அண்மைய பதிவுகள்

அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - பாடம் - 4.


SQL*Plus என்றால் என்ன ?

நாம தகவல் தளம்னா என்னன்னு பார்த்தோம். டேபிள்னா என்னன்னு பார்த்தோம். அந்த டேபிள் - , வரக்கூடிய பத்தி தலைப்புகள், அதை வரையறுக்கறதுக்கு தரவு வகைகள் எல்லாம் பார்த்தோம்.

இப்போ, மேலே சொன்ன எல்லாமே, சர்வர் - ன்னு சொல்லக்கூடிய தனிக் கணினியில இருக்கும்.
(நம்முடைய பயன்பாட்டுக்கு மட்டும்னா, நம்ம கணினியில இருக்கும்).

இந்த தகவல் தளத்த, நாம அணுகனும்னா, நமக்கு ஒரு கருவி (tool) வேணும் இல்லையா. அதை டேட்டாபேஸ் க்ளைண்ட் (Database Client tool) அப்டீன்னு சொல்லுவாங்க. நிறைய க்ளைண்ட் டூல்ஸ் இருக்கு. அதுல SQL*Plus ஒரு க்ளைண்ட். இந்த க்ளைண்ட் மூலமா நாம டேட்டாபேசை அணுகி, டேபிள உருவாக்க முடியும்.

நம்ம கணினியில. SQL plus database client எஸ்க்யுஎல் ப்ளஸ் டேட்டாபேஸ் க்ளைண்ட் நிறுவுனதுக்கு அப்புறம், இந்த மாதிரி ஒரு ஐகான் இருக்கும்.



இதை டபுள் க்ளிக் பண்ணீங்கன்னா, Username, Pasword, Host String கேட்கும்.



இதுல, உங்க தரவு தளத்தை அணுகறதுக்கு யூசர் நேம், பாஸ்வேர்ட், ஹோஸ்ட் ஸ்ட்ரிங் எல்லாம் கொடுத்துக்கங்க. அப்புறம், OK கொடுத்தா டேட்டாபேஸ் கூட கனெக்ட் ஆயிடும்.

இப்போ இதுல, நாம கொடுக்கும் கட்டளைகள் எல்லாம், டேட்டாபேஸ் - execute எக்சிக்யூட் ஆகி, ரிசல்ட் இதுலயே கிடைக்கும்.

சுருக்கமா சொல்லனும்னா, இத ஒரு இன்டர்பெஸ் - ன்னு சொல்லலாம்.

(SQL*Plus, the primary interface to the Oracle Database server, provides a powerful yet easy-to-use environment for querying, defining, and controlling data).

இப்போ கனெக்ட் பண்ணியாச்சு.

இதன் மூலமா டேட்டாபேஸ் - ல டேபிள் கிரியேட் பண்ணலாமா ?

முதல்ல சொன்ன மாதிரி, டேபிள் - க்கு ஒரு பெயர் வேணும்.

நாம ஒரு ஸ்கூல் - ல இருக்கும், ஸ்டூடண்ட்ஸ் தகவல்களை சேமிக்கற மாதிரி ஒரு மாஸ்டர் டேபிள் கிரியேட் பண்ணுவோம்.
டேபிள் பெயர் : STUD_MAST

தேவையான நிரல்கள் :

STUD_REG_NO (பதிவு எண்),
STUD_NAME (மாணவரின் பெயர்)
STUD_GEND (மாணவரின் பாலினம்)
STUD_JOIN_DATE (சேர்க்கை தேதி)
STUD_JOIN_CLAS (சேர்ந்த வகுப்பு)

இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படலாம். நாம எடுத்துக்காட்டுக்கு இது மட்டும் எடுத்துக்கலாம்.

ஒரு டேபிள் கிரியேட் பண்ண, "Create table" கட்டளை கொடுக்கணும்.

அந்த Create table கட்டளையோட syntax :

CREATE [GLOBAL TEMPORARY] TABLE [schema.]table (
column datatype [DEFAULT expr] [column_constraint(s)[,…]] [,column datatype [,…]] )
[table_constraint [,…]]
[table_ref_constraint [,…]]
[ON COMMIT {DELETE|PRESERVE} ROWS]
storage_options [COMPRESS int|NOCOMPRESS]
[LOB_storage_clause][varray_clause][nested_storage_clause] [XML_type_clause]
Partitioning_clause
[[NO]CACHE] [[NO]ROWDEPENDENCIES] [[NO]MONITORING] [PARALLEL parallel_clause]
[ENABLE enable_clause | DISABLE disable_clause]
{ENABLE|DISABLE} ROW MOVEMENT
[AS subquery]

இந்த Syntax பார்த்தா, ரொம்ப குழப்பமா இருக்கும். ஒரு சாதாரண டேபிள் உருவாக்க இதுல இருக்கும் எல்லா ஆப்ஷனுமே தேவையில்ல. நாம தேவையானது மட்டும் எடுத்துக்கலாம்.

அது என்னென்ன, அதை வச்சு, Student டீடயில் டேபிள் உருவக்கறது எப்படின்னு, அடுத்த பாடத்துல பாக்கலாம்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin