அண்மைய பதிவுகள்

நிரம்பி வழியும் இன்பாக்சும், ஜிமெயில் செர்ச் (Search) ஆப்ஷன்களும்.

நீண்ட நாட்கள் கழித்து, பல்வேறு கூகிள் குரூப்களில் சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருந்த எனது இன்னொரு ஜிமெயில் அக்கவுன்ட்டை நேற்று ஓபன் செய்து பார்த்தபோது, மெயில்கள் எக்கச்சக்கமாய் நிரம்பி வழிந்தது. தேவையற்ற அட்டாச்மென்ட்ஸ்சுடன் நிறைய மெயில்கள் இருந்தன.




இவற்றை அழிக்க என்ன செய்யலாம் என யோசித்த போது, மேலே இருந்த Serach Mail ஆப்ஷன் ஏன் கண்ணில் பட அதில் ஏதாவது உபயோகமான வழி இருக்குமா என தேடினேன். ஆச்சரியமூட்டும் வகையில் நான் நினைத்ததற்கே வழி இருந்தது. (இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். யாஹூவில் இது போன்ற தொல்லை இல்லை. மெயிலின் அளவின்படி (Size) அதனை வரிசைப்படுத்திக்கொள்ளலாம் (Sort). பெரிய அட்டாச்மென்ட் அளவுள்ள மெயில்களை முதன்முதலில் வரும்படி செய்து அவற்றை தேர்ந்தெடுத்து அழிக்கலாம்)

சரி விஷயத்துக்கு வருவோம்.
Search box - இல் has என டைப் செய்ய has:attachment என வந்தது.




அட
நாம் நினைத்தபடி கிடைத்து விட்டதே என நினைக்க, அதன் கீழேயே இன்னொரு ஆப்ஷனும் இருந்தது.





has photos
has videos
has documents
has calendar event

எனக்காட்டியது ஜிமெயில். சரி. has videos செலக்ட் செய்யலாம் என செலக்ட் செய்தபோதே, அதற்குள்ளும், (avi OR mov OR mpg OR mpeg OR mp4) OR youtube.com/watch எனக்காட்டியது.

has:attachment(*.wmv) எனக்கொடுக்க wmv வீடியோக்கள் இணைந்த மெயில்கள் மட்டும் தெரிந்தன. சுலபமாக அழித்து விட்டேன்.




இன்னொரு ஆப்ஷனும் இருக்கிறது.
நான் மெயில் செக் செய்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததால், மூன்று மாதங்களுக்கு முந்தைய மெயில்களை எல்லாம் அழித்து விட,

before:2009/12/25 எனக்கொடுத்து தேட, 25.12.2009 க்கு முந்தைய மெயில்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டது. எனது அழித்தல் வேலை சுலபமாய் முடிந்தது.











நீங்களும் உங்கள் மெயில்களை தேடிப்பாருங்களேன்.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.






4 comments:

சசிகுமார் said...

நல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பா.வேல்முருகன் said...

வாக்களித்த, வாக்களிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீராம். said...

மிகச் சமீபத்தில் என்ன செய்வது என்று யோசித்த பிரச்னை. எங்கள் நன்றிகள்...!

பா.வேல்முருகன் said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் வருகையும், கருத்தும், இந்த பதிவின் சிறப்பு.

Post a Comment

Blog Widget by LinkWithin