறுவனப் பங்குதாரர்களுக்கெல்லாம் முன்னாடியே தெரிஞ்சு, லாபத்த அள்ளிட்டாங்க. இந்த இஸ்ரேல் நாட்டு கம்பெனியோட பங்கு ஒரே நாள்ல 144% உயர்ந்ததாம். அந்த நிறுவனத்தோட மதிப்பு ஒரே நாள்ல 30 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துடுச்சு.
ம்ம். எனக்கு வோட்டாவது உயரட்டும். பிடிச்சிருந்தா வோட்டு குத்திட்டு போங்க.
2 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
மிகவும் நல்ல தகவல் நண்பா
Post a Comment