அண்மைய பதிவுகள்

வேர்ட், பவர் பாயின்ட் - இல் உள்ள படங்களை மட்டும் பிரிக்க ?


வேர்ட் மற்றும் பவர் பாயின்ட் பைல்களில் உள்ள படங்களை மட்டும் பிரித்து தனித்தனி பைல்களாக சேமிப்பது எப்படி ? இதற்கு எங்கு மென்பொருள் தேடுவது ?

சில நேரங்களில் பவர் பாயின்ட் - இல் நாம் ஒவ்வொரு ஸ்லைட் ஆக சென்று தேவையான படத்தை ரைட் க்ளிக் செய்து, "Save Picture As..." என்று கொடுப்போம். இது மிகவும் சுற்று வேலை.





அதிக நேரம் பிடிக்க கூடியது. ஆனால், வேர்ட் - இல் இதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த வேலையை சில நொடிகளில் செய்து விட முடியும்.

தேவையான, வேர்ட் அல்லது பவர் பாயின்ட் பைலை திறங்கள்.

மெனுவில், File சென்று Save As... தேர்ந்தெடுங்கள்.





சேமிக்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து, என்ன பெயரில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து, கீழே "Save As Type" என்பதில் "Web Page" என் தேர்ந்தெடுங்கள்.

அனைத்தும் ஒரு HTML டாகுமென்ட் - ஆக சேமிக்கப்படும்.

பின் My Computer சென்று, சேமித்த இடத்திற்கு சென்று பார்த்தால், ஒரு html பைல் இருக்கும். அருகிலேயே, ஒரு தனி போல்டரில், எல்லா துணை பைல்களும் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த போல்டரில் நமக்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்றவற்றை டெலீட் செய்து விடலாம்.

நாளை, பவர் பாயின்ட் ஸ்லைட் ஒவ்வொன்றையும், எழுத்துகளோடு தனித்தனி படங்களாக மாற்றுவது எப்படி என்று சொல்கிறேன்.


பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள்.


அன்புடன்,

பா.வேல்முருகன்.




2 comments:

Btc Guider said...

சூப்பர் தகவல்

பா.வேல்முருகன் said...

பின்னூட்டமிட்டதற்கு நன்றி திரு ரகுமான் அவர்களே.

Post a Comment

Blog Widget by LinkWithin