அண்மைய பதிவுகள்

விண்ணைத்தாண்டி வருவாயா...

கதை - படம் வெளிவந்து 3 நாட்களாகி விட்டன . நிறைய பேர் பிரித்து மேய்ந்து விட்டார்கள். கண்டிப்பாய் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். படம் பற்றி நானும் சில கருத்துக்கள் சொல்லலாம் என தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப்பதிவு.





சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர் என சிறந்தவர்களின் கூட்டு முயற்சி. நிறைய இடங்களில் கேமிரா கவிதை பாடி இருக்கிறது. ஒளிப்பதிவு அவ்வளவு அழகு.

ஆனால், இவர்களின் மொத்த "அவுட்புட்" அந்த அளவுக்கு பிரமாதம் என சொல்ல முடியவில்லை.


சிம்புவின் நடிப்பும், த்ரிஷாவின் நடிப்பும் கன கச்சிதம். ஆனால், முக்கியமாக இருக்க வேண்டிய நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங். சிம்புவின் அக்கா போல இருக்கிறார் த்ரிஷா. (வயது வித்யாசம் என்று படத்திலேயே சொன்னாலும்.) இதனாலேயே காட்சிகளில் ஒட்ட மறுக்கிறது மனசு.





த்ரிஷா நாயகி என்றால், நரேன், பிரசன்னா அல்லது மாதவன் நாயகனாக இருந்திருக்கலாம். சிம்புதான் நாயகன் என்றால், பூஜா, நயன்தாரா போன்றவர்கள் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம். குறைந்த பட்சம் த்ரிஷாவுக்கு மாடர்ன் ட்ரஸ் கூட கொடுத்திருக்கலாம். ("யாரடி நீ மோகினி"யில், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்யும் பாத்திரம், நயன்தாரா அழகாக செய்திருப்பார்.)


"கொஞ்சம் இருய்யா அவ போற வரைக்கும் கொஞ்சம் பாத்துக்குறேன்"
"அவனவன் லவ்வுக்காக அமெரிக்காவே போறான். நான் கேரளா போக மாட்டேனா ?"

"எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஜெஸ்ஸியை மட்டும் நான் ஏன் லவ் பண்ணேன் ?".

கேரளா போலீஸ் ஸ்டேஷனில் சிரித்துக்கொண்டே.. "அவ கல்யாணம் நின்னு போச்சுண்ணே"
போன்ற இடங்களில் சிம்பு சூப்பர்.
கோவில்
படத்துக்குப்பின் இவ்வளவு பாந்தமான, அமைதியான, அழகான நடிப்பை எங்கே வைத்திருந்தீர்கள் சிம்பு. அதிலும் இறுதிக்காட்சியில் ஜெஸ்ஸியைப்பற்றி ஜெஸ்ஸியிடமே சொல்லும் காட்சிகளில் கண்ணிலிருந்து வரும் கண்ணீர்.
ம்ம். பட்டயக்கிளப்பீட்டீங்க.


த்ரிஷா
- காதல் வேண்டும் என்றாலும், வீட்டுக்கு பயந்து பிடிக்காதது போல நடித்து விலகிச்செல்ல முயலும் காட்சிகளிலும், ரயில் முத்தக்காட்சியிலும், "நான் இப்பவே உன் கூட வந்துடுறேன்.." எனும்போதும்,
"அப்போ நாம ரெண்டு பெரும் ஒன்னா சேர வேணாமா ?. நீ ஏன் கூட இருக்க வேணாமா ? என கேட்கும் காட்சிகளில் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.



சிம்புவின் கூடவே கேரளா வரும் பாத்திரம். பேசும் ஒவ்வொரு வசனத்திலும் கொஞ்சம் கொஞ்சம் காமெடி.
"ரொம்ப நோன்டுராண்டா. வயிறு கொஞ்சம் எரியுது",

"கேரளால எல்லாம் கலர் கலரா லுங்கி கட்டிட்டு அடியாளுங்க மாதிரி இருப்பானுக"

"எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஜெஸ்ஸியை மட்டும் நீ ஏன்டா லவ் பண்ண ?"
" வொர்த்தா இல்லையா ?"
என்று,

கனமாகப்போகும்
இடங்களில் கொஞ்சம் சிரிப்பூட்டி கதையின் போக்கிற்கு நன்றாக உதவியிருக்கிறார். அவர் வாய்ஸ் மாடுலேஷன் கூட நன்றாய் இருக்கிறது.



த்ரிஷாவின்
அப்பாவாக ஆண்டனி. கேரளத்தந்தையாக நடிப்பதற்கு நல்ல தேர்வு. அவர் பங்கை அவரும் சிறப்பாய் செய்துள்ளார். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வரும் காட்சிகளில் கொஞ்சம் இழைப்பாற முடிகிறது.


திருமணம் நின்று போகும் நாள் இரவு சிம்பு, த்ரிஷாவின் இரவு நேர சந்திப்புக்காட்சியும் அதனைத்தொடர்ந்து வரும் பாடலும் ரொம்ப அழகு. காட்சியமைப்பு கவிதை.



ஆனால்
, த்ரிஷாவையும், சிம்புவையும் மட்டுமே திரையில் அதிக நேரம் பார்ப்பதால் கொஞ்சம் அலுப்பு ஏற்படுவது உண்மை. அடிக்கடி கட்டிபிடிக்கும் காட்சிகள் கொஞ்சம் அழுத்தம் குறைக்கிறது.


பாடல் வரிகளில் தாமரையின் ஆதிக்கம் தெரிகிறது. நல்ல வரிகள். அனால் மூன்று பாடல்களைத்தவிர மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையில், முந்தைய படங்களில் கொஞ்சம் கிளாசிகல் கலந்து இருக்கும். இந்தப்படத்தில் அது கொஞ்சம் குறைவுதான். ரீ ரெகார்டிங்கில் சில இடங்களில் ராப் இசை. புதியதாய் முயற்சித்துள்ளார் போல தெரிகிறது. ஆனால் அந்த இடங்களில் கொஞ்சம் நுட்பமான மெலிதான இசை நன்றாய் இருந்திருக்குமோ.? மற்ற இடங்களில் இசைப்ரவாகம் செய்துள்ளார். அவரே பாடியுள்ள பாடலும் இசையும் கலக்கல்.


இயக்கம் கெளதம் மேனன்.

கெளதம்
சார்... நாயகி நடந்து போவதை பின்னாலிருந்து ஸ்லோ மோஷனில் பார்த்து எங்களுக்கு திகட்டி விட்டது. உங்களின் பல படங்களின் காட்சிகளை மறுபடியும் பார்ப்பது போல இருக்கிறது.வேறு ஏதாவது புதியதாய் காட்டுங்களேன்.

மொத்தத்தில், காதலித்துக்கொண்டிருப்பவர்களும், காதலிக்க நினைப்பவர்களும், பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய படம் மற்றும் பாடம். (அவர்களுக்குத்தான் பிடிக்கும்).


மற்ற
சில பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :


ஒரு
படம் உங்களுக்கு பிடித்து விட்டதாலேயே, மற்றவர்களுக்கு ரசனை இல்லை என்றும், சில்லரைப்பதிவர்கள் என்றும் விமர்சிப்பதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். பணம் கொடுத்து படம் பார்க்க சென்ற அனைவருக்கும் படத்தைப்பற்றிப்பேச உரிமை இருக்கிறது. அதைக்கொஞ்சம் புரிந்துகொண்டு வார்த்தைகளில் கண்ணியம் கொண்டுவரப் பாருங்கள்.


அன்புடன்..,






0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin