பாடம் - 5. அறிந்து கொள்வோம் ஆரக்கிள் (தகவல் உள்ளீடு செய்யும் கட்டளை)
Labels:
ஆரக்கிள்
நாம் உருவாக்கிய டேபிள் சரியாக உருவாகி உள்ளதா ? அதன் அமைப்பு என்ன என்பதனை அறிய,
DESC[RIBE] tablename
கட்டளை பயன்படுத்திக்காணலாம்.
இதில் RIBE எழுத்துக்களை, [] அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே,DESCRIBE என்றோ அல்லது, DESC என்றோ இந்த கட்டளையை பயன்படுத்தலாம்.
நாம் உருவாக்கிய டேபிளை டிஸ்க்ரைப் செய்து பார்ப்போம்.
DESC STUD_MAST
டேபிளில் தகவல்களை உள்ளீடு செய்ய :
சென்ற பாடத்தில், ஒரு டேபிள் உருவாக்கி விட்டோம். இப்போது, அந்த டேபிளில் தகவல்களை உள்ளீடு செய்ய, என்ன கட்டளை என்று பார்ப்போம்.
தகவல்களை நிரை நிரையாக (rowwise) மட்டுமே உள்ளீடு செய்யலாம். அதற்குரிய கட்டளை, INSERT INTO என்பதாகும்.
அந்த கட்டளை வடிவம் (Syntax) :
INSERT INTO [schema.] table (column1, column2,...)
What_to_insert
இதில், INSERT INTO என்பது அடிப்படை கட்டளையாகும்.
schema. என்பது அந்த டேபிள் எந்த ஸ்கீமாவை சேர்ந்தது என்பதை குறிக்கும்.
ஸ்கீமா பற்றி பின்னால் அறிவோம்.
table - என்பது நாம் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டிய டேபிளின் பெயர்.
(column, column,...) என்பது எந்தெந்த நிரல்களுக்கு நாம் தகவல் உள்ளீடு
செய்யப்போகிறோம் என்பதாகும்.
அதன் கீழே What_to_insert என்பதில், கீழே கொடுக்கப்பட்டுள்ள
எந்த முறையிலும் உள்ளீடு செய்யலாம்.
VALUES ([expr1, expr2...])
அல்லது,
(select expr1,expr2,.. from table) என்பது போல ஏதேனும் ஒரு வினவல் (SubQuery)
இதில், VALUES என்பது கட்டளை குறிச்சொல் (keyword).
([expr1, expr2...]) என்பதில் () அடைப்புக்குறிகள் அவசியமானது.
expr1, expr2... என்பது, column1, column2,... என்னும் நிரல்களுக்கு
நாம் கொடுக்கும் உள்ளீடு தகவல்கள்.
அல்லது,
SELECT என்னும் கட்டளை மூலம், இன்னொரு டேபிளி(களி)ல் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை, இந்த டேபிளில் உள்ளீடு செய்தல்.
(SELECT கட்டளை அடுத்தடுத்த பாடங்களில் விரிவாக காணலாம்.
SELECT கட்டளை அடிக்கடி பயன்படுத்தும் மிக முக்கியமானதாகும்.)
நம் எடுத்துக்காட்டில் உருவாகிய டேபிளில் இப்போது தகவல் உள்ளீடு செய்வோம்.INSERT INTO STUD_MAST (STUD_REG_NO,STUD_NAME,STUD_இப்படி எல்லா தகவல்களையும் உள்ளீடு செய்யலாம்.GEND,STUD_JOIN_DATE,STUD_JOIN_ CLAS)
VALUES (20090101,'SURYAKANNAN','M',to_date('07-MAY-2009','DD-MON- YYYY'),'VII');
INSERT INTO STUD_MAST (STUD_REG_NO)
VALUES (20090101);
INSERT INTO STUD_MAST (STUD_NAME,)
VALUES ('SAIDHASAN');
INSERT INTO STUD_MAST (STUD_JOIN_CLAS)
VALUES ('IX');
என்பது போல, குறிப்பிட்ட தகவல்களை மட்டும் கூட உள்ளீடு செய்து கொள்ள முடியும்.
இதில், பெயரை உள்ளீடு செய்யும் போது பெயரில், முன்னும் பின்னும் ' ' (Single quotes)
என்ற குறியீடு கொடுக்கப்பட வேண்டும். தேதி உள்ளீடு செய்யும்போது to_date()
என்னும் பங்ஷன் பயன்படுத்தி இருக்கிறோம்.
தற்போதைய ஆரக்கிள் பதிப்புகளில், இந்த பங்ஷன் இல்லாமலே உள்ளீடு செய்யலாம்.
நாம உள்ளீடு பண்ண தகவல்களை கவனிச்சா, உங்களுக்கு ஒரு சின்ன குழப்பம் வரலாம்.
பதிவு எண் இல்லாமல், மாணவனின் பெயர் மட்டும் உள்ளீடு பண்ணி என்ன பயன் ?
அது போல, பதிவு எண், மாணவன் பெயர் இல்லாமல், சேர்ந்த வகுப்பு மட்டும்
உள்ளீடு பண்ணி என்ன பயன் ?
இந்த பிரச்சனைகளைஎல்லாம் நீக்குறதுக்குதான், கன்ஸ்ட்ரைன்ட்ஸ் பயன்படுது.
அதை அடுத்து வரும் பாடங்கள்ல பாக்கலாம்.
சரி, தகவல்களை உள்ளீடு பண்ணியாச்சு.
பண்ணதுக்கு அப்புறம்தான் நாம தப்பா உள்ளீடு பண்ணிட்டோம்னு தெரியுது.
அதை மாத்தணும். என்ன செய்யலாம் ? கவலைப்படாதீங்க.
அதுக்கும் கட்டளை இருக்கு. அதை அடுத்த பாடத்துல பாக்கலாம்.
உங்கள் கருத்துக்களை கொஞ்சம் தெரிவிச்சா,
எனக்கு கொஞ்சம் ஊட்டம் அளிக்கறதா இருக்கும்.
வோட்டும், முடிஞ்சா, கொஞ்சம் பின்னூட்டமும் போட்டு போங்களேன்.
1 comments:
நன்றி இந்த பகுதியில் சிலவற்றை தெரிந்து கொண்டேன்..
தாங்கள் கூறியுள்ளபடியே o/p வருகிறது..
Post a Comment