தேவையற்ற அழைப்புகளை நிறுத்த - The National Do Not Call Registry
Labels:
அனுபவங்கள்
The National Do Not Call Registry என்பது, பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் இது பற்றி அறியாத என்னைப்போன்ற வாசகர்களுக்காக இந்தப்பதிவு.
நேற்று காலை, நகரின் பரபரப்பான சிக்னலில், நெருக்கடியான சாலையில் எனது இருசக்கர வாகனத்தில் இன்ச், இன்ச்சாக நகர்ந்து கொண்டிருந்த போது, எனது சட்டை பாக்கெட்டில் அதிர்வு அமைப்பில் (Vibration on call) அமைத்திருந்த எனது கைபேசி, உறுமியது. பின்னாலும், முன்னாலும் வாகனங்களின் ஒலி, இரைச்சலுக்கு மத்தியில், அவசர அவசரமாக வண்டியை ஓரம்கட்டி அழைப்பை ஏற்ற போது, அது எனக்கு கைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் அழைப்பு. அழைப்பவரை பாடல் மூலம் சந்தோஷப்படுத்துங்கள். மாதக்கட்டணம் 30 ரூபாய் எனக் கூவியது. எனக்கு வந்த ஆத்திரத்தில், கைபேசியை உடைத்து விடலாமா என்று கூடத்தோன்றியது.
உங்களுக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கும்.
எரிச்சலுடன் அலுவலகம் சென்று சேர்ந்தேன். ஆச்சரியத்தக்க வகையில், எனது நண்பரும் காலையில், இதே தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இதைப்பற்றி அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், நான் அந்த நிறுவனத்தை திட்டப்போகிறேன் என்று சொல்லி, கோபத்துடன் அந்த நிறுவன வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து திட்டு திட்டென்று திட்டி தீர்த்தார்.
எல்லா திட்டையும் கனிவுடன் ஏற்றுக்கொண்ட அந்த சேவை மைய பெண், இறுதியில்
"சார். உங்க மொபைல்ல இருந்து START DND என டைப் பண்ணி, 1909 - ங்கற நம்பருக்கு SMS பண்ணுங்க. "
என்றார்.
The National Do Not Call Registry என்பது TRAI(Telecom Regulatory Authority of INDIA) - ஆல் நிர்வகிக்கப்படும், ஒரு (database) தகவல் தளமாகும். இதன் முக்கிய நோக்கம் என்னவெனில், UCC Unsolicited Commercial Communication எனப்படும் தேவையற்ற செய்திகள் மற்றும் அழைப்புகளில் இருந்து பயனர்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
UCC என்பது பற்றி, NDNC website சொல்வது என்னவெனில், "முதலீடு பற்றியோ, பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றியோ, வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும், வியாபார நோக்கிலான செய்திகள், மற்றும் அழைப்புகள் UCC எனப்படுகின்றன".
உங்கள் கைபேசி எண், NDNC பதிவேட்டில் இருக்கிறதா என சோதிக்க எங்கு க்ளிக் செய்யுங்கள்.
ஆனால், உங்கள் எண் NDNC - இல் பதிவு செய்ய நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பிய பின், 45 நாட்கள் கூட ஆகலாம்.
ஏர்செல், ஏர்டெல், டாடா டொகோமோ, வோடபோன் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான குறுஞ்செய்திதான். ரிலையன்சுக்கு மாறும் என நினைக்கிறேன். சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
ஏர்செல், ஏர்டெல், டாடா டொகோமோ, வோடபோன் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான குறுஞ்செய்திதான். ரிலையன்சுக்கு மாறும் என நினைக்கிறேன். சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
நான் பதிவு பண்ணிட்டேன். நீங்க ?
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்..,
பா.வேல்முருகன்.
5 comments:
புதிய தகவல். நன்றி
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். மிக்க நன்றி நண்பரே.
தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
மிக்க நன்றி மொஹம்மத் பிஸ்மில்லா அவர்களே.
Super Boss.. It is use for unwanted call... Just now I was send sms...
Thanks for publish this type information,,
Regars,
Pune Raja
thank you FOR YOUR KIND SERVICE
Post a Comment