அண்மைய பதிவுகள்

பாடம் - 5 (ii) - அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - (தகவல்களை மாற்ற உதவும் கட்டளை)

ஒரு டேபிள் உருவாக்கி அதில், தகவல்கள் உள்ளீடு பண்ற வரைக்கும் பார்த்தாச்சு.

இப்போ, ஏதோவொரு தகவல் உள்ளீடு பண்ணும்போது தவறா இருந்து மறுபடி அதை திருத்தனும்னா என்ன பண்றது ? இருக்கவே இருக்கு UPDATE (அப்டேட்) கட்டளை.
அதாவது, டேபிளில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கட்டளை பயன்படுது.

அதுக்கு முன்னாடி SELECT கட்டளையை எப்படி பயன்படுத்துறதுன்னு பாக்கலாம்.

SELECT கட்டளை, ஒரு டேபிளில் என்னென்ன தகவல்கள் இருக்குங்கறதை நேமக்கு காட்டக்கூடிய கட்டளை. அதன் கட்டளை வடிவம்.

SELECT [*] [DISTINCT] select_list
FROM table_list
[WHERE conditions]
[GROUP BY group_by_list]
[HAVING search_conditions]
[ORDER BY order_list [ASC | DESC] ]
[FOR UPDATE for_update_options]
இதில் SELECT, FROM, WHERE, GROUP BY, HAVING, ORDER BY, FOR UPDATE - அப்டீங்கரதெல்லாம், கட்டளை குறிச்சொற்கள்.
select_list (Column1,column2, column3,......) - என்னென்ன நிரல்களில் உள்ள தகவல்கள் தேவை என்பதை நிர்ணயிக்க. "," கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிரல்களை வினவலாம். வெறும் "*" என கொடுத்தால்,
எல்லா நிரல்களும் காட்டப்படும்.

table_list - என்பதில் எந்தெந்த டேபிள்களில் இருந்து தகவல்கள் தேவை என்பதை அளிக்க.

WHERE - என்பதில் எந்த நிபந்தனைகளின் கீழான தகவல்கள் பட்டியலிடப்பட வேண்டும் என்பதனை குறிக்க.

order_list (ASC | DESC] - வினவல் முடிவுகள் எந்த நிரல் அல்லது நிரல்களின் வரிசையில் ஏறு அல்லது
இறங்கு வரிசையில் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை அளிக்க.

GROUP BY மற்றும், HAVING எல்லாம், தொகுப்பு வினவல் (Grouping query) செய்கையில் பயன்படுத்தப்படும். (அடுத்தடுத்த பாடங்களில்.)

உ.ம்.

எல்லா தகவல்களையும் பார்க்க,




குறிப்பிட்ட நிரல்களை மட்டும் பார்க்க,



நிபந்தனைகளின்படி நிரல்களை காண,
(9 - ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் காண)



நிரல் தகவல்களின் வரிசைப்படி காண,
(மாணவர்களின் பெயர்களின்படி ஏறு வரிசையில் காண)



இப்போ UPDATE கட்டளையை, எப்படி பயன்படுத்தறதுன்னு பாக்கலாம்.

UPDATE கட்டளையோட வடிவம்.
UPDATE [schema.]table [alias]
SET col_expr(s)
[WHERE condition]

இதில், UPDATE, SET, WHERE - ங்கறது எல்லாமே அடிப்படை கட்டளை குறிச்சொல்கள் .
table - டேபிளின் பெயர்.
col_expr(s) - கட்டளையோட இந்த பாகத்துல, என்னென்ன நிரல்களில் உள்ள தகவல்களை,
என்னவாக மாத்தணும்ங்கற தெரிவிப்பு. அந்த இடத்துல என்னவெல்லாம் கொடுக்கலாம் - னு
கீழே சொல்லப்பட்டிருக்கு.
col_expr:
column = expression
column = (subquery)
column = DEFAULT
(column, column,...) = (subquery)
VALUE (table_alias) = expression
VALUE (table_alias) = (subquery)

நம் எடுத்துக்காட்டு.

அனைத்து மாணவர்களின் பெயர்களையும் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) மாற்ற..,



சேர்க்கை எண் 20090101 கொண்ட மாணவனின் வகுப்பு மற்றும் சேர்ந்த தேதி மாற்ற..



இந்த தொடர் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.






0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin