அண்மைய பதிவுகள்

அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - பாடம் - 2


டேபிள் என்றால் என்ன ?
-----------------------------------

பயனர்களின் தரவுகளை (User Data) திரட்டி, ஒரு நேர்த்தியான நிரல் - நிரை வடிவில் தகவல் தளத்தில் சேமித்து வைக்க பயன்படுவது டேபிள் என்று அழைக்கப்படுகிறது.

தினசரி பேப்பர் நாம வெப்ப நிலை தகவல்களை பாத்திருப்போம்.

01.09.2009 அன்று மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் , குறைந்த அளவு 31 டிகிரி செல்சியஸ்.

01.09.2009 அன்று கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்,குறைந்த அளவு 27 டிகிரி செல்சியஸ்.

01.09.2009 அன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்த அளவு 28 டிகிரி செல்சியஸ்.

01.09.2009 அன்று ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்த அளவு 30 டிகிரி செல்சியஸ்.

01.09.2009 அன்று சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்த அளவு 30 டிகிரி செல்சியஸ்.

01.09.2009 அன்று தேனியில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்த அளவு 31 டிகிரி செல்சியஸ்.

இதையெல்லாம் நாம ஒரு டேபிளா உருவாக்கலாம்.

இதுல தேதி (TEMP_DATE), இடம் (TEMP_PLACE), அதிகபட்ச வெப்பநிலை (MAX_TEMP), குறைந்தபட்ச வெப்பநிலை (MIN_TEMP) அப்டீங்கரதெல்லாம் நிரலாகவும் (நெட்டு வரிசை) (Column), கிடை வரிசையை, நிரையாகவும் (row) எடுத்துக்கலாம்.

இதை நாம இந்த மாதிரி எழுதலாம்.





இதுல நெட்டு வரிசையா இருக்கறதை, நிரல் (column) - ன்னு சொல்லுவோம்.



கிடை வரிசையா இருக்கறதை, நிரை (row) - ன்னு சொல்லுவோம்.




ஒவ்வொரு நிரலுக்கும், ஒவ்வொரு தலைப்பு வச்சிருக்கோம் இல்லையா, அதெல்லாம் பத்தி தலைப்புகள் அல்லது நிரல் தலைப்புகள் (fields) அப்டீன்னு சொல்லுவோம்.



ஒரு டேபிள உருவாக்கறதுக்கு முன்னாடி, அந்த டேபிளோட பெயர், பத்தி தலைப்புகள், ஒவ்வொரு பத்தி தலைப்புக்கும் என்னென்ன பண்புகள் அப்டீங்கறதை நிர்ணயம் பண்ணனும்.


தரவு வகைகள் (Datatypes) :
------------------------------------------

இப்போ, உங்க பேரை நம்பர்ல எழுத முடியுமா ? அதை எழுத்துக்களாலதான் எழுத முடியம்.

உங்க எடைய எண்கள் எழுதலாம்.

இப்டி ஒவ்வொரு தரவுக்கும் ஒரு பண்பு இருக்கு. அதையெல்லாம் என்னென்னனு தெரிஞ்ச பின்னாடி நாம டேபிள் எப்டி உருவாக்கறதுங்கறதை பாக்கலாம்.

அடுத்த பாடத்துல, SQL*Plus என்றால் என்ன ? தரவு வகைகள் என்னென்ன அப்டீங்கறதை பாக்கலாம்.







0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin