அண்மைய பதிவுகள்

நித்யானந்தா வீடியோவும், யூட்யூப் ஆப்ஷன்களும்.


தரமுயர்ந்த வீடியோவைக் காண :

ஆப்ஷன் 1 : யூட்யூபில் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிடுக்கும்போது அதனை, அகலமான திரையில் நீங்கள் பார்க்க விரும்பினால், அதன் லிங்க் அருகிலேயே &fmt=18 என்பதனை சேருங்கள். இது (stereo, 480 x 270 படத்தெளிவு) எனும் தெளிவில் வீடியோவைக் காண்பிக்கும். இன்னமும் அகலமான திரை வேண்டுமெனில் &fmt=22 என்பதை சேருங்கள். இது stereo, 1280 x 720 படத்தெளிவில் வீடியோவைக்காண்பிக்கும்.







ஆப்ஷன் 2 : அதே அகலமான திரையில், உங்கள் தளத்தில், நீங்கள் Embed செய்ய விரும்பினால், அந்த வீடியோவின் அருகில், Embed என்பதன் அருகில் இருக்கும் லின்க்கை காப்பி செய்து அதனுடன்
“&ap=%2526fmt%3D18″ என்பதனை இணைத்துக்கொள்ளுங்கள். (ஹைகுவாலிட்டி வீடியோ இருந்தால் மட்டுமே இது பொருந்தும்)











குறிப்பிட்ட நேரத்திலிருந்து வீடியோ தொடங்க :

ஒரு வீடியோவில், குறிப்பிட்ட நேரத்திளிருந்துதான் தேவையான படம் தொடங்குமெனில், அந்த நேரத்தைக் குறித்துக்கொண்டு, லிங்க் கின் அருகே அதனை, சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு நிமிடம், நான்கு நொடிகளுக்குப்பிறகு, தேவையான காட்சி தொடங்குகிறதெனில், லின்க்கின் அருகே #t=01m04s என குறிப்பிடலாம். அந்த நேரத்திலிருந்து காட்சி தொடங்கும்.




அதனை Embed செய்ய..,

Embed கோட் அருகே..‘&start=64′ என்பதை சேர்க்கலாம். 64 வது நொடியிலிருந்து காட்சி தொடங்கும்.




கீழே உள்ள வீடியோவில் குறிப்பிட்ட காட்சி தொடங்குவதிலிருந்து காணுங்கள்.







பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.

பின் குறிப்பு : இது நித்யானந்தா வீடியோவுக்கு மட்டுமல்ல. எல்லா வீடியோக்களுக்கும் பொருந்தும்.


நித்யானந்தாவை வச்சு விளக்கினா ஈசியா புரியுமேன்னுதான் இந்த வீடியோ. ஹி...ஹி....


1 comments:

Anonymous said...

தொழிற்நுட்பம் தவறான விஷயத்திற்கா?
நல்லவிதமாக சொல்லியிருக்கலாம்

Post a Comment

Blog Widget by LinkWithin