அண்மைய பதிவுகள்

பெயரில்லாத போல்டர், Control + C, Control + V இல்லாமலே காப்பி, பேஸ்ட்

I. பெயரில்லாத போல்டர் அல்லது பைல் உருவாக்குவது எப்படி ?


பெயரே இல்லாமல் ஒரு போல்டரோ அல்லது பைலோ உருவாக்க முடியுமா ?
முயற்சி செய்வோம். நாம டெஸ்க்டாப் - உருவாக்கி பார்ப்போம்.

1. டெஸ்க்டாப்ல வெற்றிடத்துல ரைட் க்ளிக் பண்ணி, புதிய ---> போல்டர் தேர்வு செய்யுங்கள்.
New ----> folder.



இப்போ கீழே உள்ளது போல New folder கிடைக்கும்.



அப்படியே.. Alt கீ யை அழுத்தி பிடிச்சிட்டு, 0160 நம்பரை டைப் பண்ணுங்க. இப்போ Alt கீயை விட்டுட்டு, ஒரு என்டர் தட்டுங்க. பெயரே இல்லாமல் ஒரு போல்டர் கிடைச்சிடுச்சு.



இதே போல பெயரே இல்லாமல் ஒரு பைல் கூட க்ரியேட் பண்ணலாம்.


II. Control + C, Control + V இல்லாமலே காப்பி, பேஸ்ட் செய்யலாம் வாங்க.


நாம சில தகவல்களை, நாம CD - யிலிருந்தோ, அல்லது பென் டிரைவில் இருந்தோ நம்ம ஹார்ட் டிஸ்க்குக்கு மாத்தும் போது முதல்ல, காப்பி செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் செலெக்ட் செய்வோம். அப்புறம் காப்பி, பேஸ்ட் கொடுப்போம்.

எப்பவுமே நாம ஒரே போல்டர் - தான் காப்பி பன்னுவோம்னா, அந்த போல்டருக்கு ஒரு ஷார்ட் கட் போட்டு ரைட் க்ளிக் மெனு ஷார்ட் கட்டா வச்சுக்கலாம்.

அதுக்கு என்ன பண்ணனும்னா,

C:\Documents and Setting\/Send to போல்டருக்கு போங்க.அங்க ரைட் க்ளிக் பண்ணி, நாம எப்பவும் எந்த போல்டர் ல பேஸ்ட் பண்ணுவோமோ அந்த போல்டருக்கு ஒரு ஷார்ட் கட் போட்டுக்கங்க.




நான் எப்பவுமே D:\CD downloads போல்டர்லதான் பேஸ்ட் பண்ணிக்குவேன். அதையே உங்களுக்கு எடுத்துக்காட்டா சொல்றேன்.






இப்போ நீங்க எந்த பைலையும் (அல்லது பைல்களையும்) ரைட் க்ளிக் பண்ணி நேரடியா இந்த போல்டருக்குள்ள அனுப்பிக்கலாம்.









4 comments:

SUMAN said...

அருமையான தகவல் நண்பா

சூர்யா ௧ண்ணன் said...

http://suryakannan.blogspot.com/2009/03/invisble-folder.html

பா.வேல்முருகன் said...

மன்னிக்கவும் சூர்யா. உங்கள் பதிவை நான் பார்க்கவில்லை. பகிர்ந்ததற்கு நன்றி.

பா.வேல்முருகன் said...

பின்னூட்டம் இட்டதற்கு நன்றி சுமன்.

Post a Comment

Blog Widget by LinkWithin