ஒரு துளி ரத்தத்தில் எல்லா மருத்துவ சோதனைகளும். (All medical tests in a blood drop)
Labels:
ஆக்கங்கள்
ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானியான, ஜார்ஜ் ஒயிட்சைட் விரல் நுனி அளவே உள்ள ஒரு காகித சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். படக்கதை புத்தகங்களில் வரும் சிறிய வடிவிலான சிப் - பின் வடிவமைப்பால் உந்தப்பட்டு, இதனைக் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு துளி ரத்தத்தை இதன் கீழ்புறத்தில் வைத்தால்,, அது மெதுவாகப்பரவி, மரம் போன்ற வடிவத்தில் சென்று நிறம் மாறுகிறது. இந்த நிற மாற்றங்களைக்கொண்டு, எயிட்ஸ், மலேரியா, காசநோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி நோயின் தீவிரம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிறம் மாறுதல் குறித்தே நோயைக்கண்டு கொள்ளலாம் என்பதால்,
மருத்துவர் இல்லை என்றாலும், இதில், ரத்தத்தை விட்டு, அது தரும் வண்ணங்களை, கைபேசியில் படமெடுத்து, கைபேசியே சோதனை முடிவுகளை கண்டுபிடித்து சொல்லக்கூடிய மென்பொருள் கண்டுபிடிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக ஒயிட்சைட் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த காகித சிப், எல்லோரும் பயன்படுத்தும் வகையில், விலை குறைவாக இருப்பதாலும், பயன்படுத்த எளிதாக இருப்பதாலும், இது இந்தியாவுக்கு வேகமாக பயன்பாட்டுக்கு வந்தால், ஏழை மக்களுக்கு மருத்துவ செலவு பெருமளவில் குறையும்.
ஆதாரம் : CNN
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,
பா.வேல்முருகன்.
1 comments:
உண்மைதான். உபயோகமாக இருக்கும்.
Post a Comment