அண்மைய பதிவுகள்

உங்கள் வலைதளத்தை மொபைலில் வெளியிட....



நம் தமிழ் நாட்டில் இன்னும் மொபைல் இன்டர்நெட் அதிக புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், நமது தளத்திற்கு மொபைல் வெர்ஷன் வெளியிடுவது எவ்வளவு சந்தோசமான விஷயம். அதுவும் சில எளிய வழிமுறைகள் மூலம்.

http://www.mobify.me தளத்திற்கு செல்லுங்கள்.






எளிய ரெஜிஸ்ட்ரேஷனுக்கு பிறகு வரும் விண்டோவில், உங்கள் தளத்தின் முகவரி கொடுங்கள்.

பின் லோட் ஆகும் உங்கள் தளத்தில், மொபைல் வெர்ஷனில் என்னென்ன தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.







அதன்
பின் டிசைன் ஆப்ஷன் சென்று, பல்வேறு மொபைல் டிவைஸ்களில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதைப்பாருங்கள். பின், ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் செய்து கொள்ளுங்கள்.

இறுதியாக லாஞ்ச என்பதை தேர்வு செய்யுங்கள். உங்கள் மொபைல் தளத்திற்கு ஒரு பெயர் கிடைக்கும்.






அதன்
கீழே வரும் Code - ஐ காப்பி செய்து வழக்கம் போல உங்கள் ப்ளாகின் dashboard --> Edit HTML சென்று

<head>


என்பதற்கு மேலே பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான், உங்கள் மொபைலில் இனி உங்கள் தளத்தை பார்வையிடலாம்.

என் தளத்தை மொபைலில் பார்வையிட,

http://kanakalam.mobify.me

எனும் முகவரிக்கு செல்லுங்கள்.



மீண்டும் வருவேன்.

அன்புடன்..,

வேல்முருகன்.



*** எவ்வளவோ பண்றோம்.. ஒரு வோட்டுப்போட மாட்டோமா? ***




3 comments:

ஸ்ரீராம். said...

எத்தனை முன்னேற்றங்கள்...இல்லை?

நீங்கள் சொன்ன சோப் விளம்பரப் போரில் தடை கிடைத்து விட்டது போலேருக்கே...(பாருங்க..நானும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்..).

பா.வேல்முருகன் said...

வாங்க ஸ்ரீராம். பரவால்ல. நீங்களும் நம்ம வழிக்கு வந்துட்டீங்க.

உங்களின் மதிப்பு மிக்க பின்னூட்டத்திற்கு நன்றி.

selvangood said...

நண்பரே ,
தங்களின் வலை தளம் மிகவும் அருமையாய் உள்ளது .
இன்று நீங்கள் பதிவிட்ட மொபைல் மென்பொருள்கள் மிகவும் பயன் உள்ளவை.
நன்றி.

Post a Comment

Blog Widget by LinkWithin