அண்மைய பதிவுகள்

வலையுலகில் கூகிள் ஆட்சி இன்னும் எவ்வளவு நாள் ?



ஒவ்வொரு மென்பொருளையும், தனித்தனியாய் வாங்கி, அல்லது தரவிரக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரும் என்பதாக நம்பப்படும் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்னும் தொழில்நுட்பத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரும் மிகப்பெரிய திட்டத்தில் இறங்கிருக்கும் கூகுல், தனது அடுத்தடுத்த பிற நிறுவனக்கையகப்படுத்தல் மூலம் க்ளவுட் கம்ப்யூட்டிங் நுட்பத்தில், தனது காலை ஒவ்வொரு அடியிலும் அழுத்தமாகப்பதித்து வருகிறது.



கிட்டத்தட்ட
1950, 60 களில், டீ, காபி என்பதை அதிகமாக பயன்படுத்தாமல் இருந்த நமது முந்தைய தலைமுறைக்கு, ஒரு வாரம், ஒரு மாதம் என இலவசமாய் அவற்றைக்கொடுத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அவை இல்லாமல் இருக்க இயலாது என்னும் நிலைக்கு மக்களைக் கொண்டு வந்தது போல பல்வேறு சேவைகளை இலவசமாய் பல நிறுவனங்கள் தற்போது அளித்து வந்தாலும், இந்த இலவச சேவை வாழ்நாள் முழுதும் தொடருமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.









நாம் வழக்கமாகப் பயன்படுத்தும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்புகளுக்கு மாற்றாக, இணையத்திலேயே கோப்புகளை கையாளும் Google Docs - ம் க்ளவுட் கம்ப்யூட்டிங்கில் ஒரு பகுதிதான். ஆனால், இப்போதைக்கு அதனை யாரும் அதிகமாக பயன்படுத்தவில்லை என்றாலும், எல்லாமே இணையம் என்றாகி வரும் கால கட்டத்தில், அது அசைக்க முடியாத இடத்தைப்பிடித்து விடும். ஜிமெயில் வருவதற்கு முன்பெல்லாம், நாம் ஒரு எக்செல் பைலையோ, ஒரு வேர்ட் பைலையோ, மெயில் அனுப்பும்போது அவை பெறுபவரது கணினியில் சேமிக்கப்பட்ட பிறகே அவற்றைத் திறந்து பார்க்க இயலும். ஆனால் ஜிமெயில் வந்த பிறகு அந்த பைலை அப்படியே Google Docs மூலம் ஓபன் செய்யலாம்.








நாம் பல வருடங்களாக பயன்படுத்தி வரும், photoshop, Gimp போன்றவற்றைப்போல, ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்யும் வசதி கொண்ட picnik - மற்றும் Excel, Word, Powerpoint போன்றவற்றை ஆன்லைனிலேயே பலரும் கையாளும் DocVerse போன்றவற்றைக் கையகபபடுத்தியதிலிருந்து, கூகிள் தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருப்பது தெள்ளத்தெளிவாய் தெரிகிறது.



மேலும் than, Thirdparty vendors என அழைக்கப்படும்பிற நிறுவனங்களும் கூகுளுடன் சேர்ந்து கைகோர்த்து ஆன்லைனில் சேவை தருவது கூகுளுக்கு கூடுதல் பலம்.





இன்னும்
அதிகபட்சம் 20 வருடத்துக்குள், ஏராளமான வசதிகளை க்ளவுட் கம்ப்யூட்டிங்கின் கீழ் கூகிள் கொண்டு வந்து விடும்.
பொறுத்திருந்து பார்ப்போம். வலையுலகை இன்னும் எப்படியெல்லாம் கூகிள் ஆள்கிறதென்று.





0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin