அண்மைய பதிவுகள்

அறிந்து கொள்வோம் ஆரக்கிள் - பாடம் 4(ii)

Aஇப்போ அடிப்படையா, ஓர் டேபிள் உருவாக்க தேவையான கட்டளை என்னன்னு பாக்கலாம்.

CREATE TABLE table (
column datatype [DEFAULT expr]
[column_constraint(s)[,…]] [
,column datatype [,…]] )

இதை மட்டும் எடுத்துக்குவோம்.

இதுல, பெரிய எழுத்துக்கள் - ல இருக்கறதெல்லாம் கட்டளையோட அடிப்படை. [ ] அடைப்புக்குள்ள இருக்கறதெல்லாம் ஆப்ஷனல். நமக்கு தேவைன்னா பயன்படுத்திக்கலாம். இல்லேன்னா விட்ரலாம். அதை தவிர, வெளில சின்ன எழுத்துக்கள் - ல இருக்கறதெல்லாம், நாம நிரப்ப வேண்டிய அதாவது நாம நிர்ணயிக்க வேண்டிய இடங்கள்.
CREATE TABLE table (
column datatype [DEFAULT expr]
[column_constraint(s)[,…]] [
,column datatype [,…]] )
CREATE TABLE - ங்கறது, அடிப்படை கட்டளை (Keyword).
table வந்து நம்ம டேபிளோட பெயர்.
அடுத்து "(" அடைப்புக்குறி கண்டிப்பா போடணும்.
column -ங்கற இடத்துல நம்ம நிரல் தலைப்போட பெயர்.
datatype - ல அந்த நிரல் என்ன வகையான தரவுங்கரதுக்கு நிர்ணயம்.(உ.ம். NUMBER, DATE, CHAR...)
அடுத்து [] அடைப்புல இருக்கும் [DEFAULT expr] - ங்கறதுல DEFAULT - ங்கறது கீ வார்த்தை.
expr அந்த நிரல்-ல பயனர் தகவல் கொடுக்கலேன்னா என்ன தகவலை அதுவா எடுத்துக்கணும் - ங்கறதுக்கு கொடுக்கப்படும் மதிப்பு.
[column_constraint(s)[,…]] - நிரல் பண்பு. இதை பத்தி கன்ஸ்ட்ரைன்ஸ்
படிக்கும்போது சொல்றேன்.

இதுல ஒன்னுக்கும் மேல கொடுக்கலாம்.
அதனாலதான் [] அடைப்புக்குள்ள, ","
இருக்கு.

[,column datatype [,…]] - ஒன்றுக்கும் மேல நிரல்கள் கொடுக்கலாம்.
கடைசியா ")" கண்டிப்பா கொடுக்கணும்.

இதை நம்ம எடுத்துக்காட்டுல பயன்படுத்தலாம்.

CREATE TABLE STUD_MAST (STUD_REG_NO NUMBER(8),
STUD_NAME VARCHAR2(30),
STUD_GEND CHAR(1),
STUD_JOIN_DATE DATE,
STUD_JOIN_CLAS VARCHAR2(3))

இப்படி கொடுக்கலாம். இதை SQL*Plus - ல நம்ம பயனர் கணக்குல நுழைஞ்சு,டைப் பண்ணா, நம்மோட டீபால்ட் டேபிள்ஸ்பேஸ் - ல
டேபிள் உருவாயிடும். டேபிள்ஸ்பேஸ் பத்தி பின்னால தெரிஞ்சுக்கலாம்.

இப்போ STUD_MAST டேபிள் உருவாக்கியாச்சு. இதுல தகவல்களை உளீடு பண்ணனுமே. அதுக்கு என்ன கட்டளை ? அடுத்த பகுதில பாக்கலாம்.






3 comments:

யூர்கன் க்ருகியர் said...

Thx.. Looking for next.

guru said...

நண்பரே மிகவும் நன்றி..
உங்களது இந்த எளிய தமிழில், சொல்லி தரும் பாடம் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது...
நீங்கள் எடுத்துக்காட்டில் சொல்லியபடியே டேபிளை கிரியேட் செய்து பார்த்தேன்..ஆனால் எனக்கு டேபிள் கிரியேட்டாகவில்லையே என்ன செய்வது..

SQL> CREATE TABLE STUD_MAST (STUD_REG_NO NUMBER(8),
2 STUD_NAME VARCHAR2(30),
3 STUD_GEND CHAR(1),
4 STUD_JOIN_DATE DATE,
5 STUD_JOIN_CLASS VARCHAR2(3))
6
SQL> DESC STUD_MAST
ERROR:
ORA-04043: object STUD_MAST does not exist

guru said...

தவறை கண்டு கொண்டேன்..
இறுதியில் ; வைக்கவில்லை..

Post a Comment

Blog Widget by LinkWithin