அண்மைய பதிவுகள்

அழுக்கு நீக்கும் ரின்னுக்கும் - டைடுக்கும் இடையே அழுக்கான சண்டை.






இந்த வாரம் முழுவதும், இந்த விளம்பரத்தை பல சேனல்களில் பார்த்திருப்பீர்கள்.
"ஏன் இப்படி ?", "இப்டியெல்லாம் பண்ணலாமா ?" என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும்.





ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன தயாரிப்பான ரின்னும், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவன தயாரிப்பான டைடும் முட்டிக்கொண்டுள்ளன. கோக்கும், பெப்சியும் சண்டை போட்டது போல, கொஞ்ச நாட்களுக்கு முன் ஹார்லிக்சும் காம்ப்ளானும் சண்டை போட்டது போல இதுவும் ஒரு பிராண்ட் சண்டைதான்.






ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஒரு அமெரிக்க நிறுவனம். டைட் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், தனது தயாரிப்புகளான ரின், சர்ப், வில் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது HUL தான். பிறகு டைடின் வருகைக்குப்பின், அதன் அதிகமான விளம்பரங்களால் HUL பாதிப்படைந்தது.

இதனைத்தொடர்ந்து HUL நிறுவனம், ஜனவரி மாதம், தனது ரின் மற்றும், சர்ப் விலையில் 10% முதல் 30% வரை குறைத்தது. அதையும் விடவில்லை டைட். Tide Naturals என்ற பெயரில், "வெண்மை மற்றும் நறுமணம்" என்ற வாசகம் தாங்கி புதிய பிராண்ட் ஒன்றை வெளியிட்டது. விலை அதிகமான டைட் முதன்மை பிராண்ட் பெயரில் விற்பனை ஆகி வருகிறது. ஆனால், முதன்மை பிராண்ட் தான் தனது விலையை குறைத்துள்ளது என்று வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பிராண்ட் வேறு இந்த பிராண்ட் வேறு.

இதை HUL நிறுவனத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை இந்த விளம்பரச்ச்சண்டை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், HUL நிறுவனம்,
Tide Naturals promises great cleaning while keeping your hands soft, because it has the goodness and freshness like that of lemon and sandalwood என்ற டைட் விளம்பர வாசகத்துக்கு எதிராக சென்னைநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

சந்தனம் மற்றும் எலுமிச்சையின் வாசம் நிறைந்தது என்பதனை டைடால் நிரூபிக்க முடியாததால்,
நீதி மன்றம், 72 மணி நேரத்துக்குள் “does not contain lemon and ‘chandan’” என்ற வாசகத்துடன் டைட் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

இதனைத்தொடர்ந்து, சந்தோஷமடைந்த HUL, நிறுவனம், இந்த விளம்பரச்சண்டையைத் தொடங்கியுள்ளது. அந்த விளம்பரத்தின் கீழே, Schematic representation of superior whiteness is based on Whiteness Index test of Rin Vs Tide Naturals as tested by Independent labஎன்ற சிறிய எழுத்துகளை சேர்த்து, THE ADVERTISING STANDARDS COUNCIL OF INDIA (ASCI) யின் விதிமுறைகளை மீறவில்லை என்றும் சொல்லிக்கொள்கிறது.

P&G இபோது என்ன செய்யப்போகிறது ? என்பதே இப்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி.



6 comments:

ஸ்ரீராம். said...

மக்கள் இந்தச் சண்டையை எல்லாம் தீவிரமாகத் தொடர்கிறார்களா என்ன?

Chitra said...

அவங்க சண்டையில், ஒருவரின் சாயத்தை மற்றவர் வெளுத்து கொண்டே இருக்கட்டும். போட்டியில், நமக்கு குறைந்த விலையில் துணி வெளுத்தா போதும். அம்புட்டுதான்!

பா.வேல்முருகன் said...

தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம். மக்கள்னு பொதுவா சொல்லிட்டேனோ.

டி.வி. ல ப்ரோக்ராமை தவிர விளம்பரத்தை இன்ட்ரஸ்ட்டா பாக்குற எல்லாரும், ஆர்வமா இருக்காங்க.

rajsteadfast said...

நம்முடைய பணத்தை யார் அதிகமாக சுரண்டுவது என்று போட்டி போடுகிறார்கள். ஓரு நாளைக்கு 50 தடவைக்கு மேல் விளம்பரம் கொடுத்து, அதற்கும் நம்மிடமே பணம் பிடுங்குகிறார்கள், அயல்நாட்டு வியாபாரிகள். நம்ம காதி கடைகளிலும், சிறு தொழில் புரிபவர்களும் இவர்களின் பொருட்களை விட தரமானதாகவும், விலை மலிவாகவும் தருகிறார்கள். சிந்திப்போம் நண்பர்களே..

சசிகுமார் said...

அந்த சந்தேகம் எனக்கும் ஏற்ப்பட்டது நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Butter_cutter said...

சரி இப்போ எதை வாங்கறது ?

Post a Comment

Blog Widget by LinkWithin