அண்மைய பதிவுகள்

மேகக்கணினியம், இணைய குற்றம் (Cybercrime) புரிவோரின் அடுத்த இலக்கா ?

 
கணினி உலகில் அடுத்த தலைமுறைக்கான, மேகக்கணினியம் எனப்படும் நுட்பம், இணைய குற்றம் புரிவோரின் அடுத்த இலக்காக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.




இணைய குற்றங்கள் எனப்படுபவை, இணையத்தின் மூலம் பிறரின் வங்கிக்கணக்கை திருடுதல், பிற நிறுவன தகவல்களை திருடுதல், காப்புரிமை பெறப்பட்ட இணையத்தகவல்களை, அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துதல், இன்னும் பல.


ஒரு வங்கியின், தளத்தைப்போலவே, ஒரு போலியான தளம் வடிவமைத்து, அந்த வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கை திருடுதல், வாங்கி அனுப்புவதைப்போலவே போலியான மின்னஞ்சல்கள் அனுப்பி, பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவற்றை அபகரித்தல் போன்றவையும்
இணைய குற்றங்கள்தான்.

பிறரின் கணினிகளில் இருக்கும் தகவல்களைத்திருட,  கணினி நச்சு நிரல்கள் (Computer viruses), தீங்கு நிரல்கள் (Malwares) போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் இணையத்திருடர்கள்.


மேகக்கணினியம் இன்னும் பிரபலமடையும் காலத்தில், இணையம் மூலமாக பல பரிவர்த்தனைகள் நடக்கும். நிறுவனங்களின், மிக முக்கியமான தகவல்களும் இணையத்தில் பரிமாற்றப்படும். அந்த நேரத்தில், இணைய குற்றங்கள், மேகக்கணினியத்துக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

32-bit முகவரியுடன் செயல்படும் IPv4 எனப்படும் இணைய தொடர்பு வரைமுறையில் , (internet Protocol version 4) அதிக பாதுகாப்பு இல்லை எனவும், 128-bit முகவரியுடன் செயல்படக்கூடிய IPv6 அதிகம் பயன்படுத்தத்தொடங்கும்போது, பாதுகாப்பை அதிகரிக்கலாம் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin