அண்மைய பதிவுகள்

பூமியை ஆராய ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய முயற்சி.

பூமியை ஆராய ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய முயற்சி.


பூமியில் பல இடங்களில் பொருத்தப்படும் நுண்ணிய உணர்விகள் (Sensors) மூலம் தகவல்கள் பெறப்பட்டு, பின் அவை தொகுக்கப்பட்டு பூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது ஹெச்.பி. இதற்காக அடுத்த பத்து ஆண்டுகளில், பல் லட்சக்கணக்கான இடங்களில் இந்த உணர்விகள் பொருத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு CeNSE (Central Nervous System for the Earth) எனப்பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது கைபேசிகள், மற்றும் பிற கம்பியில்லா தொடர்பு முறை சாதனங்களில் பயன்படுத்தப்படும் உணர்விகளைக்காட்டிலும், ஆயிரம் மடங்கு உணர்வு மிகுந்ததாக இந்த உணர்விகள் இருக்கும். இதன் மூலம் பூமியல் ஏற்படும் நுண்ணிய சத்தங்கள் கூட உடனுக்குடனே மையக் கணினிக்கு (Server) அனுப்பப்பட்டு பகுத்தறியப்படுகிறது.


முதன் முதலில் எண்ணெய் நிறுவனமான "ஷெல்" (Shell) லுக்கு துணை புரிய பயன்படுத்தப்படும் இந்த உணர்விகள் பின்னர் படிப்படியாக மற்ற ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படப்போவதாக தெரிகிறது. ஷெல் நிறுவனத்துக்கு, உலகின் எந்த இடத்தில் எண்ணெய் வளம் உள்ளது எனக் கண்டறிய பயன்படும் என தெரிகிறது.

எப்படியோ, வியாபார நோக்கத்துக்காக  இந்த உணர்விகள் பயன்படுத்தப்பட்டாலும், நிலா நடுக்கமோ அல்லது மற்ற இயற்கை சீரழிவுகளோ ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை செய்ய, இந்த உணர்விகள் பயன்பட்டால், மனித குலத்துக்கே அது வரப்பிரசாதமாக அமையும்.

மீண்டும் வருகிறேன்..,

அன்புடன்..,

பா.வேல்முருகன்.


0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin